கார்களுக்கு பதிலா இந்த ஆட்டோவ வாங்கலாம்போல.. ஸ்லிம்மா செம்ம அழகா இருக்கு.. கெத்தா போய் இறங்கலாம்!!
கார்களுக்கே டஃப் கொடுக்கக் கூடிய அசத்தலான ஸ்டைலில் புதுமுக ஆட்டோரிக்சாக்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. கிரீன்வே மொபிலிட்டி (Greenway Mobility), இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனமே தன்னுடைய புதுமுக ஆட்டோக்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இ-வி (E-Vi), எனும் சீரிஸின்கீழே அது எலெக்ட்ரிக் ஆட்டோக்களை அறிமுகம் செய்திருக்கின்றது. இரண்டு இ-ஆட்டோரிக்சாக்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. சோட்டா ஓட்டோ (Chhota Otto) மற்றும் சோட்டா புல் (Chhota Bull) எனும் ஆட்டோக்களையே அதும் அறிமுகம் செய்திருக்கின்றது.
இவற்றிற்கு அறிமுக விலையாக ரூ. 2 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். கார்கள் மட்டுமே கவுரவத்தை தரும் என நினைப்பவர்களின் மனதையே மாற்றி தன்னை வாங்கச் செய்கின்ற ஸ்டைலிலேயே இந்த மின்சார ஆட்டோக்கள் உள்ளன.

Image Source கிரீன்வே மொபிலிட்டி நிறுவனத்தின் முக்கிய நோக்கமே, இந்தியாவின் ஆட்டோரிக்சா பிரிவை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான். தன்னுடைய இந்த மன நிலையைக் கொண்டே சோட்டா ஓட்டோ மற்றும் சோட்டா புல் எனும் இரண்டு எலெக்ட்ரிக் ஆட்டோக்களை அது அசத்தலான ஸ்டைலில் வடிவமைத்திருக்கின்றது.
அட்வான்ஸ்டான இந்தியாவிற்கு ஏற்ற ஆட்டோக்களாகவே அவை தயார் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆட்டோக்களில் போனால் கவுர குறைச்சல் என நினைப்பவர்களுக்குகூட இந்த ஆட்டோக்களில் பயணிக்கும் ஆசை வரலாம். அவ்வளவு அழகாகவே அது பார்ப்பதற்கு உள்ளது. இதேபோல், சிறப்பம்சங்கள் விஷயத்திலும் அவை நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் உள்ளன.
ஒரு ஆட்டோவில் இவ்ளோ வசதிகளா என கேட்கும் அளவிற்கான சிறப்பம்சங்களையே தாங்கள் வழங்கி இருப்பதா நிறுவனமும் தெரிவித்து இருக்கின்றது. மிக முக்கியமாக இந்த இரண்டு ஆட்டோக்களையும் இந்தியாவிலேயே வைத்து டிசைன் செய்து, இந்தியாவிலேயே தயாரித்திருக்கின்றது கிரீன்வே மொபிலிட்டி நிறுவனம். மேலும், இந்த ஆட்டோக்களின் உற்பத்தியில் எல்5 கிரேடு (L5 Grade) பொருட்களை அதிகம் பயன்படுத்தி இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
ஆட்டோக்கள் நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே இந்த வகை சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், இந்தியாவின் அனைத்து விதமான சாலைகளுக்கும் ஏற்ற ஆட்டோக்களாகவும் இவை தயார் செய்யப்பட்டு இருக்கின்றன. இதன் அடிப்படையில் ஒவ்வொரு வீல்களுக்கும் தனி தனியாக சஸ்பென்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
அவை கார்களுக்கு இணையான ரைடு அனுபவத்தை வழங்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. மேலும், சௌகரியமான டிராவல் அனுபவத்தை வழங்கும் விதமாக சொகுசான இருக்கைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் நிறுவனம் கூறியிருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, இந்த ஆட்டோக்களை லோடு ஏற்றிச் செல்லவும் பயன்படுத்திக் கொள்ள முடியுமாம்.
இதற்காக இருக்கைகளை மடித்துக் கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. சுமார் 400 கிலோ வரையில் இதில் லோடை ஏற்றிச் செல்ல முடியும். இத்துடன், ஹைட்ராலிக் பிரேக்குகள் மற்றும் ரியல் டைம் டிராக்கிங் வசதி உள்ளிட்டவையும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ரேஞ்ச் மற்றும் பிற முக்கிய விபரங்கள் வெளியாகவில்லை.
விரைவில் அதுபற்றிய விபரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், கிரீன்வே மொபிலிட்டி நிறுவனம், இந்த மின்சார ஆட்டோக்களைத் தொடர்ந்து மிக அதிக வேகத்தில் செல்லும் ஓர் இ-ஆட்டோவையும் வரும் நாட்களில் இந்தியாவில் அறிமுகம் செய்ய கிரீன்வே மொபிலிட்டி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ரைடன் (Rydan) எனும் பெயரிலேயே அது சந்தையைக் களம் காண இருக்கின்றது. விரைவில் இதுபற்றிய கூடுதல் விபரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரை விட்டுவிட்டு இந்த ஆட்டோவையே வாங்கிரலாமா என நினைக்கும் அளவிற்கே அதன் சிறப்புகள் என இருக்கின்றன. குறிப்பாக, அதன் ஸ்டைல் அனைவரையும் கவரும் வகையில் இருக்கின்றது. மேலும், குறைவான விலையை வாடிக்கையாளர்களைச் சுண்டிழுக்கும் வகையில் உள்ளது. ஆகையால் முன்னணி ஆட்டோ உற்பத்தி நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கக் கூடியதாக இது மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








