இத்தன கிரிக்கெட் வீரர்களுக்கு தார் காரை பரிசாக வழங்கி இருக்கா மஹிந்திரா! இந்த சூப்பரான கார நமக்கும் தருவாங்களா

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் நாட்டுக்கு பெருமிதம் சேர்க்கும் விதமாக சாதனை புரிபவர்களை இதுவரை கௌரவிக்க தவறியதில்லை. நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சாதனையாளர்களை பாராட்டி புகழ்ந்து தள்ளுவார் என்றால், அந்த நிறுவனம் அவர்களை பரிசு மழையால் நனைய செய்யும். குறிப்பாக, நிறுவனம் அதன் பிராண்ட் நியூ கார்களை இதுநாள் வரை பலருக்கு பரிசாக வழங்கி இருக்கின்றது.

அந்தவகையில், மஹிந்திரா நிறுவனத்தின் புகழ்பெற்ற கார் மாடலான தார் எஸ்யூவி (Thar SUV) காரை பரிசாக பெற்றவர்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். யார் யாருக்கு, என்ன காரணத்திற்காக அக்கார் பரிசாக வழங்கப்பட்டது என்பது பற்றிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Mahindra thar as gift

சர்ஃபராஸ் கான்: இவர் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலே முதல் முறையாக இந்தியாவிற்காக களமிறங்கினார். தன்னுடைய இந்த முதல் போட்டியிலேயே வரலாற்று சிறப்புமிக்க சாதனையை அவர் செய்தார். இரட்டை சதத்தை அடித்தார். இந்த மிக சிறந்த ஆட்டத்திற்கு பரிசளிக்கும் விதமாகவே அவருக்கு மஹிந்திரா நிறுவனம் தார் காரை பரிசாக வழங்கி கவுரவித்தது. சர்ஃபராஸ் கானின் தந்தை நவுசத் கான் கைகளிலேயே இந்த கார்களுக்கான சாவி ஒப்படைக்கப்பட்டது.

சுப்மான் கில்: மஹிந்திரா நிறுவனத்தின் தார் காரை பரிசாக பெற்ற மற்றொரு கிரிக்கெட் வீரர் இவர் ஆவார். 2021ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இவர் மிக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அறிமுகமான, தன்னுடைய முதல் ஆட்டத்திலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-1என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற இவர் ஆற்றிய பங்கு மிகப் பெரியது ஆகும். அவர் பார்டர் கவாஸ்கர் டிராஃபி 2020-21போட்டியில் அதிக ரன் எடுத்தவராகவும் காட்சியளிக்கின்றார்.

மொஹமத் சிராஜ்: சுப்மான் கில் உடன் இணைந்து இந்தியாவிற்கான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தவராக மொஹமத் சிராஜ் இருக்கின்றார். பார்டர்-கவாஸ்கர் டிராஃபி 2020-21 போட்டிியல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவராகவும் இவர் காட்சியளிக்கின்றார். இந்த காரணத்திற்காகவே அவருக்கு மஹிந்திரா நிறுவனம் தார் காரை பரிசாக வழங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

சர்துல் தாக்கூர்: மஹிந்திரா தார் காரை பரிசாக பெற்ற முன்னணி கிரிக்கெட் விளையாட்டு வீரர்களில் இந்தியாவின் ஃபாஸ்ட் போவ்ளரும் ஒருவர் ஆவார். இவர் சமீபத்திலேயே இந்த காரை பரிசாக பெற்றார். இந்த பரிசை அவரே அவருடைய சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக சிறந்த ஆட்ட நாயகன் இவர் ஆவார். இவர் சமீபத்தில்கூட 2024ராஞ்சி கோப்பை போட்டியில் 10 விக்கெட்டுகளை அசால்டாக வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

தமிழக வீரர் நடராஜன்: மஹிந்திரா நிறுவனம் தமிழக்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கும் அதன் தார் காரை பரிசாக வழங்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது. 2020-21 பார்டர்-கவாஸ்கர் ட்ராஃபி போட்டியில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த இந்தியர்களின் மனதையும் ஈர்த்தார் நடராஜன். இத்தகைய மிக சிறப்பான ஆட்டத்திற்காகவே அவருக்கு மஹிந்திரா தார் கார் பரிசாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி ரக கார் மாடல்களில் தார்-ம் ஆகும். சமீபத்திலேயே இந்த காரின் விலைகள் உயர்த்தப்பட்டன. விலை உயர்வின் காரணமாக தார் காரின் ஆரம்ப விலை ரூ. 11.25 லட்சமாகவும், அதிகபட்ச விலை ரூ. 17.20 லட்சமாக அதிகரித்திருக்கின்றது.

ஆஃப்-ரோடு பிரியர்களின் மனம் கவர்ந்த கார் மாடாலகவும் மஹிந்திரா தார் காட்சியளிக்கின்றது. இந்த காரில் 4 வீல் டிரைவ் மற்றும் ரியர் வீல் டிரைவ் என இரு விதமான ஆஃப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன், 2.0 லிட்டர்'டர்போசார்ஜட் பெட்ரோல், 2.2 லிட்டர் டீசல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகிய மோட்டார் ஆப்ஷன்களே தார் எஸ்யூவியில் வழங்கப்படுகின்றன.

கியர்பாக்ஸைப் பொருத்தவரை 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆகியவை வழங்கப்படுகின்றன. இவற்றில் 2 வீல் டிரைவ் வசதிக் கொண்ட டீசல் தார் காருக்கே நாட்டில் மிக அமோகமான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரில் டீசல் ஆப்ஷன் வழங்கப்படுகின்ற காரணத்தினாலேயே மாருதி சுஸுகி ஜிம்னியைக் காட்டிலும் தார் காருக்கு மிக சிறப்பான வரவேற்பு நாட்டு மக்களிடையே கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் சாதனை வீரர்களுக்கு மட்டுமல்ல கேரளாவில் உள்ள ஐயப்பன் கோவில் போன்ற புனித ஸ்தளங்களுக்கும் கார் பரிசை வழங்கி இருக்கின்றது. இதேபோல், செஸ் போட்டியில் சாதனைப் படைத்த பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கும் ஆனந்த் மஹிந்திரா காரை பரிசாக வழங்கி இருக்கின்றார். அனைத்து கார் பரிசளிப்பும் இவரின் பரிந்துரையிலேயே வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 22, 2024, 5:00 [IST]
English summary
Here is list of cricketers who got thar as a gift from mahindra
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+