இந்தியாவில் ஹம்மர் காரை தயாரிக்கிறாங்களா! உங்க கிட்ட ஃபோர்டு கார் இருந்தா நீங்களும் இத ரெடி பண்ணலாம்!

உலகத்தின் பெரும்பாலான நாடுகளில ஹம்மர் எச்2 (Hummer H2) காரின் தயாரிப்பு நிறுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஹம்மர் எச்2 எஸ்யூவி கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது. மேலும், யுட்யூபிலும் அதுபற்றிய வீடியோ வெளியாகி இருக்கின்றது. இது எப்படி சாத்தியம் என்றே பலரும் குழும்பி போயுள்ளனர். இந்த தகவலை நாங்கள் இங்கே டீ-கோட் செய்துள்ளோம். ஹம்மர் எச்2 என கூறப்படும் இந்த கார் உண்மையில் ஹம்மர் காரே இல்லை. அது ஹம்மர் காரைப் போல பிரதிபலிக்கும் வேறு ஒரு கார் மாடல் ஆகும்.

முதல் தலைமுறை ஃபோர்டு என்டீயோவர் (Ford Endeavour) காரையே ஹம்மர் எச்2 எஸ்யூவி கார் மாடலாக மாற்றி இருக்கின்றனர். இந்த காரின் வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் இதுபோன்று வாகனங்கள் மாற்றப்படுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுமாதிரியான நிகழ்வுகள் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன.

Ford endeavour transformed into hummer h2

அந்தவகையில், சமீபத்தில்கூட ஹோண்டா சிவிக் காரை ஓர் இளைஞர் லம்போர்கினி அவென்டேட்டர் கார் மாடலாக மாற்றி இருந்தார். இதுபோல் பல்வேறு வாகன மாடிஃபிகேஷன் நிகழ்வுகள் நம் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. ஆகையால், இந்த கார் மாற்றம் பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.

அதேவேளையில், உண்மையில் இது ஹம்மர் கார்தான் என நினைக்கும் அளவிற்கு மாற்றப்பட்டு இருப்பது மிகப் பெரிய ஆச்சரியத்தை கவரும் விஷயமாக அமைந்திருக்கின்றது. ஓர் மினி லாரி போன்ற அமைப்பையே ஹம்மர் எச்2 கொண்டிருக்கும். இந்த தோற்றம் அப்படியே ஃபோர்டு என்டீயோவர் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

'ரேப்டார் பாடி கிட்' (Raptor body kit) எனும் அணிகலன்களைக் கொண்டே ஃபோர்டு என்டீயோவரை ஹம்மராக மாற்றி இருக்கின்றனர். கிரில், ஹெட்லைட், பம்பர், பான்னெட், விண்ட்ஸ்கிரீன், ஃபெண்டர்கள், வீல் ஆர்ச்சுகள் மற்றும் டயர்கள் ஆகியவற்றைக் கொண்டதே இந்த ரேப்டார் பாடி கிட் ஆகும்.

இவை அனைத்தும் ஹம்மர் எச்2-வை பிரதிபலிக்கக் கூடியவை ஆகும். வெளிப்புறத்திற்கு மட்டுமல்ல உட்பக்கத்திற்கும் ஹம்மர் எச்2 தோற்றத்தை வழங்குகின்ற மாதிரியான மாற்றத்தை செய்திருக்கின்றனர். இருக்கை, டேஷ்போர்டு மற்றும் ஸ்டியரிங் வீல் போன்றவற்றை அவர்கள் மாற்றி இருக்கின்றனர். இதுதவிர, ஹம்மர் எச்2 காரின் அகலத்திற்கு இணையானதாக என்டீயோவரை மாற்ற அதன் உடல் அகலத்தையும் கூட்டி இருக்கின்றனர்.

இதுபோன்ற பல்வேறு மாற்றங்களை இந்த காரை ஹம்மராக பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் செய்திருக்கின்றனர். வீல்கள் மற்றும் டயர்கள் விஷயத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், 18 அலாய் வீல் மற்றும் 35 அங்குல எம்டி டயரே இதில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது.

இதைத்தொடர்ந்து காரின் ஏசி சிஸ்டம், டிரைவருக்கான ஆர்ம் ரெஸ்ட், ஆம்பியன்ட் லைட் உள்ளிட்டவையும் இந்த காரில் மாற்றப்பட்டு இருக்கின்றன. காருக்கான ஒரு சில பாகங்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ததாகக் கூறப்படுகின்றது. இந்த ஒட்டுமொத்த மாற்றத்திற்கும் அவர்கள் ரூ. 18 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை செலவு செய்திருப்பதாக தெரிவிக்கின்றனர். இது மிகவும் அதிக தொகை என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆனால், போலீஸார் இந்த தொகையை எல்லாம் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்கள் நேரம் கிடைத்தால் உடனே அந்த காரை பறிமுதல் செய்துவிடுவார்கள். ஆம், இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி வாகன மாடிஃபிகேஷன் விதிமீறல் செயல் ஆகும். உண்மைத் தன்மை மாறும் அளவிற்கு செய்யப்படும் மாற்றங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில் கேரளா உயர்நீதிமன்றம்கூட இதுமாதிரியான செயல்களுக்கு மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதேமாதிரியான நடவடிக்கையே நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பல லட்சம் ரூபாயை செலவிட்டு காரை மாற்றி இருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 6, 2024, 14:29 [IST]
English summary
Ford endeavour converted into an iconic hummer h2 suv
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+