புகைக்கு பின்னாடி இருப்பதால லாரினு நினைச்சுக்காதீங்க.. மஹிந்திரா தாருக்கு போட்டியா 5கதவுகளுடன் வருகிறது கூர்கா

ஃபோர்ஸ் (Force) நிறுவனம் இந்திய சந்தையில் அதன் கூர்கா எஸ்யூவி (SUV) காரின் 3 கதவுகள் மற்றும் 5 கதவுகள் வெர்சனை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் வருகையை உறுதிப்படுத்தும் விதமாகவும், இந்தியர்களைக் கவரும் பொருட்டும் இந்த புதிய வெர்சனான 5 கதவுகள் கொண்ட கூர்காவின் டீசர் படத்தை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் மஹிந்திரா தார் (Mahindra Thar) மாடலுக்கு போட்டியாக விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களில் கூர்கா (Gurkha SUV)வும் ஒன்றாகும். இந்த கார் மாடலின் ஐந்து கதவுகள் கொண்ட வெர்ஷனையே ஃபோர்ஸ் நிறுவனம் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

Force gurkha 5 door teaser front

அத்துடன், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் 3 டோர்கள் கொண்ட கூர்காவின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனையும் அது விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இவற்றின் வருகையை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே அந்நிறுவனம் இந்த இரண்டு வெர்ஷன்களின் டீசர் படத்தையும் வெளியிட்டு இருக்கின்றது. இந்தியர்களையும், எஸ்யூவி கார் பிரியர்களையும், குறிப்பாக, தார் கார் காதலர்களின் கவனத்தையும் ஈர்க்கும் பொருட்டு டீசரை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது.

அந்த டீசரில் புதிய 5 கதவுகள் கொண்ட கூர்காவின் ஹெட்லைட், குரோமால் அலங்கரிக்கப்பட்ட கூர்கா எனும் பேட்ஜ், வீல்கள், முகப்பு பகுதி, ரியர் ஸ்டாப் லைட் மற்றும் பக்கவாட்டு பகுதி என பலவற்றை அங்கங்கமாக ஃபோர்ஸ் காண்பித்து இருக்கின்றது. இந்த பாகங்கள் இந்த அளவிற்கு தெளிவாக டீசர் வாயிலாக வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.

Force gurkha 5 door teaser side view

5 கதவுகள் கொண்ட கூர்கா இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. இதன் வருகை விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் 5 கதவுகள் கொண்ட தார் கார் மாடலுக்கும், மாருதி சுஸுகி ஜிம்னிக்கும் போட்டியாக அமைய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆமாங்க, மஹிந்திரா நிறுவனமும் 5 கதவுகள் கொண்ட தார் காரை விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஆகஸ்டு 15இல் இது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே இதற்கு போட்டியாக ஃபோர்ஸ் அதன் 5 டோர்கள் கொண்ட கூர்காவைக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.

Force gurkha 3 door 5 door teaser

இந்த காரில் சிறப்பம்சங்கள் மற்றும் பிரீமியம் அம்சங்களும் மிக மிக தாராளமாக இடம் பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகின்றது. அந்தவைகயில், காருக்குள் இருந்த படியே பின் பக்கத்தை பார்க்க உதவும் கண்ணாடிகளை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, முன் பக்க பயணிகளுக்கான ஆர்ம் ரெஸ்ட், முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்டவை இந்த காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதவிர, 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்டுகள், ப்ளூடூத் இணைப்பு வசதி, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதி உள்ளிட்டவையும் இந்த காரில் இடம் பெற இருக்கின்றன. மேலும், எச்விஏசி கன்ட்ரோல்கள், 12 வோல்ட் சாக்கெட் மற்றும் சென்ட்ரல் லாக்கி சிஸ்டம் உள்ளிட்டவையும் புதிய ஃபோர்ஸ் கூர்கா கார்களில் இடம் பெற உள்ளன.

எஞ்சினை பொருத்த வரை 2.6 லிட்டர் சிஆர் டர்போ டீசல் மோட்டாரே எதிர்பார்க்கப்படுகின்றது. இது அனைத்து விதமான சாலைகளிலும் மிக சிறந்த இயக்க அனுபவத்தை வழங்கும். இதன் எஞ்சின் மட்டுமில்லைங்க, இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் அனைத்து அம்சங்களும் இந்தியாவின் கரடு-முரடான சாலைகளுக்கு ஏற்றதாக இருக்கும் என கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஃபோர்ஸ் கூர்கா கார் பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. விரைவில் அனைத்து விபரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், புதிய கூர்காவின் வருகை நாள் பற்றிய விபரத்தையும் நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 13, 2024, 12:15 [IST]
English summary
Force gurkha suv comes with 5 doors here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X