இந்த வருஷ தீபாவளிக்கு இந்த காரை வாங்க இப்பவே ரெடியாகுங்க! ஹோண்டாவின் செம கார் வரப்போகுது!
ஹோண்டா நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட தனது அமேஸ் காரை இந்த ஆண்டு பண்டிகை காலங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளது. அதன்படி வரும் தீபாவளிக்கு இந்த விற்பனைக்கு வர அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இந்த காரின் உட்புறமும் வெளிப்புறமும் மாற்றம் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹோண்டா நிறுவனம் தற்போது மூன்று கார்களை இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. அதன்படி ஹோண்டா அமேஸ், ஹோண்டா சிட்டி மற்றும் ஹோண்டா எலவேட் ஆகிய கார்கள் விற்பனையாகி வருகின்றன. இதில் ஹோண்டா எலவேட் காருக்கு இந்திய மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வரவேற்பு இருக்கிறது. அந்நிறுவனத்தில் அதிகமாக விற்பனையாகும் காராக இந்த அளவில் கார்தான் இருக்கிறது.

இந்நிலையில் ஹோண்டா அமேஸ் காரும் நீண்ட நாட்களாக நிறுவனத்தில் விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இந்த கார் மார்க்கெட்டில் உள்ள மாருதி டிசையர், ஹூண்டாய் ஆரா, டாடா டியாகோ, ஆகிய கார்களுக்கு போட்டியாக காம்பேக்ட் செடான் செக்மெண்டில் விற்பனையாகி வருகிறது. இந்த கார் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது.
கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் ஹோண்டா நிறுவனம் முதன் முதலில் இந்த காரை அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து 2018-ம் ஆண்டு அடுத்த தலைமுறை ஹோண்டா அமேஸ் கார் அறிமுகமானது. தொடர்ந்து இந்த காரின் சிறப்பான விற்பனையில் இருந்தது. இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல செடான் கார்கள் மீது மக்களுக்கு மோகம் குறைந்து கொண்டே வந்தது.

இதனால் இந்த செக்மெண்டில் விற்பனையாகும் பெரும்பாலான கார்களின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இந்த செக்மெண்டிலேயே சிறப்பாக விற்பனையாகி வரும் காராக மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் தான் இன்றளவும் இருந்து வருகிறது. மாருதி நிறுவனம் மட்டுமே செடான் செக்மெண்டில் நல்ல விற்பனை செய்யும் நிறுவனமாக மாறி உள்ளது.
மாருதி நிறுவனமும் அடுத்த ஆறு மாதங்களில் தனது டிசையர் காரை அப்டேட் செய்து விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டு வரும் நிலையில், ஹோண்டா நிறுவனமும் தனது அமேஸ் காரின் மூன்றாம் தலைமுறை விற்பனை இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் நமக்கு வெளியாகி உள்ள தகவலின் படி இந்த அமேஸ் காரில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட உள்ளன. முக்கியமாக வெளிப்புறத் தோற்றத்திலும் சரி உட்புறத் தோற்றத்திலும் சரி தற்போது உள்ள மார்க்கெட்டில் உள்ள அம்சங்கள் எல்லாம் சேர்க்கப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
புதிய தலைமுறை அமேஸ் கார் ஐந்தாம் தலைமுறை சிட்டி கார் தயாரிக்கப்பட்ட அதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இதே பிளாட்ஃபார்மில் தான் ஹோண்டாவின் சர்வதேச மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் அக்கார்டு ,சிவிக் போன்ற கார்கள் எல்லாம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச தரத்தில் இந்த புதிய தலைமுறை அமேஸ் கார் தயாரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்த காரின் இன்ஜினை பொருத்தவரை 1.2லிட்டர் 4 சிலிண்டர் நேச்சுரல் ஆஸ்யர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்படுகிறது. இது அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும் 110 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் சற்று பிரீமியம் அம்சங்கள் நிறைந்த காராக இருக்கிறது. இதற்காக இந்த காரின் உட்புறத்தில் பெரிய டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கண்ட்ரோல் ஆகியன பொருத்தப்பட உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரின் பாதுகாப்பு அம்சங்களுக்காக அடாஸ் தொழில்நுட்பம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போக ஆறு ஏர் பேக்குகள் கொண்ட சிஸ்டம் இணைக்கப்படுகிறது. இந்த காரின் வருகைக்காக ஏகப்பட்ட நபர்கள் காத்திருக்கிறார்கள். இந்த கார் விற்பனைக்கு வரும்போது சடான் ரசிகர்கள் இந்த காரை அதிகம் வாங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


Click it and Unblock the Notifications









