பெட்ரோல், டீசல் செலவு கிடையாது... ஒருமுறை சார்ஜ் பண்ணால் போதும்!! பைக் விலையில் எலக்ட்ரிக் ஆட்டோ!

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்தியாவில் நாளுக்கு நாள் டிமாண்ட் அதிகமாகிக் கொண்டே போகிறது. குறிப்பாக, டாக்ஸி உள்ளிட்ட கமர்ஷியல் போக்குவரத்துக்காக நிறைய எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்கப்படுகின்றன. அந்த வகையில், எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாக்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், சமீப ஆண்டுகளில் புதியதாக பல்வேறு எலக்ட்ரிக் ஆட்டோ உற்பத்தி நிறுவனங்கள் மார்க்கெட்டில் நுழைந்துள்ளன. இந்த நிலையில், எலக்ட்ரிக் ஆட்டோக்களை உற்பத்தி செய்யும் பிரபல நிறுவனம் ஒன்று தனது புதிய எலக்ட்ரிக் ஆட்டோவின் விலையை அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

இந்தியாவில், எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களுள் ஒன்று க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி (Greaves Electric Mobility) ஆகும். எலக்ட்ரிக் 2-வீலர்கள், எலக்ட்ரிக் 3-வீலர்கள் என பல்வேறு விதமான எலக்ட்ரிக் வாகனங்கள் இந்த நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன.

greaves eltra city price announced

அந்த வகையில், க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனத்தில் இருந்து புதியதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள எலக்ட்ரிக் 3-வீலர், க்ரீவ்ஸ் எல்ட்ரா சிட்டி (Greaves Eltra City) ஆகும். கடந்த மார்ச் மாதத்தில் க்ரீவ்ஸ் எல்ட்ரா சிட்டி எலக்ட்ரிக் ஆட்டோவை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டன. அதாவது, எந்த மாதிரியான எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி இந்த இ-ஆட்டோவில் பொருத்தப்படுகிறது என்கிற அனைத்து விபரங்களும் வெளியிடப்பட்டன.

ஆனால், விலைகள் மட்டும் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனம் எல்ட்ரா சிட்டி எலக்ட்ரிக் ஆட்டோவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.3,66,999 என தற்போது அறிவித்துள்ளது. இதன் மூலமாக இந்த எலக்ட்ரிக் ஆட்டோ விற்பனைக்கு கிடைக்கும் என்பதையும் க்ரீவ்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்த எலக்ட்ரிக் ஆட்டோவை புக் செய்பவர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளும் விரைவில் துவங்கப்படும்.

greaves eltra city price announced

க்ரீவ்ஸ் எல்ட்ரா சிட்டி எலக்ட்ரிக் ஆட்டோவில் 9.6 கிலோவாட்ஸ் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டாருக்கு ஆற்றல் வழங்கும் வகையில் மோட்டாரினுள் 10.8kWh திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, அதிகப்பட்சமாக 49 என்.எம் வரையிலான டார்க் திறனை இந்த எலக்ட்ரிக் ஆட்டோவில் பெறலாம். பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 160கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம்.

இந்த வாகனத்தால் 14 டிகிரி ஏறுமுகமான சாலையிலும் இயங்க முடியும். இதுமட்டுமின்றி, மற்ற எலக்ட்ரிக் ஆட்டோக்களுக்கு இல்லாத சில பண்புகள் க்ரீவ்ஸ் எல்ட்ரா சிட்டிக்கு உள்ளது. இந்த வகையில், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், 6.2-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை உள்ளிட்டவற்றை க்ரீவ்ஸ் எல்ட்ரா சிட்டி பெற்றுள்ளது. இந்த திரையின் மூலமாக பயணத்திற்கான விபரங்கள் உடன் நேவிகேஷனையும் பயணத்தின்போது பெறலாம்.

greaves eltra city price announced

எல்ட்ரா சிட்டி எலக்ட்ரிக் ஆட்டோவிற்கு 3 வருட உத்தரவாதத்தை க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனம் வழங்கும். இதனை, 5 வருடங்களாகவும் விருப்பப்படுவோர் அதிகரித்துக் கொள்ளலாம். எல்ட்ரா சிட்டி எலக்ட்ரிக் ஆட்டோவின் விலை அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டியின் 3-வீலர் பிரிவின் இயக்குனர் விஜயகுமார் கூறுகையில், "அனைவராலும் அணுகக்கூடிய நிலையான மற்றும் திறமையான இயக்க தீர்வுகளை உருவாக்குவதன் மூலம் நகர்புற போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்த க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி உறுதிக் கொண்டுள்ளது.

எல்ட்ரா சிட்டி எலக்ட்ரிக் 3-வீலர் ஆனது மலிவு மற்றும் சிறந்து விளங்குவதற்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். சிறந்த இன்-கிளாஸ் அம்சங்கள், விதிவிலக்கான வரம்பு மற்றும் புதுமையான தொழிற்நுட்பத்துடன், எல்ட்ரா சிட்டி பயணிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு பயண அனுபவத்தை மறுவரையறை செய்ய தயாராக உள்ளது. நகர்புற மொபைலிட்டியில் இது ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தை காண நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம்" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பருத்தி உற்பத்தி தொழிலில் சுமார் 163 வருடத்திற்கும் மேலான அனுபவத்தை க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனம் கொண்டுள்ளது. அதன் எலக்ட்ரிக் வாகன நிறுவனமாக செயல்படும் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தனது சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி உள்ளது. ஆதலால், புதிய எல்ட்ரா சிட்டி எலக்ட்ரிக் ஆட்டோவை தைரியமாக வாங்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 18, 2024, 19:49 [IST]
English summary
Greaves announced price of eltra city check features battery all details here
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X