இந்த கலர் காரை தான் மக்கள் அதிகம் விரும்புறாங்களா? என்ன கலருன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வண்ணங்கள் மிக முக்கியமான பேச்சாக மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆட்டோமொபைல் துறையை பொருத்தவரை ஒரு வாகனம் வாங்கும் போது அதன் வண்ணம் மிக முக்கியமான தேர்வாக இருக்கிறது. இப்படியாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் வண்ணம் கொண்ட கார்களை பற்றி தான் இங்கே காண போகிறோம்.

தற்போது ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஹோலி பண்டிகையில் வண்ணம் மிக முக்கிய இடத்தை பெறுகிறது. ஒருவருக்கொருவர் வண்ணம் பூசி மகிழுந்து கொள்ளும் இந்த ஹோலி பண்டிகையில், ஆட்டோமொபைல் துறையிலும் வண்ணம் என்பது மிக முக்கிய இடத்தை பிடிக்கிறது. ஒரு வாகனத்தை தேர்வு செய்யும் போது அது என்ன வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதை வாடிக்கையாளர்கள் விருப்பப்படி தேர்வு செய்கிறார்கள்.

holi 2024

வாகன தயாரிப்பு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களின் விருப்பத்தை முன்கூட்டியே அறிந்து அதற்கு ஏற்றார் போல் அவர்கள் வாகனங்களில் வண்ண ஆப்ஷன்களை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் வகையில் வழங்கி வருகிறார்கள். இப்படியாக இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்களில் அதிக தேர்வை பெறும் வண்ணங்கள் பற்றி ஒரு ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.

இந்தியாவில் ஆட்டோமொபைல் வாடிக்கையாளர்கள் தங்கள் வாங்கும் வாகனத்தின் கலரை தேர்வு செய்யும்போது பல்வேறு விதமான யோசனைகளை மனதில் வைத்து காரின் கலரை தேர்வு செய்கிறார்கள். அவர்களுக்கு பிடித்தமான கலர் என்பது மட்டுமல்லாமல் குறிப்பிட்ட காரின் வடிவமைப்பிற்கு அந்த நிறம் ஏற்றதாக இருக்கிறதா? உள்ளிட்ட ஏகப்பட்ட விஷயங்களை வாடிக்கையாளர்களே ஆய்வு செய்துதான் முடிவு செய்கிறார்கள்.

holi 2024

கலரை தேர்வு செய்யும் போது இந்தியாவில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட நேரங்களில் அதிகம் தேர்வு செய்வதாக தெரிகிறது. அதன்படி பார்த்தால் இந்தியாவில் அதிகமான மக்கள் வெள்ளை நிறத்திலேயே வாகனங்களை வாங்க விரும்புகிறார்கள். இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெள்ளை நிறத்திலேயே வேறு வேறு ஷேடுகளை எல்லாம் அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர முயற்சி செய்து வருகின்றன.

இது மட்டுமல்ல இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது ஆக்கிரோமேட்டிக் கலர்களான கருப்பு மற்றும் கிரே ஆகிய நிறங்களும், அதிக தேர்வை பெறும் நேரங்களில் ஒன்றாக இருக்கிறது. அதே நேரத்தில் இதே ஷேடை கொண்ட சில்வர் மற்றும் வைட் க்ரே ஆகிய கலர்களும் இந்தியாவில் விற்பனையாகும் கார்களின் கலர்களின் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கிறது.

holi 2024

சமீப காலமாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் நீளம் மற்றும் சிவப்பு ஆகிய நிறங்களில் பல்வேறு ஷேடுகளை அறிமுகப்படுத்தி அந்த நேரத்தில் வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதுவும் மக்களை கவரும் வகையில் இருக்கிறது. சமீப காலமாக நீல நிற ஷேடுகளில் உள்ள கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின்றன. கருப்புக்கு அடுத்த இடத்தில் நீல நிற கார்கள் தான் அதிகமாக விற்பனையாகி வருகிறது.

குறிப்பாக விலை உயர்ந்த கார்கள் என்றால் அதில் நீல நிற ஷேடு நிச்சயம் தேர்வு ஆப்ஷனாக இருக்கும். மக்களும் கருப்பு, வெள்ளையை விட்டுவிட்டு வேறு கலரை தேர்வு செய்ய வேண்டிய இடத்தில் நீல நிறத்தை அதிகம் தேர்வு செய்து வருவதாக தெரிகிறது.

holi 2024

அடுத்ததாக பச்சை நிறத்தை பொருத்தவரை பெரிய அளவில் ஈர்ப்புகள் இல்லை என்றாலும் ஹூண்டாய் எக்ஸ்டர், மஹிந்திரா ஸ்கார்பியோ என், போன்ற கார்கள் எல்லாம் பச்சை நிறத்தில் அறிமுகப்படுத்தியது வாடிக்கையாளர்களை ஓரளவு ஈர்த்துள்ளது என்றே சொல்லலாம். சமீப காலமாக பச்சை நிறத்திலும் வாடிக்கையாளர்களின் தேர்வு இருக்கிறது.

இருப்பதிலேயே குறைவாக மக்கள் மத்தியில் கோல்டன் நிற காரர்கள் தான் தேர்வுகள் குறைவாக இருக்கிறது. ஆனால் சில்வர் நிற கார்கள் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில், கோல்டன் நிற கார்களை மக்கள் பெரிய அளவில் விரும்பவில்லை. இது காருக்கு போலியான லுக்கை தரும் என மக்கள் நினைக்கிறார்கள். இதனால் கோல்டன் நிற கார்களை வாகன தயாரிப்பு நிறுவனங்களே பெரிய அளவில் தயாரிப்பது இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவை பொறுத்தவரை வெள்ளை, கருப்பு,நீலம் ஆகிய கலர்களில் உள்ள கார்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. சிவப்பு மற்றும் பச்சை நிறங்களை கொண்ட கார்கள் அவ்வப்போது டிரெண்டு மாறிக்கொண்டே வருகிறது. முன்பு சிவப்பு நிற காருக்கு நல்ல டிமாண்ட் இருந்தது. தற்போது பச்சை நிற காருக்கு நல்ல டிமாண்ட் மாறி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, March 25, 2024, 16:17 [IST]
English summary
Holi 2024 know car colour preference in india
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X