குடும்பத்தோடு டிராவல் செய்யலாம்! விரைவில் இந்தியா வரவுள்ள ஃபேமிலிகளுக்கான மலிவு விலை கார்!

இந்திய சந்தையில் அதிக நபர்கள் பயணிப்பதற்கு ஏற்ற கார்கள் பல விற்பனைக்குக் கிடைக்கின்றன. அதாவது, அதிக இருக்கைகள் வசதிக் கொண்ட கார்கள் அதிக எண்ணிக்கையில் நம் நாட்டில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ரெனால்ட் ட்ரைபர், மாருதி சுஸுகி எர்டிகா, டொயோட்டா ருமியன், கியா கேரன்ஸ், மஹிந்திரா மராஸ்ஸோ, மாருதி சுஸுகி எக்ஸ்எல்6 உள்ளிட்ட கார் மாடல்களே அதிக இருக்கைகள் வசதியுடன் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

இதுதவிர, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா, டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ், கியா கார்னிவல் மற்றும் டொயோட்டா வெல்ஃபையர் ஆகிய பிரீமியம் தர கார் மாடல்களும் அதிக பேர் பயணிக்கின்ற வகையில் அதிக இருக்கைகள் வசதியுடன் நாட்டில் கிடைத்து வருகின்றன. இவற்றின் வரிசையிலேயே வெகு விரைவில் இன்னும் சில புதுமுக கார் மாடல்கள் அதிக இருக்கைகள் வசதியுடன் விற்பனைக்கு இணைய உள்ளன.

Upcoming affordable mpv cars

இவற்றின் இணைவை அந்தந்த கார் உற்பத்தி நிறுவனங்களும் உறுதி செய்திருக்கின்றன. அந்த கார் மாடல்கள் என்னென்ன? அவற்றில் என்ன மாதிரியான சிறப்பு வசதிகளை எதிர்பார்க்கலாம்? இதில் ஏதேனும் மலிவு விலையில் விற்பனைக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றதா? இதுபோன்ற முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

நிஸான் ட்ரைபர் (Nissan Triber) அடிப்படையிலான மலிவு விலை எம்பிவி கார்: இந்தியாவில் நிஸான் நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மலிவு விலை எம்பிவி ரக கார் மாடலாக ட்ரைபர் இருக்கின்றது. இந்தியாவின் விலை குறைவான எம்பிவி கார் மாடலும் இதுவே ஆகும்.

Nissan affordable mpv cars

இதைவிட இன்னும் விலை குறைவான எம்பிவி காரையே ரெனால்ட் இந்தியாவில் களமிறக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர நிறுவனம் இரண்டு எஸ்யூவி ரக கார்களை விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றது. இதன் மலிவு விலை எம்பிவி கார் ட்ரைபரின் பிளாட்பாரத்தைத் தழுவியே உருவாக்கப்பட இருக்கின்றது.

அதாவது, எஞ்ஜின் மற்றும் சிறப்பம்சங்கள் என பலவற்றில் இந்த இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கும். இப்போது விற்பனையில் இருக்கும் ட்ரைபர் காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 71 பிஎச்பி பவரையும், 96 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதே திறன் கொண்ட மோட்டாரே ரெனால்ட்டின் மலிவு விலை புதிய எம்பிவியிலும் இடம் பெற இருக்கின்றது.

மாருதி சுஸுகியின் காம்பேக்ட் எம்பிவி: மாருதி சுஸுகி நிறுவனத்தின் மலிவு விலை எம்பிவி ரக கார் மாடலாக எர்டிகா இருக்கின்றது. இதைவிட குறைவான விலைக் கொண்ட மற்றும் குட்டியான தோற்றம் கொண்ட புதுமுக எம்பிவி-யையே இந்தியர்களுக்கா மாருதி சுஸுகி விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

சுஸுகி நிறுவனம் ஜப்பானில் குட்டி எம்பிவி ரக கார் மாடல் ஒன்றை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஸ்பேசியா எனும் பெயரிலேயே அந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. வேகன்ஆர் காருக்கு மினி வேன் தோற்றம் கொடுத்ததைப் போல் இருக்கும் அந்த காரையே லேசாக பட்டி-டிங்கரிங் வேலை பார்த்து இந்தியாவிற்கான மலிவு விலை எம்பிவியாக மாருதி சுஸுகி விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலை மலிவானதாக இருந்தாலும், பிரீமியம் அம்சங்கள் மற்றும் கவர்ச்சிக்கு இந்த காரில் சிறிதும் பஞ்சம் இருக்காது என கூறப்படுகின்றது. ஆனால், இது எப்படி இருக்கும் என்பதை அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு பின்னரே தெரிய வரும். தொடர்ந்து எர்டிகாவில் உள்ள அம்சங்கள் பலவற்றை இந்த காரில் எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக இருக்கைகள் கொண்ட கார் மாடலுக்கு நல்ல வரவேற்பு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் எம்பிவி ரக கார்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. மேலே பார்த்த இரண்டு கார் மாடல்களும் இந்த வருட இறுதி அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 13, 2024, 21:06 [IST]
English summary
Here we listed upcoming affordable mpv cars
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X