இந்த தீபாவளிக்கு கார் வாங்க இப்பவே ரெடியாகுங்க! சூப்பரான கார் வரப்போகுது!
ஹோண்டா நிறுவனத்தின் செடான் அமேஸ் கார் இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது அந்நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை காராகும். இந்த தீபாவளிக்கு இந்த கார் விற்பனைக்கு வரும் என கூறப்படும் நிலையில் இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை வெளியிடுவார்கள். தீபாவளி நேரத்தில் புதிய வாகனங்களை வாங்குவது என்பது இந்தியர்களுக்கு மிகப்பெரிய செண்டிமெண்டாக இருக்கிறது. இதனால் அந்த காலகட்டங்களில் வாகன விற்பனை என்பது அதிகரிக்கும். அதை குறிவைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வரிசையாக தங்கள் வாகனங்களை அறிமுகப்படுத்துவார்கள்.

இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் இந்த 2024-ம் ஆண்டு தீபாவளிக்கு தனது அப்டேட் செய்யப்பட்ட அமேஸ் காரை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த கார் கடந்த 2018-ம் ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு தற்போது 2ம் தலைமுறை கார் விற்பனையில் இருக்கிறது. இதை அப்டேட் செய்து அமேஸ் நிறுவனம் விரைவில் மூன்றாம் தலைமுறை காரை விற்பனைக்கு கொண்டு வர உள்ளது.
புதிதாக அப்டேட் செய்யப்பட்டுள்ள அமேஸ் கார் அந்நிறுவனத்தின் சிட்டி, எலவேட் ஆகிய கார்கள் உருவாக்கப்படும் அதே பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ள காராகும். ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி மற்றும் எலவேட் ஆகிய இரு கார்களும் 2,600மிமீக்கும் அதிகமான வீல் பேஸை கொண்ட காராக இருக்கிறது. இதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் அமேஸ் கார் தற்போது 2470மிமீ வீல்பேஸ் தான் இருக்கிறது. அதனால் இந்த பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் குறைந்த வீல்பேஸ் கொண்ட கார் இது தான்.

இந்த புதிய ஹோண்டா அமேஸ் காரின் லுக் குறித்த பெரிய தகவல்கள் எதுவும் இல்லை. இது குறித்து ஹோண்டா நிறுவனமே இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று தான் தெரிகிறது. ஆனால் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படும் ஹோண்டா செடான் கார்களை விட இந்த கார் பெரிய காராக இருக்கும் என எதிர்பார்க்கலாம். தற்போது உள்ள இரண்டாம் தலைமுறை அமேஸ் கார் ஹோண்டா அக்கார்டு காரை இன்ஸ்பயர் செய்யப்பட்டுள்ள டிசைனாக இருக்கிறது.
இந்த மூன்றாம் தலைமுறை ஹோண்டா அமேஸ் காரரின் இன்ஜினை பொறுத்தவரை 1.2 லிட்டர், 4 சிலிண்டர், நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 90 எச்பி பவரையும் 110 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் டீசல் இன்ஜின் கார்களை முற்றிலுமாக நிறுத்திவிட்டது. தற்போது ஹோண்டா அமேஸ் கார் வெறும் பெட்ரோல் இன்ஜின் மட்டுமே விற்பனையாகி வருகிறது. அதே போலவே மூன்றாம் தலைமுறை கார்கள் தொடரும் என எதிர்பார்க்கலாம். ஹோண்டா நிறுவனம் மட்டுமல்ல பல நிறுவனங்கள் டீசல் இன்ஜின்களை முற்றிலுமாக நிறுத்தியதற்கு மாசுக்கட்டுப்பாடு விதிகள் மிக முக்கியமான காரணம் என கூறப்படுகிறது.
இந்த மூன்றாம் தலைமுறை ஹோண்டா அமேஸ் கார் இந்த தீபாவளிக்கு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளியை குறிவைத்து ஹோண்டா நிறுவனம் இந்த காரை வெளியிட்டு தனது விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த கார் மார்க்கெட்டில் உள்ள மாருதி டிசையர், ஹூண்டாய் ஆரா மற்றும் டாடா டிகோர் ஆகிய கார்களுக்கு நேரடி போட்டியாக விற்பனைக்கு வருகிறது.
இந்தியாவில் செடான் கார்களுக்கு மவுசு குறைந்து வருகிறது என மக்கள் மத்தியில் பேச்சு வருகிறது. இந்தியாவில் செடான் கார்களை விரும்பும் மக்கள் எல்லாம் தற்போது எஸ்யூவி ரக கார்களை அதிகம் விரும்புவதால் செடான் கார்களின் விற்பனை சரிந்து வருகிறது இருந்தாலும் ஒரு சிலர் இந்த கார் மீது விருப்பப்பட்டு வாங்குவதால் தொடர்ந்து இந்த கார்கள் விற்பனையில் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டா அமேஸ் கார் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் தற்போது அப்டேட் செய்த நிறுவனம் இந்த தீபாவளிக்கு கலாம் இறக்க உள்ளது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான் அதுவும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களை குறி வைத்து இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளது நிச்சயம் அதன் விற்பனையை அதிகரிக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளன எந்த காரை நீங்கள் வாங்குவீர்களா? மாட்டீர்களா என கமெண்ட் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications









