என்ன இத்தன எலெக்ட்ரிக் கார்களோட விலை குறைஞ்சிருக்கா... டாடா, எம்ஜி போட்டி போட்டு விலையை குறைச்சிருக்காங்க!
மின்சார வாகனங்களுக்கு பேட்டரி மிகவும் முக்கியமானது. ஆனால், இப்போதைய நிலவரப்படி பேட்டரியை தயாரிக்க தேவைப்படும் மூலக்கூறுகள் மிகவும் காஸ்ட்லியானதாக உள்ளன. இதனாலேயே எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும் மிகவும் உயர்ந்தவையாக இருக்கின்றன. இதனாலேயே பலருக்கு எட்டாக் கனியாக மின்சார வாகனங்கள் விளங்குகின்றன. அதேவேளையில், பேட்டரிகளின் விலை சமீப சில நாட்களாக குறைய ஆரம்பித்திருக்கின்றது.
அந்தவகையில், சமீபத்தில் மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளின் விலை எதிர்பார்த்திராத அளவில் குறைந்தது. இதன் தொடர்ச்சியாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில அதன் குறிப்பிட்ட மின்சார கார் மாடல்களின் விலையைக் குறைத்தன. அந்தவகையில், எந்தெந்த நிறுவனங்கள்? எந்தெந்த கார் மாடல்களின் விலையைக் குறைத்திருக்கின்றது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

டாடா டியாகோ இவி (Tata Tiago EV): இந்தியாவில் பேட்டரி விலை குறைப்பின் காரணமாக விலை குறைக்கப்பட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்களில் டாடா மோட்டார்ஸின் விலை குறைவான மின்சார கார் மாடலான டியாகோ இவி-யும் ஒன்றாகும். இந்த காரின் விலையை ரூ. 70 ஆயிரம் வரை டாடா மோட்டார்ஸ் குறைத்திருக்கின்றது.
இப்போது இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. டாடா டியாகோ இவி ஓர் முழு சார்ஜில் 315 கிலோ மீட்டர் ரேஞ்ஜை வழங்கும்.

மேலும், இதனை ஃபாஸ்ட் சார்ஜரில் வைத்து சார்ஜ் செய்யும்போது வெறும் 58 நிமிடங்களிலேயே 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. டியாகோ இவி இந்தியாவில் மொத்தம் 7 விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV): இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலாக நெக்ஸான் இவி இருக்கின்றது. இந்த கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனையே சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் விலையிலேயே டாடா தற்போது 35 ஆயிரம் தொடங்கி ரூ. 1.2 லட்சம் வரையில் விலையை குறைத்திருக்கின்றது.

ஆமாங்க டியாகோ இவியைத் தொடர்ந்து நெக்ஸான் இவியையும் அது குறைத்திருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி டாடா நெக்ஸான்.இவி-யின் ஆரம்ப விலை ரூ.14.49லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 465கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இதையும் ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்தால் 56நிமிடங்களிலேயே சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.
எம்ஜி கோமெட் இவி (MG Comet EV): இந்தியாவின் மிகவும் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக கோமெட் இவி காட்சியளிக்கின்றது. இதன் விலையும் தற்போது இந்தியாவில் குறைந்திருக்கின்றது. மாபெரும் தள்ளுபடியை இந்த கார் மாடலில் எம்ஜி செய்திருக்கின்றது. 1.4 லட்சம் வரையில் இதன் விலை குறைக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இப்போது இதன் ஆரம்ப விலை இன்னும் பலமடங்கு குறைந்துள்ளது.
ரூ. 6.99 லட்சத்திற்கே கோமெட் இவி விற்பனைக்குக் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றது. இதன் அதிகபட்ச விலையே ரூ. 8.58 லட்சம் ஆகும். இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. கோமெட் இவி-யில் ஓர் முழு சார்ஜில் 230 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக கோமெட் இவியில் 17.3 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
எம்ஜி இசட்எஸ் இவி (MG ZS EV): இந்தியாவில் விற்பனைக்கும் காஸ்ட்லியான எலெக்ட்ரிக் கார் மாடல்களில் ஒன்றாக இசட்எஸ் இவி காட்சியளிக்கின்றது. இந்த காரின் விலையும் தற்போது குறைக்கப்பட்டு இருக்கின்றது. ஆமாங்க, எம்ஜி நிறுவனம் கோமெட் இவியைத் தொடர்ந்து தற்போது இசட்எஸ் இவி-யின் விலையையும் குறைத்திருக்கின்றது.
ரூ. 3.9 லட்சம் வரை இதன் விலையை எம்ஜி குறைத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாபெரும் விலை குறைப்பால் இசட்எஸ் இவியின் ஆரம்ப விலையே ரூ. 18.98 லட்சமாக மாறி இருக்கின்றது. மேலும், இதன் அதிகபட்ச விலை ரூ. 25.8 லட்சமாகவும் காட்சியளிக்கின்றது.
இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஓர் முழு சார்ஜில் 461 கிலோ மீட்டர் வரை ரேஞ்ஜ் தரும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 50.3 kWh பேட்டரி பேக்கே இசட்எஸ் இவியில் வழங்கப்பட்டு இருக்கின்றது. பேட்டரி பேக்கில் மட்டுமல்ல பிரீமியம் அம்சங்களும் இந்த காரில் மிக தாராளமாக வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இனி வரும் நாட்களில் பெட்ரோல் வாகனங்களைப் போலவே மின்சார வாகனங்களும் பலமடங்கு குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான ஆரம்ப புள்ளியாகவே சமீபத்திய விலை குறைப்பு சம்பவம் அமைந்து உள்ளது. அதேவேளையில், வாகன உற்பத்தியாளர்கள் உப்பு போன்ற மலிவு விலை மூலக் கூறுகளால் பேட்டரி பேக்கை தயாரிக்க ஆரம்பித்திருக்கின்றன. இது லித்தியம் அயன் பேட்டரி பேக்கைக் காட்டிலும் மிக மிக விலை குறைவான மூலக்கூறு ஆகும்.


Click it and Unblock the Notifications









