இந்த காரோட உடல் ரொம்ப நீளமா இருக்கும்! டெரிடரி பேருக்கு பதிவு செய்த ஃபோர்டு.. பெரிய சம்பவம் நடக்கபோகுது!
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு (Ford), இந்தியாவே வேண்டாம் என கூறி நாட்டை விட்டே ஒட்டுமொத்தமாக வெளியேறியது. இத்துடன் தனது அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியாவில் முற்று புள்ளி வைத்தது. ஆனால், இது தற்காலிகமான வெளியேற்றம் தான் என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது.
ஆமாங்க, நிறுவனம் மீண்டும் இந்தியாவில் மறு வருகையைப் பதிவு செய்வதற்கான அனைத்து வேலைகளையும் செய்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக சமீபத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் உலக புகழ்பெற்ற கார் மாடல்களில் ஒன்றான எவரெஸ்ட் (என்டீயோவர்) இந்தியாவில் சோதனையோட்டத்திற்கு உட்படுத்தப்பட்டது.

இதுதவிர, நிறுவனம் ஓர் புதுமுக எம்பிவி ரக கார் மாடலுக்கு பேடண்ட் பதிவையும் பெற்றதாக தகவல்கள் வெளியாகின. உலக சந்தையில் எங்குமே விற்பனைக்குக் கிடைக்காத ஓர் கார் மாடல் இதுவாகும். இந்த நிலையிலேயே தற்போது புதிய தகவலாக ஃபோர்டு நிறுவனம் டெர்ரிடரி(Territory) எனும் பெயருக்கு டிரேட்மார்க் (Trademark) பதிவைச் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவின் புகழ்பெற்ற கார் மாடல்களான டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV700) போன்ற பெரிய உருவம் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல்களுக்கு போட்டியளிக்கும் விதமாக இந்த காரை ஃபோர்டு விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்திய சந்தையில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் வரலாறு காணாத விற்பனை வளர்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே ஃபோர்டு இந்தியாவில் கம்பேக் (மறு வருகை) கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த தகவல் ஃபோர்டு கார் காதலர்கள் மத்தியில் மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
ஃபோர்டு இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டது என்பதை நம்ப முடியாமல் இப்போதும் பலர் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. இந்த மாதிரியானோருக்கு கூடுதல் குஷியை வழங்கும் வகையிலேயே நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுகள் அமைந்துக் கொண்டிருக்கின்றன. மேலும், நிறுவனம் அதன் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்யும் என்றும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
ஃபோர்டு நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை கார் உற்பத்தி ஆலை இப்போதும் அதன் கைகளிலேயே உள்ளது. ஆகையால், இங்கேயே அதன் கார் உற்பத்தி பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த தகவல் இப்போதைக்கு உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஃபோர்டு டெர்ரிடரி உலக சந்தையில் ஈகுவேடர் எனும் பெயரில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
4.6 மீட்டர் நீளமான உடலைக் கொண்ட எஸ்யூவி காரே இதுவாகும். இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் டாடா ஹாரியர் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஆகிய கார் மாடல்கள் மட்டுமின்றி எம்ஜி ஹெக்டர் போன்ற கார் மாடல்களுக்கும் மிகப் பெரிய போட்டியாளனாக மாறும்.
இந்த காரின் உடல் மிக நீளமானது என்பதைப் போலவே இட வசதியையும் அது மிக தாராளமாக கொண்டிருக்கின்றது. இதேபோல், சிறப்பம்சங்கள் விஷயத்திலும் கொஞ்சம் கூட பற்றாக் குறை இல்லாத காரர் மாடலாகவே டெர்ரிடரி காட்சியளிக்கின்றது. அழகிலும் சற்று குறைச்சலில்லாத தயாரிப்பே ஃபோர்டு டெர்ரிடரி ஆகும்.
அந்தவகையில், பெரிய கிரில், ஸ்பிளிட் வகை ஹெட்லைட், அழகிய தோற்றம் கொண்ட வீல், சூப்பரான எல்இடி லைட் செட்-அப் ஆகியவற்றை இந்த காரில் ஃபோர்டு வழங்கி இருக்கின்றது. ஆகையால், சாலையில் இந்த கார் பயணிக்கும்போது பலரின் கவனத்தையும், மனதையும் கவரும் என தெரிகின்றது.
தொழில்நுட்ப அம்சங்களையும், பிரீமியம் அம்சங்களையும்கூட இந்த காரில் ஃபோர்டு வாரி வழங்கி இருக்கின்றது. இரண்டு விதமான திரைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும். 12.3 அங்குலத்தில் ஒன்றும், 12 அங்குலத்தில் ஒன்றே வழங்கப்பட்டு இருக்கின்றது. முதல் ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் திரையாகவும், இரண்டாவது ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகவும் செயல்படும்.
இத்துடன் பிரீமியம் தர அம்சங்களான சாஃப்ட் டச், பனோரமிக் சன்ரூஃப், பெரிய பூட், 6 ஏர் பேக்குகள், அடாஸ் உள்ளிட்ட அம்சங்களும் டெர்ரிடரி எஸ்யூவியில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் கட்டாயம் இந்தியர்களின் கவனத்தையும், வரவேற்பையும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபோர்டு நிறுவனம் புதிய வாகனங்களை களமிறக்க தவறியதன் விளைவாகவே அதனால் இந்தியர்களைக் கடந்த முறை பெரிய அளவில் கவர முடியவில்லை. இதன் விளைவாகவே அது சந்தையைவிட்டு வெளியேறியது. ஆனால், இம்முறை கடந்த தடவை செய்த அதே தவறை இப்போது செய்யாது என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், இம்முறை சக்சஸ்ஸான பிராண்டாக ஃபோர்டு மாறும் என தெரிகின்றது.


Click it and Unblock the Notifications








