ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!

எஸ்யூவி ரக கார்களுள் அளவில் பெரியவை ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்களாகும். அதாவது, தமிழில் முழு-அளவு எஸ்யூவி கார்கள் என அழைக்கப்படும் இவை அளவில் நன்கு பெரியதாகவும், ஆற்றல்மிக்கதாகவும் இருக்கின்றன. இந்த ரக எஸ்யூவி கார்கள் தற்சமயம் மொத்தம் 4 மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி க்ளோஸ்டர், ஜீப் மெரிடியன் மற்றும் ஸ்கோடா கோடியாக் என்பன அவை ஆகும்.

இவை நான்கும் கடந்த 1 ஆண்டில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதையும், இவற்றுள் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம். ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்களாக 4 மாடல்கள் தற்சமயம் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்தாலும், இந்த நான்கில் பெரும்பாலான மக்கள் தேர்வு செய்வது டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை மட்டுமே ஆகும்.

full-size suv cars sales report

ஃபார்ச்சூனர் கார்களின் விற்பனை எண்ணிக்கையில் 20% கூட மற்ற ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்கள் விற்பனையாகுவது இல்லை என்பதே உண்மை. கடந்த 1 வருடத்தில், சுமார் 35,063 டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதே கால இடைவெளியில் விற்பனை செய்யப்பட்ட மற்ற 3 ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்களின் விற்பனை எண்ணிக்கைகளை ஒன்றாக சேர்த்து கூட்டி பார்த்தால் கூட 6,500ஐ தொடவில்லை.

2023 ஏப்ரலில் இருந்து 2024 மார்ச் வரையிலான 1 ஆண்டு காலக்கட்டத்தில் ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 2,922 ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த ஒரு வருடத்தில் அதிகப்பட்சமாக கடந்த மார்ச் மாதத்தில் 3,621 ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறைந்தப்பட்சமாக, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெறும் 1,876 ஃபார்ச்சூனர் கார்களை மட்டுமே டொயோட்டா நிறுவனத்தால் விற்க முடிந்தது.

full-size suv cars sales report

இந்தியாவில் மக்கள் பலர் விரும்பி வாங்கும் டொயோட்டா கார்களுள் ஒன்றாக ஃபார்ச்சூனர் விளங்குகிறது. 4x2 மற்றும் 4x4 ஆப்ஷன்களில் கிடைக்கும் ஃபார்ச்சூனர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.33.43 லட்சத்தில் இருந்து ரூ.51.44 லட்சம் வரையில் உள்ளன. தற்சமயம் விற்பனையில் இருக்கும் ஃபார்ச்சூனர் காரை கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் டொயோட்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு அடுத்து, இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தில் எம்ஜி க்ளோஸ்டர் உள்ளது. ஆனால், ஏற்கனவே கூறியதுபோல், ஃபார்ச்சூனருக்கும், க்ளோஸ்டருக்கும் இடையே விற்பனை எண்ணிக்கையில் பெரிய வித்தியாசம் உள்ளது. கடந்த 1 ஆண்டில் ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 2,922 ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், எம்ஜி க்ளோஸ்டர் கார்கள் மொத்தமாகவே 2,450 யூனிட்கள் மட்டுமே இந்தியாவில் விற்பனையாகி உள்ளன.

full-size suv cars sales report

இதன்படி பார்த்தால், ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 204 எம்ஜி க்ளோஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 1 ஆண்டில் அதிகப்பட்சமாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 281 எம்ஜி க்ளோஸ்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. குறைந்தப்பட்சமாக, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெறும் 131 க்ளோஸ்டர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

3வது இடத்தில் ஜீப் மெரிடியன் உள்ளது. கடந்த 1 வருடத்தில் மொத்தம் 2,106 ஜீப் மெரிடியன் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 176 மெரிடியன் கார்களை ஜீப் விற்பனை செய்துள்ளது. கடைசி 4வது இடத்தில் ஸ்கோடா கோடியாக் 1,887 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. சராசரியாக ஒவ்வொரு மாதத்திலும் 157 கோடியாக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

full-size suv cars sales report

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்கள் விலைமிக்கவையாக விளங்குகின்றன. இதன் காரணமாகவே, அவற்றை குறைவான எண்ணிக்கையிலான மக்களே வாங்குகின்றனர். இருப்பினும், அவற்றில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்கள் ஒவ்வொரு மாதத்திலும் கிட்டத்தட்ட 3 ஆயிரம் யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருப்பது இந்தியாவில் ஃபார்ச்சூனர் கார்களுக்கான டிமாண்டை காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 25, 2024, 12:50 [IST]
English summary
Full size suv cars sales report 2023 24 fy check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X