பைக்கை வாங்குறதுக்கு பதிலா மாருதியோட இந்த கார வாங்கிடலாம்போல! ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரின் ஹைலைட்ஸ்!
இந்தியர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த மாருதி சுஸுகி (Maruti Suzuki) கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் மாடலின் சிஎன்ஜி (Swift CNG) வெர்ஷன்தான் அது ஆகும். இந்த காரின் வருகையின் மீதான எதிர்பார்ப்பு மிக நீண்ட நாட்களாக இந்தியர்கள் மத்தியில் காணப்பட்டு வந்தது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே யாரும் எதிர்பார்த்திராத நேரத்தில் இந்த காரை மாருதி சுஸுகி இன்று (செப்டம்பர் 12) விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. சர்ப்ரைஸாக இந்த காரை அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என்றே கூறலம்.
அதேவேளையில், வருகின்ற திருவிழா காலத்தில் இந்தியர்களை வளைத்து போடும் நோக்கிலேயே இந்த காரை மாருதி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது என கூறப்படுகின்றது. இது எவ்வளவு ரூபாய்க்கு விற்பனைக்கு வந்திருக்கின்றது? இதன் மைலேஜ் திறன் என்ன? மற்றும் இந்த காரில் கவனிக்க வேண்டிய டாப் ஐந்து விஷயங்கள் என்ன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் சிஎன்ஜி எந்தெந்த வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்: ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் ஸ்விஃப்ட் சிஎன்ஜி விற்பனைக்குக் கிடைக்கும். விஎக்ஸ்ஐ சிஎன்ஜி (VXi CNG), விஎக்ஸ்ஐ (ஓ) (VXi (O) CNG), மற்றும் இசட்எக்ஸ்ஐ சிஎன்ஜி (ZXi CNG) ஆகியவையே அவை ஆகும். இதில் ஆரம்ப நிலை தேர்வாக வி இருக்கின்றது.
விலை விபரம்: ஸ்விஃப்ட் சிஎன்ஜி வி வேரியண்டே ஆரம்ப நிலை தேர்வாகும். இதற்கு ரூ. 8 லட்சத்து 19 ஆயிரத்து 500 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. வி(ஓ) வேரியண்டே நடுநிலை தேர்வாக உள்ளது. இதற்கு ரூ. 8 லட்சத்து 46 ஆயிரத்து 500 விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல், இசட்எக்ஸ் சிஎன்ஜி ஆப்ஷனுக்கு அதிகபட்ச விலையாக ரூ. 9 லட்சத்து 19 ஆயிரத்து 500 நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது. இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இதன் விலை ரூ. 2 லட்சம் வரை அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
மைலேஜ் மற்றும் எஞ்சின் விபரம்: 1.2 லிட்டர், 2 சிலிண்டர் இசட்12இ டூயல் விவிடி பெட்ரோல் எஞ்சினையே இந்த காரில் மாருதி சுஸுகி பயன்படுத்தி இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 69 பிஎச்பி மற்றும் 102 என்எம் டார்க்கை வெளியேற்றும். சிஎன்ஜியில் இயங்கும்போதே இந்த ஆற்றலை இது வெளியேற்றும்.
இந்த காரை பெட்ரோலிலும் இயக்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், அதிக மைலேஜை நீங்கள் பெற வேண்டும் என்றால் சிஎன்ஜி மோடில் மட்டுமே அது முடியும். ஒரு கிலோ சிஎன்ஜிக்கே இந்த கார் அதிகபட்சமாக 32.85 கிமீ வரையில் மைலேஜ் தரும். இது அராய் சான்றளித்த மைலேஜ் திறன் ஆகும்.
இந்த மைலேஜ் திறன் சில உயர்வகை மோட்டார்சைக்கிள்களுக்கு இணையானது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இது முந்தைய வெர்ஷனைக் காட்டிலும் 6 சதவீதம் அதிகம் மைலேஜ் திறன் ஆகும். முந்தைய வெர்ஷனில், 1.2 லிட்டர் கே சீரிஸ் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஸ்விஃப்ட் சிஎன்ஜியில் அதிகபட்சமாக 60 லிட்டர் அளவுள்ள சிஎன்ஜி சிலிண்டர் வழங்கப்பட்டு இருக்கின்றது.
டெலிவரி பணி எப்போது தொடங்கும்? மாருதி சுஸுகி இந்த அதிகம் மைலேஜ் தரும் புதிய சிஎன்ஜி காரை அடுத்த மாதம் 12 ஆம் தேதியில் இருந்து டெலிவரி கொடுக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காருக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
புதிய ஸ்விஃப்ட் விற்பனைக்கு வந்த நான்கு மாதங்களில் 67 ஆயிரம் யூனிட்டுகள் வரை விற்பனையாகிவிட்டன. இந்த மாதிரியான சூழலிலேயே அதன் விற்பனையை மேலும் பூஸ்ட் செய்யும் விதமாக மாருதி சுஸுகி நிறுழனம் தற்போது புதிதாக சிஎன்ஜி வெர்ஷனையும் இந்த கார் மாடலில் விற்பனைக்கு இணைத்து இருக்கின்றது.
ஸ்விஃப்ட் சிஎன்ஜியில் வழங்கப்பட்டு இருக்கும் சிறப்பம்சங்களின் லிஸ்ட்: மாருதி சுஸுகி இந்த காரில் ஏகப்பட்ட சிறப்பம்சங்களை வாரி வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், ஸ்மார்ட் பிளே ப்ரோ வசதிக் கொண்ட 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் திரை, சுஸுகி கன்னெக்ட் தொழில்நுட்பத்துடன் ஸ்விஃப்ட் சிஎன்ஜி காரில் வழங்கப்பட்டு உள்ளது.
இதுதவிர, 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோக்ராம், ஹில் ஹோல்டு அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பின் பக்கத்திற்கான ஏசி துவாரங்கள், ஒயர்லெஸ் சார்ஜர், 60:40 ஸ்பிளிட் வசதிக் கொண்ட பின் பக்க இருக்கைகள் ஆகியவையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை அனைத்தும் இணைந்து ஸ்விஃப்ட் காரை அட்வான்ஸ்டான சிஎன்ஜி காராக மாற்றியிருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காருக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அதிக மைலேஜ் திறனுடன் இதன் சிஎன்ஜி வெர்ஷன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. எனவே வரும் நாட்களில் இந்த கார் நாட்டின் நம்பர் 1 விற்பனையாகும் கார் மாடலாக மாறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








