டிசையரை வச்சு செய்ய இவன் போதும்.. பிளான் போட்டுதான் இந்த காரை ஹோண்டா கொண்டு வந்திருக்கு.. ரிவியூ வீடியோ!

ஹோண்டா (Honda) நிறுவனம் அதன் புதிய தலைமுறை அமேஸ் (New-Gen Amaze) கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி சில தினங்கள் ஆகின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த செடான் (Sedan) காரை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு அண்மையில் எங்களுக்கு கிடைத்தது. மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) கார் மாடலுக்கு போட்டியாகக் கொண்டு வரப்பட்டு இருக்கும் இந்த கார் மாடல் குறிப்பிட்ட சில விஷயங்களில் மிகவும் சிறப்பானதாக இருப்பது எங்களின் பார்வைக்கு தென்பட்டத்து. குறிப்பாக, புதிய தொழில்நுட்ப அம்சங்களைத் தாங்கியிருப்பதில் கை தேர்ந்த கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது.

அதுமட்டுமில்லைங்க, சௌகரியமான டிரைவிங் அனுபவத்தை வழங்குவதிலும் புதிய அமேஸ் வேற லெவல் திறன்மிக்கதாகக் காட்சியளிக்கின்றது. குறிப்பாக, அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் இந்த காரில் வழங்கப்பட்டு இருப்பது எல்லாம் வரவேற்கதக்கதாக உள்ளது. இத்தகைய காரின் டிரைவிங் அனுபவத்தையே கீழே உள்ள வீடியோ வாயிலாக உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள முன் வந்திருக்கின்றோம். வாங்க வீடியோவை பார்க்கலாம்.

புதிய ஹோண்டா அமேஸ் காரின் சிறப்புகளை எங்களின் தெளிவான ரிவியூ வாயிலாக அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றோம். இந்த காரை ஹோண்டா நிறுவனம் ரூ. 7.99 லட்சம் என்கிற குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஒரே ஒரு எஞ்சின் தேர்வில் மட்டுமே இது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

Honda amaze compact sedan review video

1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டர் பெட்ரோல் மோட்டார் அது ஆகும். இது அதிகபட்சமாக 89 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றன. இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 18.65 கிமீ முதல் 19.46 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, December 16, 2024, 12:15 [IST]
English summary
Honda amaze compact sedan review video we explain design advanced features and comfort details
மேலும்... #honda #honda amaze #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+