அமெரிக்க நிறுவனத்துடன் சேர்ந்து ஹீரோ செய்ய போகும் சம்பவம்.. நாடே ஹீரோவ தலையில தூக்கி வச்சு கொண்டாட போகுது!
இரண்டு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியர்களுக்காக அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் இணைந்து தரமான வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் இந்தியாவிற்காகவும், இந்தியர்களுக்காகவும் ஓர் மினி பைக் (Mini Bike)-கை உருவாக்கும் பணியிலேயே ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. அது எலெக்ட்ரிக் பைக் என கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தக் கூடிய தகவலே தற்போது வெளியாகி உள்ளன. அதாவது, அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து ஹீரோ மோட்டோகார்ப் தயார் செய்துக் கொண்டிருக்கும் அந்த மினி இ-பைக்கின் வரைபடமே தற்போது வெளியாகி இருக்கின்றது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் (Zero Motorcycles) உடன் கூட்டணியைத் தொடங்கியது. ஏற்கனவே ஹீரோ நிறுவனம் ஹார்லி டேவிட்சன் போன்ற உலக புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நிலையிலேயே மற்றுமொரு வெளிநாட்டு நிறுவனமான ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் உடன் ஹீரோ கை கோர்த்திருக்கின்றது. இந்த இணைவைத் தொடர்ந்து, ஜீரோ நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகள் சிலவற்றை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் ஹீரோ நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஜீரோ நிறுவனத்தின் ஓர் சூப்பரான தயாரிப்பான எஃப்எக்ஸ்இ (FXE) எலெக்ட்ரிக் பைக் மாடலை நாட்டில் சோதனையோட்டத்திற்கு உட்படுத்தியது.
எனவே விரைவில் ஜீரோவின் இந்த இ-பைக் நாட்டில் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ் உடன் இணைந்து மினி பைக்கையும் தயார் செய்யும் பணியில் ஹீரோ களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஓர் குட்டியான வாகனம் என்பதால் மலிவு விலையில் அது விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போது வெளியாகி இருக்கும் மினி பைக்கின் படம் ஹோண்டா க்ரோம் உடன் ஒத்துப்போகும் வகையில் இருக்கின்றது. எனவே இதன் வருகை க்ரோம் போன்ற சிறிய உருவம் கொண்ட டூ-வீலர்களுக்கு மிகப் பெரிய சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இதன் குட்டியான தோற்றம் நகர்புற பயன்பாட்டிற்கு உகந்த பைக்காக அது இருக்கும் என்பதை உறுதிபடுத்துகின்றது.
தொடர்ந்து, சிறந்த பயன்பாட்டு அனுபவத்தை வழங்கும் விதமாக இந்த வாகனத்தில் ஹீரோவும், ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ்-ம் இணைந்து பல்வேறு சிறப்பு வசதிகளை வழங்கி இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. அந்தவகையில், இந்த குட்டி எலெக்ட்ரிக் பைக்கில் கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக்கே வழங்கப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆகையால், தேவைக்கேற்ப பேட்டரியைக் கழட்டிச் சென்று சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். ஆனால், இப்போதைய ஜீரோ மோட்டார்சைக்கிள்ஸ்-இன் எந்தவொரு தயாரிப்பிலும் இந்த வசதியைக் காண முடியாது என்பது கவனிக்கத்தகுந்தது. எனவே, அந்த நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளைக் காட்டிலும் முற்றிலும் தனித்துவமான தயாரிப்பாக இந்த இ-பைக் இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
இது ஓர் நகர்புற பயன்பாட்டு வாகனமாக வர இருப்பதால் கணிசமான அளவிலேயே ரேஞ்ஜ் திறனை வழங்கக் கூடியதாக அது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஓர் முழு சார்ஜில் 120 கிமீ முதல் 180 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரக் கூடியதாக இது விற்பனைக்கு வராலம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இந்த வாகனம் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவில் ஹீரோ தன்னுடைய குட்டியான இ-பைக் பற்றிய விபரங்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், எலெக்ட்ரிக் பைக்கின் வருகை பற்றிய விபரங்களையும் அது விரைவிலேயே வெளியிடும் என நம்பப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போதைக்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமே இந்திய மின்சார வாகன பிரிவின் முன்னணி பிராண்டாக இருக்கின்றது. இது சமீபத்தில் ரோட்ஸ்டர் எனும் இ-பைக் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு போட்டியளிக்கும் நோக்கிலேயே விரைவில் ஹீரோ நிறுவனம் ஜீரோவின் எஃப்எக்ஸ்இ எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








