சென்னை ஃபேக்ட்ரியை என்ன பண்ண போகிறது ஃபோர்டு? ஒரு டைம்ல எப்படி இருந்துச்சு... வாங்க போறது யார் தெரியுமா?

ஃபோர்டு மோட்டார் (Ford Motor) நிறுவனம் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) உடன் கூட்டணி இணைந்து மீண்டும் இந்திய மார்க்கெட்டில் கார்கள் விற்பனையில் ஈடுப்பட உள்ளதாக ஒரு வதந்தி பரவி வருகிறது. இந்த பேச்சு உண்மைதானா? இவ்வாறு நடக்கும் பட்சத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு என்னென்ன நன்மைகள் உள்ளன? வாருங்கள் இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவில் கடந்த காலங்களில் பல்வேறு வெளிநாட்டு கார் நிறுவனங்கள் நுழைந்துள்ளன. அவற்றுள் சில நிறுவனங்கள் இந்திய மக்களை கவர முடியாமல் வெளியேறி உள்ளன. அவ்வாறான நிறுவனங்களுள் ஒன்றுதான் ஃபோர்டு ஆகும். கார்கள் உற்பத்தியில் மிக நீண்ட கால அனுபவத்தை கொண்ட அமெரிக்க கார் நிறுவனம், ஃபோர்டு மோட்டார்.

ford joint venture with tata

இந்தியாவில் ஒரு சில ஃபோர்டு கார்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன. இன்னும் சொல்லப்போனால், ஃபோர்டு ஈக்கோ ஸ்போர்ட் காரின் விற்பனை ஆனது 2021ஆம் ஆண்டில் ஃபோர்டு இந்தியாவை விட்டு வெளியேறிய சமயத்தில் கூட சிறப்பாக விற்பனையாகி கொண்டு இருந்தது. இருப்பினும், வேறு சில காரணங்களுக்காக, வேறு வழியின்றி ஈக்கோஸ்போர்டின் விற்பனையை ஃபோர்டு நிறுத்தியது மற்றும் இந்திய சந்தையை விட்டு வெளியேறியது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஃபோர்டு மீண்டும் இந்திய மார்க்கெட்டிற்குள் நுழைய உள்ளதாக ஒரு பேச்சு எழுந்து வருகிறது. இந்தியாவில் மீண்டும் நுழையும் ஃபோர்டு இந்த முறை ஹைப்ரீட் கார்களிலும், எலக்ட்ரிக் கார்களிலும் அதிக கவனத்தை செலுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வகையில், தற்போது மீண்டும் இதுகுறித்து நமக்கு கிடைத்துள்ள தகவலில், ஃபோர்டு மோட்டார் நிறுவனம் இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் உடன் கூட்டணி இணைய உள்ளதாம்.

ford joint venture with tata

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் முனைப்புடன் உள்ளது. ஃபோர்டு நிறுவனமும் எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய விரும்புவதாக கூறப்படுவதால், ஃபோர்டு - டாடா மோட்டார்ஸ் இடையே கூட்டணி ஏற்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. 2021இல் இந்தியாவை விட்டு சென்ற சமயத்தில் ஃபோர்டு நிறுவனத்திடம் 2 தொழிற்சாலைகள் இருந்தன.

இதில் ஒன்றை வாங்கியது டாடா மோட்டார்ஸ் ஆகும். குஜராத் மாநிலத்தில், சனந்த் என்கிற பகுதியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு எதிரே ஃபோர்டு தொழிற்சாலை இருந்தது. இதனால், அந்த தொழிற்சாலையை வாங்குவது டாடா மோட்டார்ஸுக்கு பெரியதாக சிரமமாக இல்லை. ஃபோர்டு நிறுவனத்தில் இருந்து வாங்கியுள்ள தொழிற்சாலையை எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்திக்கு பயன்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு வருகிறது.

ford joint venture with tata

இதுவும், ஃபோர்டு - டாடா மோட்டார்ஸ் இடையேயான கூட்டணிக்கு காரணமாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள மற்றொரு தொழிற்சாலையை ஜே.எஸ்.டபிள்யூ குழுமத்திற்கு விற்க ஃபோர்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்ட நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. சென்னைக்கு அருகே ஃபோர்டு தொழிற்சாலை கப்பல் ஏற்றுமதிக்கு ஏற்ற பகுதியில் அமைந்துள்ளது.

அத்துடன், ஹைப்ரீட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்வதற்காகவும் ஃபோர்டு தனது சென்னை தொழிற்சாலையை விற்பதை நிறுத்திக் கொள்ளலாம் என ஒருபக்கம் பேச்சுகள் எழுகின்றன. உலகின் பிரபலமான மஸ்டங் காரின் எலக்ட்ரிக் வெர்சனுக்கான பெயரையும், 'எவரெஸ்ட்' என்கிற பெயரையும் ஃபோர்டு நிறுவனம் இந்த ஆண்டில் இந்தியாவில் பதிவு செய்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ford joint venture with tata

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோர்டு- டாடா மோட்டார்ஸ் கூட்டணி சேரவுள்ளதாக பேச்சுகள் மட்டுமே எழுந்து வருகின்றன. மற்றப்படி, உறுதியாக தகவல்கள் எதுவும் இல்லை. இன்னும் சொல்லப் போனால், ஃபோர்டு இந்திய மார்க்கெட்டுக்குள் மீண்டும் நுழைய போவதாக கூறுவதே முதலில் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இதற்கெல்லாம் ஓர் பதில் கிடைக்க வேண்டுமென்றால், அதற்கு ஃபோர்டு நிறுவனம் வாய் திறந்தால்தான் உண்டு.

More from DriveSpark

Article Published On: Friday, March 1, 2024, 22:30 [IST]
English summary
Ford planning to joint venture with tata motors rumoured check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X