இனி புது வாகனங்கள் எல்லாம் இந்த செக்கை கடந்து தான் வரனும்! எல்லாமே வேற லெவல்!
இந்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் இந்தியாவில் தயாரிக்கப்படும் பிளக்ஸ் ஃப்யூயல் வாகனங்களுக்கான மாசுக்கட்டுப்பாடு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி பை ஃப்யூயல் மற்றும் பிளக்ஸ் ஃபியூயல் வாகனங்கள் இனி குறிப்பிட்ட மாசு கட்டுப்பாட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
இந்தியாவில் மாசு இல்லாத போக்குவரத்து முறையை கொண்டு வருவதற்காக வாகனங்களுக்கான மாசு கட்டுப்பாடுகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது பிளக்ஸ் ஃப்யூயல் வாகனங்களுக்கான மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து அமைச்சகம் சார்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பின்படி பிஎஸ் 6 கட்டுப்பாட்டின் கீழ் வாகனங்கள் ஒப்புதல் பெற வேண்டும் என்றால் சில முக்கியமான சோதனை முறைகளை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. அதன்படி பை ஃப்யூயல் மற்றும் பிளக்ஸ் ஃபியூயல் ஆப்ஷன் கொண்ட வாகனங்கள் கேஸ் மற்றும் பர்டிகுலேட் பொல்யூஷன் சோதனைகளை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. அதேபோல ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் வாகனங்கள் நைட்ரஜன் ஆக்ஸைடு சோதனையை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
7சதவீதத்திற்கும் மேல் பயோடீசல் பிளான் செய்யப்பட்ட எரிபொருளை பயன்படுத்தும் வாகனங்கள் பி7 கட்டுப்பாடுகளின் கீழ் குறிப்பிட்ட கலவை காண சோதனைகளை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதியின் கீழ் ஹைபிரிட் உள்ளிட்ட பாசிட்டிவ் இக்னீசியன் இன்ஜின் கொண்ட வாகனங்கள் எல்லாம் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்த சோதனையில் சிறிய அளவிலான மாசு துகள் மனித நுரையீரலை பாதிக்கும் வகையிலான துகள்கள் எல்லாம் கட்டுப்படுத்தப்படுகிறதா என்பது சோதிக்கப்படும்.

ஃபிளக்ஸ் ஃப்யூயல் என்றால் இன்டர்னல் கம்பஷஜ் இன்ஜின் கொண்ட வாகனங்கள் பல்வேறு வகையிலான எரிபொருள் கலவையின் கீழ் இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டால் அது ஃபிளக்ஸ் ஃப்யூயல் வாகனங்கள் என என்று அழைக்கப்படும். குறிப்பாக பெட்ரோல் அல்லது டீசல் உடன் அதிகமான எத்தனாலை கலப்பதன் மூலம் கிடைக்கும் எரிபொருளை வைத்து இயங்கும் வாகனங்கள் ஃபிளக்ஸ் ஃப்யூயல் வாகனங்கள் என அழைக்கப்படுகிறது.
மத்திய அரசு 20சதவீத எத்தனாலை 2025ம் ஆண்டுக்குள் பெட்ரோலுடன் கலப்படம் செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளது. தற்போது பல்வேறு பெட்ரோல் நிறுவனங்களில் இ20 என்ற 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல்கள் விற்பனையாகி வருகின்றன. எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் மூலம் மாசு ஏற்படும் அளவு வெகுவாக குறைகிறது. இதனால் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களும் குறைவான மாசுவை வெளியிடும் வாகனங்களாக மாற்ற முடியும் என அரசு திட்டமிட்டு இதை செய்து வருகிறது.

மத்திய அரசின் இந்த புதிய வழிமுறைக்காக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எத்தனால் கலக்கப்பட்ட வாகனங்களை பிரத்தியேகமாக தயார் செய்ய முடிவு செய்துவிட்டனர். அதன்படி எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளை கொண்டு இயங்கினாலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் இயங்கும் இன்ஜினை தயார் செய்து அதை வாகனங்களில் பொருத்தி தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்த வேண்டி விட்டனர். இந்த வாகனங்களுக்கான மாசு கட்டுப்பாட்டு சோதனைகளை தான் தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டு எத்தனால் கலக்கப்பட்ட எரிபொருளை பயன்படுத்தும் வாகனங்கள் விற்பனைக்கு வரும்போது அதிலிருந்து வெளியேறும் மாசு அளவு மிக குறைவாக இருக்கும். இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என்பதால் மத்திய அரசு இந்த புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட இருள் பொருள்கள் மூலம் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு இவ்வாறான சோதனை நடைமுறைகள் செயல்பாட்டில் உள்ளன.
வாகனங்களுக்கான நடைமுறை இதுவரை சட்டரீதியாக செயல்பாட்டில் இல்லாத நிலையில் தற்போதைய அவை சட்டரீதியாக கொண்டுவர இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. ஆனால் இதற்கு முன்னரும் இது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டு தான் ஃபிளக்ஸ் ஜப்யூயல் வாகனங்களும் வெளியில் வந்து கொண்டிருந்தது. மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு என்பது சட்ட ரீதியிலான அறிவிப்பு மட்டுமே.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது பல்வேறு விதமான எரிபொருட்களை பயன்படுத்தி இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிக அளவில் விற்பனையானாலும் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் வாகனங்கள் கணிசமான அளவு விற்பனையாகும் என்பதால் இந்த சோதனையை நடைமுறையை மத்திய அரசு சட்டமாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications









