சென்னைக்கு மீண்டும் வருகிறதா ஃபோர்டு? ஒரு மெயிலில் இவ்வளவு சூசகமா சொல்லியிருக்காங்களே!

ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் மீண்டும் தனது கார் தயாரிப்பை துவங்கப் போவதாக வெளியான தகவலுக்கு பதிலளிக்கும் வகையில் அந்நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட மெயில் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இது குறித்து சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர். மீண்டும் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவிற்கு வருமா? வராதா? என்ற தகவலை காணலாம் வாருங்கள்.

ஃபோர்டு நிறுவனம் நீண்ட நாட்கள் ஆண்டுகளாக இந்தியாவில் வாகன தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது இந்நிறுவனம் தமிழகத்தில் சென்னை பகுதியில் ஆலையை அமைத்து அங்கு கார்களை உற்பத்தி செய்து வந்தன. இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஃபோர்டு நிறுவனம் இந்தியாவிலிருந்து வெளியேறப் போவதாக அறிவித்தது. அதன்படி அந்நிறுவனம் இந்தியாவில் தனது ஆலைகளை எல்லாம் விட்டுவிட்டு இந்தியாவில் இருந்து தனது தொழிலை நிறுத்தி விட்டு வெளியேறியது.

ford back to india

இந்நிலையில் ஃபோர்டு நிறுவனத்தின் ஆலைகளை யார் கைப்பற்றுவது என்ற பேச்சு நீண்ட நாட்களாக இருந்து வந்தது. குஜராத் மாநிலத்தில் அந்நிறுவனம் சொந்தமாக வைத்திருந்த ஆனந்த் என்ற பகுதியில் உள்ள ஆலையை டாடா நிறுவனம் கைப்பற்றியது. தற்போது டாடா நிறுவனம் அந்த ஆலையை மீண்டும் புதுப்பித்து தனது கார்களை தயாரித்து வரும் ஆலையாக பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஃபோர்டு நிறுவனம் சென்னையில் ஒரு ஆலையை நடத்தி வந்தது.

இந்த ஆலையே அந்நிறுவனம் விற்பனை செய்ய பல்வேறு முயற்சிகளை செய்தது. இறுதியாக ஜேஎஸ்டபிள்யூ என்ற நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க இந்த ஆலையை வாங்கப் போவதாக பேச்சுக்கள் எழுந்து வந்தன. கிட்டத்தட்ட இதற்கான முடிவுகள் எட்டப் போகும் நிலையில் இந்த முடிவை திடீரென ஃபோர்டு நிறுவனம் ரத்து செய்ததாக கூறப்படுகிறது. சென்னை ஆலையை வாங்கப் போவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

ford back to india

இந்நிலையில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்தியாவில் தனது தொழிலை துவங்குவதற்காக ஆயத்தம் செய்து வருகிறது. மீண்டும் இந்நிறுவனம் இந்தியாவில் கார்களை தயாரித்து விற்பனை செய்யும் என செய்திகள் எல்லாம் பரவின. இதற்கு தகுந்தார் போல் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஃபோர்டு நிறுவனம் என்டெவர் காரின் காப்புரிமைக்காக இந்தியாவில் விண்ணப்பம் செய்திருந்தது.

இந்நிறுவனம் சர்வதேச அளவில் தனது என்டெவர் காரை அப்டேட் செய்திருந்த நிலையில் அந்த அப்டேட் செய்யப்பட்ட வடிவமைப்பிற்கான காப்புரிமையை பெறுவதற்காக இந்தியாவில் விண்ணப்பம் செய்திருந்தது. இதன் மூலம் சமூக வலைதளம் மற்றும் இணையதளங்களில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்தியாவிற்கு வருவது உறுதி முதன்முறையாக தனது ஃபோர்டு காரை இந்தியாவில் களம் இறக்கும் என பேச்சு எழுந்து வருகிறது.

ford back to india

ஃபோர்டு நிறுவனத்தின் காரை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர் ஒருவர் நிறுவனத்திற்கு இமெயில் மூலம் இப்படியான செய்திகள் பரவி வருகிறதே இதனால் இந்தியாவிற்கு போர்டு நிறுவனம் வருவதற்கான வாய்ப்புகள் ஏதாவது இருக்கிறதா? அதற்கான முயற்சியை அந்நிறுவனம் எடுத்து வருகிறதா? என்ற கேள்வியை எழுப்பி இருந்தார். அவருக்கு ஃபோர்டு நிறுவனத்திலிருந்து பதில் ஒன்றும் கிடைத்துள்ளது.

அதன்படி ஃபோர்டு நிறுவனம் தற்போது அறிமுகம் ஆவதற்கான எந்த ஒரு சூழ்நிலையிலும் இல்லை என தெரிவித்துள்ளனர். மேலும் இதற்காக பொறுத்துக் கொள்ளும் படியும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பின் மூலம் ஃபோர்டு நிறுவனம் மிகத் தெளிவாக தான் வருகிறோம், வரவில்லை என்பதை கூறாமல் மறைமுகமாக தற்போது அறிமுகமாகும் சூழ்நிலை இல்லை என்று மட்டுமே பதில் அளித்துள்ளனர்.

இதனால் இந்நிறுவனம் இந்தியாவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது இதற்கான வேலைகள் ஒருவேளை
துவங்கியிருக்கலாம் தற்போது அறிமுகம் குறித்த எந்த ஒரு தகவலும் இல்லை என்பதை மட்டுமே இவர்கள் தெளிவாக சொல்லியுள்ளனர். ஆனால் மீண்டும் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவிற்கு வராது என அவர்கள் காரணம் கொண்டும் சொல்லவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிக பெரிய அளவில் வளர்ந்து வரும் நாடாக மாறி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் தனது தொழிலை துவங்குவது நிறுவனத்திற்கு நல்ல விஷயமாகும். ஃபோர்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் ஏற்கனவே நல்ல பேரில் இருப்பதால் மீண்டும் தரமான கார்களை களமிறக்குதவன் மூலம் நல்ல விற்பனையை பெற முடியும்.

More from DriveSpark

Article Published On: Monday, January 22, 2024, 17:18 [IST]
English summary
Ford back to india customer response plan
மேலும்... #ஃபோர்டு #ford
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X