சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!

ஃபோர்டு நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து வெளியேறிய நிலையில், மீண்டும் இந்நிறுவனம் இந்தியாவில் தொழில் துவங்க வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஆலையில் தற்போது அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் விசிட் அடித்துள்ளனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஃபோர்டு நிறுவனம் உலக அரங்கில் மிக முக்கியமான வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது. இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் ஏற்பட்டதால் உலகில் உள்ள அனைத்து தொழில்களும் மிகப்பெரிய சரிவை சந்தித்தன.

ford chennai plant

இந்நிலையில் இந்த நஷ்டத்தில் இருந்து மீள முடியாமல் ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியேறப் போவதாக அறிவித்தது. தனது தயாரிக்கும் முழுவதையும் நிறுத்தி இந்தியாவில் இருந்து அந்நிறுவனம் வெளியேறியது. இந்நிலையில் ஃபோர்டு நிறுவனத்தின் வாகனங்களை இனி இந்தியாவில் இருந்து வாங்க வேண்டும் என்றால் இறக்குமதி செய்துதான் வாங்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் சென்னையில் ஒரு ஆலையையும், குஜராத் மாநிலத்தில் ஒரு ஆலையையும் கட்டமைத்து அங்கு தான் தனது வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வந்தன. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள ஆலையை டாடா நிறுவனத்திற்கு நிறுவனம் விற்பனை செய்து விட்டது. இந்நிறுவனம் நடத்தி வந்த ஆலையை கைப்பற்றிய டாடா நிறுவனம் தற்போது அங்கு வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர துவங்கி விட்டது.

ford chennai plant

இந்நிலையில் ஃபோர்டு நிறுவனம் சென்னையில் உள்ள தனது ஆலையையும் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்துடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் கடைசி நேரத்தில் இந்த ஆலையை விற்பனை செய்வதை ஃபோர்டு நிறுவனம் கைவிட்டு விட்டது. இந்நிலையில் ஃபோர்டு நிறுவனமே மீண்டும் இந்தியாவிற்குள் வருவதற்காக இந்த ஆலையை பயன்படுத்த போவதாக பேச்சுகள் எழுந்தது.

ஆனால் அதிகாரப்பூர்வமாக ஃபோர்டு நிறுவனம் இதுவரை அப்படியான எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் தங்கள் புதிய கார்களுக்கான காப்புரிமைக்காக ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் விண்ணப்பித்துள்ளது. இதை பார்த்தவுடன் நிச்சயம் இந்தியாவில் ஃபோர்டு மீண்டும் வந்து வாகன தயாரிப்பில் ஈடுபடும் என்ற பேச்சு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் நம்பப்பட்டது.

ford chennai plant

ஆனால் ஃபோர்டு நிறுவனம் இதை உறுதி செய்யாத நிலையில், தற்போது புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. சென்னையில் உள்ள போர்ட் நிறுவனத்தின் நாளைக்கு தற்போது அந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் வந்து சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் வந்து ஆலையின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து சென்றதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் இந்தியாவிற்குள் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக மீண்டும் பேச்சு எழுந்துள்ளது.

இது மட்டுமல்லாமல் சென்னை ஆலையே பார்க்க வந்த ஃபோர்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் பல தமிழக அரசின் அதிகாரிகளையும் பார்த்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் தமிழகத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு வரலாம் என தெரிகிறது. இது குறித்து பேச்சு வார்த்தைகள் நடந்து வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிறுவனம் மீண்டும் சென்னை மறைமலை நகரில் உள்ள தனது தயாரிப்பு ஆலையை துவங்கும் பட்சத்தில் அந்த ஆலையில் சுமார் 2500 முதல் 3000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னையில் வேலை வாய்ப்பு அதிகரிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

இது மட்டுமல்லாமல் இந்நிறுவனம் இங்கு ஆலைய துவங்கினால் முதல் காராக தனது என்டேவர் காரையும் மற்றும் புதிய எஸ்யூவி காரையும் இந்தியாவில் களம் இறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலையில் ஆண்டுக்கு 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான கார்களையும் 3.5 லட்சம் இன்ஜின்களையும் தயாரிக்கும் திறன் கொண்டதாக ஆலை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோர்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மீண்டும் இந்தியாவிற்கு வரப்போவதை அறிவிக்கவில்லை என்றாலும், அந்நிறுவனங்களில் நடவடிக்கைகளை பார்க்கும்போது இந்நிறுவனம் மீண்டும் இந்தியாவில் தனது ஆலையை துவங்குவதற்கான திட்டத்தை வைத்திருப்பதாகவே தெரிகிறது. இந்நிறுவனம் இந்தியாவிற்குள் மீண்டும் களம் இறங்கினால் பல பெரிய நிறுவனங்களுக்கு கடும் போட்டியை தரும் வகையில் தனது தயாரிப்புகளை வெளியிடும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 28, 2024, 11:45 [IST]
English summary
Ford chennai plant may reopen officials visit
மேலும்... #ஃபோர்டு #ford
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X