சென்னை வாசிகளே! தண்ணீரில் மிதக்கும் கார் வந்துவிட்டது! இதுல இவ்வளவு வசதிகள் இருக்குதா?

சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் போது வாகனங்கள் தண்ணீரில் மூழ்குவது மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. இதற்காக பல பல்வேறு யுக்திகளை பின்பற்றி வரும் நிலையில் இப்படியாக வெள்ளம் வந்தாலும் அதில் வாகனம் மூழ்காமல் மிதந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு வாகனம் தான் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பலரை ஆச்சரியப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பாரிஸ் நாட்டில் தற்போது மோட்டார் கண்காட்சி நடந்து வருகிறது. இந்த கண்காட்சியில் பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களை காட்சிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் சமீபத்தில் மழை காரணமாக பலர் தங்கள் வாகனங்களை மேம்பாலங்களில் பார்க் செய்த நிகழ்ச்சிகளை பார்த்திருந்தோம். இதற்கு முன்னர் மழை வெள்ளம் வந்தபோது கார்கள் தண்ணீரில் மூழ்கி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய சம்பவங்களும் நடந்துள்ளன.

floating car in paris auto show

இப்படியாக மழை வரும்போது அதில் கார் மூழ்காமல் மிதந்தால் எப்படி இருக்கும் என்று யோசனை கூட பலருக்கும் வந்திருக்கலாம். அப்படி ஒரு கார் தற்போது பாரிஸில் நடந்து வரும் மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த எக்ஸ்பெங் என்ற நிறுவனம் தனது பி எஸ் 7 பிளஸ் என்ற செடான் இவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் தான் உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு கொண்ட காராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த பி7 பிஸ் செடான் இவி கார் கழுகு கண் பார்வை கொண்ட புதிய தொழிற்நுட்பத்தை கொண்ட காராக இருக்கிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் நீண்ட தூரத்தில் இருக்கும் விஷயங்களையும் மிகத் துல்லியமாக கண்காணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. இரண்டு கால்பந்து மைதானம் அளவுக்கு பெரிய அளவிலான தூரத்தை மிக துல்லியமாக கண்காணிக்கும் கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் டிரைவர்களுக்கு முன்கூட்டியே வரும் ஆபத்துகளை உணர்ந்து எச்சரிக்கும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

floating car in paris auto show

இதே கண்காட்சியில் பிஓய்டி நிறுவனம் யங்குவாங் ஹைபிரிட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் தண்ணீரில் மிதக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் பார்க் செய்திருக்கும் இடத்தில் திடீரென வெள்ளம் வந்தால், இந்த கார் தொடர்ந்து 30 நிமிடங்கள் தண்ணீரில் மிதக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளம் வந்தவுடன் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல முடியும்.

மேலும் தண்ணீரில் மிதக்கும் போது இது தன்னைத் தானே 360 டிகிரி வரை சுற்றி கண்காணிக்கும் வகையிலும் இருக்கிறது. இதனால் இதை சுற்றி வரும் ஆபத்துகளை இந்த இந்த காரால் கண்காணிக்க முடியும். மேலும் இந்த காரில் சேட்டிலைட் போன் மற்றும் டுரோன் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

floating car in paris auto show

நீங்கள் ஏதாவது பாலத்தை கடந்து செல்லும்போது வெள்ளம் அடித்து சென்று விட்டால் கார் வெள்ளத்தில் மூழ்காமல் மிதக்கும் அந்த நேரத்தில் நீங்கள் காரில் உள்ள சேட்டிலைட் போனை பயன்படுத்தி அருகில் உள்ள மீட்பு மையத்திற்கு இந்த தகவலை தெரிவிக்க முடியும். இதனால் நீங்கள் உங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

அப்படியாக சேட்டிலைட் போனும் இல்லாத நேரத்தில் நீங்கள் காருக்குள் இருக்கும் டுரோனை பயன்படுத்தி டுரோனை காரில் இருந்து பறக்க விட்டு அருகில் உள்ள இடத்திற்கு தகவலை தெரிவிப்பதற்காக அனுப்பி வைக்க முடியும். இதுவும் மற்ற எந்த காரிலும் இல்லாத வசதியாக இருக்கிறது. காரில் உள்ள பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.

சென்னை போன்ற அடிக்கடி வெள்ளம் பாதிக்கும் பகுதியில் வாகனம் வைத்திருப்பவர்கள் இந்த வெள்ளம் காரணமாக தங்கள் வாகனங்களை பாதுகாப்பதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த மாதிரியான வசதிகள் எல்லாம் நிச்சயம் உதவியாக இருக்கும் இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த வசதியை தங்கள் காரில் கொண்டு வந்தால் இதன் காரணமாகவே இதன் விற்பனை அதிகமாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்படியாக வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகள் அதிகமாக இருக்கும் நிலையில், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் வாகனங்களில் இந்த வசதிகளை பொருத்தினால் நிச்சயம் வரவேற்கத்தக்கதாக இருக்கும். வெளிநாடுகளில் உள்ள கார்களில் இந்த வசதிகள் கொண்டு வந்துள்ளது. நிச்சயம் ஆச்சரியமான விஷயம் தான்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 17, 2024, 12:47 [IST]
English summary
Floating car paris auto show 2024 flood demo
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X