மாருதிக்கு ஆப்பு வைக்க இதவிட்ட வேற வழியே இல்ல! அமேஸ் மாடலில் சிஎன்ஜி கிட்டை பொருத்தி தரும் ஹோண்டா டீலர்கள்!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் சிறந்த செடான் (Sedan) ரக கார் மாடல்களில் ஹோண்டா அமேஸ் (Honda Amaze)-ம் ஒன்றாகும். இந்த கார் மாடலிலேயே தற்போது சிஎன்ஜி கிட் (CNG Kit)-ஐ பொருத்தும் வசதியை ஹோண்டாவின் அதிகாரப்பூர்வ விற்பனையாளர்கள் (டீலர்கள்) சிலர் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரும்பாலான வாகன உற்பத்தி நிறுவனங்கள் சிஎன்ஜி கிட்-ஐ, கார்களை உற்பத்தி செய்யும் போதே பொருத்தி விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால், ஹோண்டா இன்னும் இதுமாதிரியான பணிகளில் களமிறங்கவில்லை என்பது பலருக்கு வேதனையளிக்கக் கூடிய ஒன்றாக இருந்து வருகின்றது.

இந்த நிலையிலேயே, ஹோண்டா கார் பிரியர்களின் சிஎன்ஜி தாகத்தை தீர்த்து வைக்கும் விதமாக, தேவைப்பட்டால் சிஎன்ஜி கிட்-டை பொருத்திக் கொள்ளலாம் எனும் வசதியை ஹோண்டா கார் விற்பனையாளர்கள் இந்தியாவில் தொடங்கி இருக்கின்றனர். இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

Honda amaze

இந்த மாதிரியான சூழலிலேயே வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அமேஸ் கார் மாடலில் சிஎன்ஜி கிட்-ஐ பொருத்திக் கொள்ளும் வசதி தொடங்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், குறிப்பிட்ட சில டீலர்கள் மட்டுமே இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களும் இதையே கூறுகின்றன.

அதேநேரத்தில், விரைவில் சிஎன்ஜி கார்கள் உற்பத்தியிலும், விற்பனையிலும் முன்னணி வகிக்கும் நிறுவனங்களான டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் ஹூண்டாய் (Hyundai Motor) உள்ளிட்டநிறுவனங்களுக்கு போட்டியளிக்கும் விதமாக அவர்களைப் போலவே ஹோண்டாவும் ஃபேக்டரியிலேயே சிஎன்ஜி கிட்-ஐ பொருத்தி தன்னுடைய கார் மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கூடுதலாக ரூ. 75 ஆயிரம் முதல் ரூ. 85 ஆயிரம் கட்டணத்திலேயே ஹோண்டா கார் விற்பனையாளர்கள் அமேஸ் கார் மாடலை சிஎன்ஜி காராக மாற்றி வழங்கிக் கொண்டிருக்கின்றனர் என கூறப்படுகின்றது. மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட அமேஸ் கார் பயன்பாட்டாளர்களுக்கு மட்டுமே இப்போது அவர்கள் சிஎன்ஜி கிட்டை பொருத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், சிஎன்ஜி கிட்டிற்கு ஓராண்டு வாரண்டியையும் ஹோண்டா கார் விற்பனையாளர்கள் வழங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி ஹோண்டா அமேஸ் ரூ. 7.28 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் அதிகபட்ச விலையே ரூ. 10.04 லட்சம் ஆகும்.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், ஹோண்டா அமேஸ் கார் மாடலை ஒட்டுமொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் வாங்கிக் கொள்ள முடியும். இ (E), எஸ் (S), விஎக்ஸ் (VX) மற்றும் விஎக்ஸ் எலைட் எடிசன் (VX Elite Edition) ஆகியவையே அவை ஆகும்.

1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது பெட்ரோலில் இயங்கும்போது 89 பிஎச்பி-யையும், 110 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். சிஎன்ஜியில் இயங்கும்போது என்ன மாதிரியான திறனை வெளியேற்றும் என்கிற விபரங்கள் வெளியாகவில்லை. ஹோண்டா அமேஸில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷனே இந்த காரில் வழங்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் காம்பேக்ட் செடான் ரக கார் மாடலாக அமேஸ் இருக்கின்றது. ஹோண்டாவின் முக்கிய தயாரிப்பாகவும் இது காட்சியளிக்கின்றது. இத்தகைய கார் மாடலிலேயே டீலர்கள் நிலையில் சிஎன்ஜி கிட்டை பொருத்திக் கொள்ளும் வசதி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இது வழக்கமான பெட்ரோல் ஆப்ஷனைக் காட்டிலும் மிக சிறப்பான மைலேஜை வழங்கும் என எதிர்பார்க்கப்டுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 4, 2024, 18:50 [IST]
English summary
Honda amaze cng kit available select dealerships india
மேலும்... #honda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+