இந்திய தயாரிப்பு தான் வேணும்னு அடம்பிடிக்கும் ஜப்பான் மக்கள்! 1600 காரை கப்பல்ல ஏத்திட்டாங்க!

மாருதி சுஸூகி நிறுவனம் தனது ஃபிராங்க்ஸ் காரை மிக வேகமாக விற்பனை செய்து வருகிறது. இந்த கார் அறிமுகமானது முதல் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான கார்கள் இந்திய மார்க்கெட்டிலும், வெளிநாட்டு மார்க்கெட்டிலும் விற்பனையாகியுள்ள நிலையில், தற்போது சுஸூகி நிறுவனம் உருவான ஜப்பான் நாட்டிற்கே இந்த தயாரிப்பை இந்தியா தான் ஏற்றுமதி செய்கிறது என்ற பெருமையை பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி நிறுவனம் தனது சுஸூகி ஃபிராங்க்ஸ் என்ற காரை கடந்த 2023ம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் முதன்முதலாக காட்சிப்படுத்தியது. அதன் பிறகு இந்த கார் கடந்த 2023 ஏப்ரல் 24ம் தேதி விற்பனைக்காக அறிமுகமானது. அதற்கு பின்னர் இந்த காரின் பிரபலம் அதிகமானது. இதனால் இந்த காரின் விற்பனையும் அதிகரித்தது. இந்த கார் அறிமுகமான 10 மாதத்திலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையானது.

Fronx japan export

தற்போது 2 லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையாகியுள்ள நிலையில், இந்த கார் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. முக்கியமாக லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு இந்த கார்கள் ஏற்றுமதியாகும் நிலையில், தற்போது ஜப்பானிற்கும் ஏற்றுமதியாகும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

ஜப்பான் நாட்டை சேர்ந்த நிறுவனம் தான் இந்நிறுவனம் இந்தியாவில் மாருதி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து தான் இந்த காரை வடிவமைத்துள்ளது. இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் உள்ள ஆலையில் தான் இந்த கார் தயாரிக்கப்படுகிறது. இந்த காரின் வடிவமைப்பை சுஸூகி நிறுவனம் செய்தாலும், இந்த கார் இந்தியாவில் தான் தயாரிக்கப்படுவதால் ஜப்பானில் இந்த காருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

Fronx japan export

முதற்கட்டமாக மாருதி நிறுவனம் தனது குஜராத் ஆலையில் இருந்து 1600 ஃபிராங்க்ஸ் கார்களை குஜராத் துறைமுகம் வழியாக ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஏற்கனவே மாருதி நிறுவனம் கடந்து 2016ம் ஆண்டு பலேனோ காரை இப்படியாக தான் இந்தியாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்தது. அதேபோல தற்போது ஃபிராங்க்ஸ் காரையும் ஏற்றுமதி செய்துள்ளது.

ஜப்பான் நாட்டில் இந்த காருக்கான வரவேற்பு அதிகரிக்கும் பட்சத்தில் இந்த காரின் ஏற்றுமதியும் அதிகமாக ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஜப்பானிலிருந்து இந்தியாவிற்கு வந்த ஒரு கம்பெனி இந்தியாவில் வாகனங்களை தயாரித்து ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்தியா வளர்ந்துள்ளது தற்போது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்வதில் முன்னணி நாடாக இருக்கிறது. மாருதி நிறுவனம் தான் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. கடந்த நிதியாண்டில் மற்றும் மொத்தம் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இரண்டு 2.8 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.

இந்நிறுவனம் இந்தியாவில் நடக்கும் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 42 சதவீத பங்கை வைத்துள்ளது. அதாவது கிட்டத்தட்ட பாதி கார்கள் மாருதி நிறுவனம் தான் ஏற்றுமதி செய்கிறது என நாம் கருத்தில் கொள்ளலாம். இந்த நிதியாண்டில் கூட முதல் மூன்று மாதத்தில் மொத்தம் 70,560 வாகனங்களை இந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

இதற்கு முன்னர் மாருதி சுஸூகி நிறுவனம் இவ்வளவு அதிகமான வாகனங்களை எந்த காலாண்டு காலத்திலும் ஏற்றுமதி செய்யவில்லை. தற்போது இந்த நிறுவனத்தின் வாகனங்களுக்கு உலக நாடுகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கியமான காரணம் மாருதி நிறுவனம் சிம்பிளான கார்களை தயாரிப்பது தான்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா போன்ற நாடுகளில் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் காருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் அதே வேளையில் உலக நாடுகளிலும், இந்த காருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இது இந்தியாவிற்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி தான். இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு இந்த கார் ஏற்றுமதியாகிறது ஜப்பானுக்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்கள் மீது தான் மவுசு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 13, 2024, 15:28 [IST]
English summary
Fronx japan export maruti suzuki made in india suv
மேலும்... #maruti suzuki #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+