ஆட்டோ டிரைவர்களுக்கு பணத்தை மிச்சம் பிடித்து கொடுக்கும்!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!

ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 160கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடிய ஓர் புத்தம் புதிய எலக்ட்ரிக் ஆட்டோ மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதாக அறிவித்து உள்ளது. எந்த நிறுவனம் உருவாக்கிய எலக்ட்ரிக் ஆட்டோ இது? இதன் மற்ற சிறப்பம்சங்கள் என்னென்ன? வாருங்கள் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தொழிற்நுட்பங்களை உருவாக்குவதில் முதன்மை நிறுவனமாக இருப்பது க்ரீவ்ஸ் காட்டன் (Greaves Cotton) லிமிடெட். இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமாக உள்ள க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி பிரைவேட் லிமிடெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் எலக்ட்ரிக் ஆட்டோகளை விற்பனை செய்கிறது.

greaves eltra city auto launch

க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டியில் 3-வீலருக்கு என தனியாக பிரிவு உள்ளது. விற்பனையில் இருக்கும், க்ரீவ்ஸின் எல்ட்ரா கார்கோ எலக்ட்ரிக் ஆட்டோவிற்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால், அது சரக்கு ஆட்டோ ஆகும். பயணிகளை ஏற்றி செல்ல முடியாது. இந்த நிலையில், பயணிகளை ஏற்றி செல்வதற்கு ஏற்ற எல்ட்ரா சிட்டி எலக்ட்ரிக் ஆட்டோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

இன்றைய கால போக்குவரத்துக்கு ஏற்ற உடலமைப்பை கொண்ட புதிய எல்ட்ரா சிட்டி கூடுதல் சவுகரியம் மற்றும் செயல்படுதிறனை வழங்கும் என க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி உறுதியாக கூறுகிறது. இதன் காரணமாகவே, இந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோவை 'எவெரிதிங் எக்ஸ்ட்ரா' என க்ரீவ்ஸ் நிறுவனம் அழைக்கிறது.

இந்த எலக்ட்ரிக் ஆட்டோவில் 9.6 கிலோவாட்ஸ் மோட்டார் மற்றும் 10.8 kWh திறன் கொண்ட லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 14-டிகிரி ஏறுமுகமான சாலையில் இயங்கும் தன்மை மற்றும் 49 என்எம் வரையில் டார்க் திறனை வழங்கும் தன்மை என இதற்கு போட்டியாக உள்ள மற்ற எலக்ட்ரிக் ஆட்டோகளுக்கு இல்லாத சில பண்புகள் புதிய க்ரீவ்ஸ் எல்ட்ரா சிட்டி ஆட்டோவில் உள்ளன.

அத்துடன், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் வசதியும் இதில் உள்ளது. ஆட்டோவிற்குள் டிரைவருக்கு முன்பக்கமாக வழங்கப்பட்டுள்ள 6.2 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை வாயிலாக ஆட்டோவை பற்றிய விபரங்களை பெறலாம். மேலும், இந்த திரையின் மூலமாக பயணத்திற்கான விபரங்களை பெறுவது மட்டுமின்றி, எந்த பக்கம் செல்ல வேண்டும் என்கிற வழிக்காட்டுதல்களையும் பெறலாம்.

greaves eltra city auto launch

முழுவதுமாக உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ள எல்ட்ரா சிட்டி எலக்ட்ரிக் ஆட்டோவிற்கு 3 வருட உத்தரவாதத்தை க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி வழங்குகிறது. கூடுதல் கட்டணம் செலுத்துவதன் மூலம், இதனை 5 வருடங்களாகவும் அதிகரித்துக் கொள்ளலாம். இந்த புதிய எலக்ட்ரிக் ஆட்டோவில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 160கிமீ தொலைவிற்கு சார்ஜ் போடாமல் பயணிக்கலாம்.

இது ஆட்டோ டிரைவர்களுக்கு கணிசமான வருவாயை பெற்றுத்தரும் என க்ரீவ்ஸ் நம்புகிறது. இதுகுறித்து க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபைலிட்டி நிறுவனத்தின் 3-வீலர் வணிகத்திற்கான சிஇஓ நிர்மல் கூறுகையில், "நகர்புற போக்குவரத்தை மாற்றியமைப்பதற்கான எங்கள் தேடலில் க்ரீவ்ஸ் எல்ட்ரா சிட்டியின் அறிமுகம் மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனையை பிரதிப்பலிக்கிறது" என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சுமார் 160 வருடங்களுக்கும் மேலாக செயல்படும் க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனத்துக்கு கீழ் செயல்படுவதினாலேயே க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் வாகனங்கள் & அவற்றிற்கான சர்வீஸ்கள் பரவலாக நாடு முழுவதும் கிடைக்கின்றன. இதன் மூலமாக க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் 3-வீலர்கள் பிரபலமடைந்து வருகின்றன. ஆதலால், புதிய க்ரீவ்ஸ் எல்ட்ரா சிட்டி ஆட்டோவையும் நிறைய பேர் வாங்குவர்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 14, 2024, 16:57 [IST]
English summary
Greaves eltra city new electric auto of greaves electric mobility check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+