ரோட்ல போற ஏரோபிளேன் சார் இது! எவ்வளவு ஸ்பீடு போகும்னு தெரிஞ்சா உடனே பதறிடுவீங்க!

உலகில் பல கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. சில கார்கள் மாளிகை போல அழகாக இருக்கின்றன, மற்றவை அதிக சக்தியைக் கொண்டுள்ளன. சில கார்கள் வேகமாகச் செல்லும், மற்றவை மகத்தான மைலேஜைக் கொடுக்கும். ஆனால், இன்று நாம் உங்களுக்கு அழகான அதே நேரம் சக்தி வாய்ந்த ஒரு காரை அறிமுகப்படுத்தப் போகிறோம். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்

இந்த கார் அமெரிக்க ஹைப்பர் கார் தயாரிப்பாளரான ஹென்னெசி நிறுவனத்தின் ஸ்பெஷல் வாகனங்கனமாகும். இந்த நிறுவனம் காரின் வடிவமைப்பு, அதன் சக்தி மற்றும் பிற அம்சங்கள் மீது மிகவும் கவனம் செலுத்தி வடிவமைத்துள்ளது. இதுவரை உலகின் மிகவும் சக்திவாய்ந்த மேனுவல் கியர் கார் என்று அந்நிறுவனம் கூறுகிறது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ளது.

Hennessey Venom F5-M Roadster

ஹென்னெசியின் வெனம் F5-M ரோட்ஸ்டர் காரின் கூரை ஒரு போர் விமானத்தைப் போல மேலே திறந்து ஒரே ஒரு நபருக்கு மட்டும் அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் வடிவமைப்பு முழுவதும் கார்பன் ஃபைபரால் செய்யப்பட்டுள்ளது. டிரைவிங் அனுபவத்தை அற்புதமாக்குவதுதான் அந்நிறுவனத்தின் நோக்கம். அதனால் தான் இப்படியான வடிவமைப்பை செய்துள்ளது.

நடிகர் டாம் குரூஸை டாப் கன் திரைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். இந்த காரில் டிரைவர் கேபின் முழுவதும் இந்த டாப் கன் திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டுள்ளது. இந்த முறை எலெக்ட்ரிக் கியருக்கு பதிலாக முழுமையான மேனுவல் கியரை கொண்டு அந்நிறுவனம் வடிவமைத்துள்ளது.. அதன் வடிவமைப்பு காற்றின் எதிர்ப்பைக் குறைவாக வைத்திருக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது.

Hennessey Venom F5-M Roadster

பவரையைப் பற்றி பேசினால், நிறுவனம் 6 கியர் Fury V8 இன்ஜினைக் கொடுத்துள்ளது. அதன் பவர் 1,817 BHP ஆகும். ஒரு இரட்டை தள கனரக வாகனத்தின் இன்ஜின் சராசரியாக 600 BHP சக்தியை உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இந்த அர்த்தத்தில், இந்த கார் ஒரு டிரக்கை விட மூன்று மடங்கு சக்தி வாய்ந்தது. வேகத்தைப் பற்றி பேசினால், இந்த கார் வெறும் சில நொடிகளில் 357 kmph வேகத்தை எட்டும்.

இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO ஜான் ஹென்னெசி, உலகின் மிகவும் சக்திவாய்ந்த மேனுவல் கியர் காரை அறிமுகப்படுத்தியதில் நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம் என்று கூறுகிறார். இதற்கு நடுவே, நாங்கள் இங்கே நிறுத்தப் போவதில்லை, நாங்கள் மேலும் செல்ல வேண்டும். என கூறினார். தற்போது, ​​வெறும் 12 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு, காரின் விலை ரூ. 25 கோடி அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Hennessey Venom F5-M Roadster

காற்றின் எதிர்ப்பைக் குறைக்க காரில் 55 இன்ச் ஃபின் நிறுவப்பட்டுள்ளது, இது போர் விமானத்தின் தோற்றத்தை அளிக்கிறது. காரின் காக்பிட் அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபரால் செய்யப்பட்டுள்ளது, இதனால் அது வலுவாகவும் இலகுவாகவும் இருக்கிறது. கியர் லிவர் மீது கார்பன் ஃபைபர் போன்ற பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இது டிரைவருக்கு மிகவும் டச் ஃபீலை உணரப்படுகிறது.

இந்த காரின் வடிவமைப்பு மற்றும் இன்ஜின் அனைத்தும் நிறுவனத்தின் தலைமையகமான டெக்சாஸின் சீலியில் தயாரிக்கப்பட்டது. முன்பு, ஹென்னெசி ஒரு செமி ஆட்டோ எஞ்சினுடன் கூடிய வெனம் F5 கூபே காரின் 24 கார்களை வெளியிட்டுள்ளது. இந்த முறை தயாரிக்கப்பட்ட 12 ரோட்ஸ்டர் கார்களின் அனைத்து கார்களும் விற்றுத்தீர்ந்துவிட்டன. இப்போது அந்நிறுவனம் அதில் 30 கார்களை கூடுதலாக தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

ஒவ்வொரு கார் உரிமையாளருக்கும் ஒரு வித்தியாசமான நிறம் வழங்கப்படும் மற்றும் ஒரு குறிப்பிட்ட நிறத்தில் கார் தயாரிக்கப்பட்டவுடன், அது அமைப்பிலிருந்து நீக்கப்படும் என்று அந்நிறுவனம் கூறுகிறது. இதனால் அனைவருக்கும் தனித்தவமான கார் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாங்க விரும்புபவர்கள் HennesseySpecialVehicles.com என்ற தளத்தை பார்வையிட்டு உலகின் எந்த மூலையிலிருந்தும் ஆர்டர் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகிலேயே அதிக பவர்ஃபுல்லான காரை தயாரித்து இந்நிறுவனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த காரை அந்நிறுவனம் யாருக்கெல்லாம் விற்பனை செய்துள்ளது என்ற தகவலை வெளியிடவில்லை. இந்த கார் இந்தியாவிற்கு வருமா என்பதை நாம் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 12, 2024, 7:00 [IST]
English summary
The Hennessey Venom F5-M Roadster, crafted by American hypercar manufacturer Hennessey Special Vehicles, stands as the most powerful manual transmission car globally, boasting a 1,817 BHP Fury V8 engine and reaching speeds of 357 kmph. With its design inspired by fighter jets and made entirely of carbon fiber, this limited edition car combines unparalleled power with an exquisite design.
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X