புதுசா கார் வாங்க போறீங்களா! டாப்5 ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் கொண்ட கார்கள் லிஸ்ட்! எல்லாமே எஸ்யூவி கார்
இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் டாப் ஐந்து ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் அம்சம் கொண்ட கார்களின் லிஸ்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். அதுவும் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் எஸ்யூவி ரக கார் மாடல்களின் லிஸ்டையே தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
டாடா பன்ச் (Tata Punch): இந்தியாவின் மிக சிறந்த பாதுகாப்பை வழங்கும் எஸ்யூவி ரக கார் மாடல் இதுவாகும். பாதுகாப்பை வழங்கும் விஷயத்தில் இந்த கார் ஐந்து நட்சத்திர ரேட்டிங்கைப் பெற்றிருக்கின்றது. இந்த கார் ரூ. 6.13 லட்சம் தொடங்கி ரூ. 10.20 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

மேலும், இந்தியாவில் ரூ. 10 லட்சத்திற்கும் குறைவான விலையில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் அம்சத்தைத் தாங்கிய கார் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது. உயர்நிலை தேர்வான கிரேயேட்டீவ்-லேயே அந்த அம்சம் வழங்கப்படுகின்றது. இதன் விலை ரூ. 8.85 லட்சம் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter): இந்தியாவில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் அம்சம் கொண்ட மற்றுமொரு விலை குறைவான கார் மாடலாக எக்ஸ்டர் காட்சியளிக்கின்றது. டாடா பஞ்ச் காருக்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்ட கார் மாடலே இதுவாகும். இந்த காரும் பஞ்ச் கார் மாடலை போலவே மலிவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

அதன் ஆரம்ப விலை ரூ.6.13 லட்சம் ஆகும். உச்சபட்ச விலை ரூ.10.28 ஆகும். இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த கார் மாடலின் உயர்நிலை தேர்விலேயே ஆட்டோமேட்டிக் க்ளைமேட் அம்சம் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதன் விலை ரூ.8.23 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆட்டோமேட்டிக் க்ளைமேட் அம்சத்தைப் போலவே இன்னும் பல பிரீமியம் தர அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
நிஸான் மேக்னைட் (Nissan Magnite): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை கார் மாடல்களில் நிஸான் மேக்னைட்டும் ஒன்றாகும். இந்த கார் மாடல் இந்தியாவில் ரூ. 6 லட்சம் தொடங்கி ரூ. 11.27 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் உயர்நிலை தேர்வான எக்ஸ்எல் வேரியண்டிலேயே ஆட்டோமேட்டிக் க்ளைமேட் அம்சம் கிடைக்கிறது. அதன் விலை ரூ. 7.04 லட்சம் ஆகும்.

ரெனால்ட் கைகர் (Renault Kiger): நிஸான் மேக்னைட் போலவே இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கம் மற்றுமொரு மலிவு விலை கார் மாடலாக கைகர் இருக்கின்றது. இந்த கார் மாடலின் ஆர்எக்ஸ்டி (ஓ) எனும் தேர்விலேயே ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் அம்சம் வழங்கப்படுகின்றது. இதன் விலை ரூ. 8 லட்சம் ஆகும். அதேவேளையில், கைகரின் ஆரம்ப நிலை தேர்வை ரூ. 6 லட்சம் விலையில் இருந்து வாங்கிக் கொள்ள முடியும்.
டாடா நெக்ஸான் (Tata Nexon): 'லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்' ஆமாங்க, இந்த பட்டியலின் கடைசி கார் மாடல் இதுவாகும். அதேவேளையில், மிக சிறந்த கார் மாடலும் இதுவாகும். இந்தியாவின் மிக மிக அதிக பாதுகாப்பு வசதிகள் நிறைந்த கார் மாடலாக நெக்ஸான் காட்சியளிக்கின்றது. டாடா பஞ்ச் கார் மாடலைப் போலவே பாதுகாப்பு விஷயத்தில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களை இந்த கார் மாடல் குவித்திருக்கின்றது.

இந்த கார் மாடலின் ப்யூர் எனும் ட்ரிம்மிலேயே ஆட்டோமேட்டிக் ஏசி சிஸ்டம் உள்ளிட்ட பலதரப்பட்ட பிரீமியம் தர அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இந்த அம்சம் கொண்ட டாடா நெக்ஸான் ரூ. 9.80 லட்சம் என்கிற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேவேளையில், இதன் ஆரம்ப நிலை தேர்வோ ரூ. 8.15 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த லிஸ்ட்டில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் அம்சம் கொண்ட எஸ்யூவி கார்களின் லிஸ்டையே வழங்கி இருக்கின்றோம். அனைத்தும் பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலைக் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









