கார், பைக் போல விமானங்களில் ஹெட்லைட் இருக்குமா? இருந்தா அதை எதுக்கு யூஸ் பண்ணுவாங்க?
சாலையில் நாம் வாகனங்களில் பயணிக்கும் போது இரவு நேரத்தில் எதிரில் உள்ள சாலை தெரிவதற்காகவும் மற்ற வாகனங்கள் தெரிவதற்காகவும் சாலையில் உள்ள மற்ற விஷயங்கள் அனைத்தும் தெரிவதற்காக ஹெட் லைட்டுகளை பயன்படுத்துவோம். ஹெட்லைட் இல்லாமல் இரவு நேரத்தில் சாலையில் பயணிப்பது மிகப்பெரிய சிரமமாகும். ஆனால் விமானங்களில் இரவு நேரத்தில் ஹெட்லைட் பயன்படுத்தப்படும் என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா? இதைப் பற்றி தான் நாம் இங்கே காண போகிறோம்.
பலர் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்குவதையும் டேக் ஆஃப் செய்வதையும் பார்த்திருப்போம். இப்படியான நேரங்களில் விமானங்களில் ஹெட்லைட் என்பது இருக்கும். இதை பலரும் பார்த்திருப்பார்கள். நாம் கார் பைக்குகளில் பயன்படுத்தும் ஹெட்லைட் போல விமானங்களிலும் ஹெட்லைட் கொடுத்து இருக்கிறார்கள் என அதை பார்த்து கடந்து சென்று இருப்பார்கள்.

ஆனால் யாரும் இல்லாத அந்தரத்தில் சுமார் கடல் மட்டத்திலிருந்து 10 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் பறக்கும் விமானத்திற்கு எதற்கு ஹெட்லைட் தேவைப்படுகிறது என யாரும் யோசிக்க மாட்டார்கள். அவ்வளவு உயரத்தில் எதிரில் என்ன மற்ற வாகனமாக வரப்போகிறது? பின்னர் ஏன் விமானங்களில் ஹெட்லைட் வைத்திருக்கிறார்கள். விமானங்களில் ஹெட்லைட் வைத்திருப்பதற்கான பயன் என்ன?
பொதுவாக விமானங்களில் ஹெட்லைட் வைத்திருப்பதற்கான பயன் என்பது விமானம் தரையிறங்கும் போதும் டேக் ஆஃப் ஆகும் போதும் மற்ற எந்த பொருட்கள் மீதும் விமான மோதாமல் பாதுகாப்பாக தரையிறங்க விமானிக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது. இந்த வெளிச்சத்தை வழங்குவதற்காக தான் ஹெட்லைட்டை பொருத்தியிருக்கிறார்கள். இதனால் விமானங்களில் டேக்ஆஃப் செய்யும்போதும் லேண்ட் செய்யும் போது மட்டுமே ஹெட்லைட்டுகள் பயன்படுத்தப்படும்.

முக்கியமாக அதிக நெருக்கடி நிறைந்த விமான நிலையங்களில் இந்த ஹெட்லைட்டின் தேவை மிக அவசியமாக இருக்கிறது. அவசர காலகட்டங்களில் சிக்னல்களை விட பைலட்டுகள் தங்கள் கண்ணுக்குத் தெரியும் விஷயங்களை வைத்து பல்வேறு முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். இப்படியான நேரங்களில் பைலட்டுகளுக்கு சுற்றி என்ன இருக்கிறது என்பதை காண விமானங்களுக்கு ஹெட்லைட் என்பது அவசியமாக இருக்கிறது.
நாம் கார்,பைக்குகளில் பயன்படுத்தப்படும் ஹெட்லைட்களை ஹெட்லைட் என அழைக்கிறோம், ஆனால் விமானங்களில் இந்த லைட்டுகளை லேண்டிங் லைட்டுகள் என அழைக்கிறார்கள். இதற்கு காரணம் பெரும்பாலும் இது லேண்ட் செய்யும் போது மட்டுமே அதிகமாக பயன்படும். டேக் ஆப் செய்யும்போது ரன் வேயில் விமானம் ஓடும் போது பயன்பட்டாலும் அது பெரிய அளவில் பயன் தராது. ஆனால் லேண்ட் செய்யும் போது மிக முக்கியமான பயனை தருகிறது.
நாம் விமானங்களில் பயணிக்கும் போது இரவு நேரத்தில் விமானங்களில் பறக்கும் போது கீழே பூமியில் மின்விளக்குகளால் எவ்வளவு ஜொலிக்கிறது என்பதை பார்ப்போம். இதை பார்க்க நமக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனால் விமானி டேக் ஆப் செய்யும்போது மேலே எந்த வெளிச்சமும் இருக்காது. இருட்டிற்குள் எவ்வாறு சரியாக கனித்து விமானத்தை இயக்குகிறார் என்ற சந்தேகமும் சிலருக்கு எழக்கூடும்.
நேவிகேஷன் மற்றும் வெதர் சென்சர்களை வைத்து சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் விமானங்களை இயக்குவார்கள். விமானம் எந்த உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது. எந்த திசையில் பறந்து கொண்டிருக்கிறது எவ்வளவு வேகத்தில் பறந்து கொண்டிருக்கிறது என்று அனைத்து தகவல்களும் விமானிகளுக்கு கிடைக்கும்.
அதை வைத்து விமானிகள் சரியாக இரவு நேரத்தில் விமானத்தை இயக்குகிறார்கள். விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள ஹெட்லைட் எனப்படும் லேண்டிங் லைட் என்பது சிறிய லைட்டாக தான் இருக்கும். இது ஒரு 600 வாட்ஸ் கொண்ட 8 இன்ச் விட்டம் கொண்ட பல்ப் மூலம் தான் இந்த ஹெட்லைட் என்பது அமைக்கப்பட்டு இருக்கும். இது லேண்ட் செய்யும் போது மட்டுமே ஆன் செய்யப்படும். விமானம் மேலே பறக்கும்போது ஆஃப் செய்யப்பட்டு விடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானங்களில் இரவு நேரத்தில் பயணிக்க பலருக்கும் விருப்பம் இருக்கும். இரவு நேரத்தில் விமானம் டேக்ஆஃப் ஆகும்போதும் சரி தரையிறங்கும் போதும் சரி விண்ணில் இருந்தபடி பூமியை பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான விஷயம்தான். ஆனால் பலருக்கும் விமானத்தில் உள்ள இந்த ஹெட்லைட் குறித்த தகவல் தெரியாது. நிச்சயம் இது உங்களுக்கு புதிய தகவலாக இருக்கும் என நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications








