மிகவும் அழகாக தயாராகி இருக்கும் ஹோண்டா காருக்கு புக்கிங் தொடங்கியது.. கண்-மீசை போல லைட்டை கொண்டிருக்கும் கார்!

ஹோண்டா (Honda) நிறுவனம் அதன் புதிய கார் மாடல் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. அதுவேறு ஒன்றும் இல்லைங்க, நான்காம் தலைமுறை அமேஸ் (Amaze) கார் மாடல்தான் அது. இதனை வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி அன்றே இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய இருக்கின்றது. ஹோண்டா அன்றைய தினமே இதன் விலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து, புக்கிங் பணிகளும் அன்றைய தினமே தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே தற்போது புதிய ஹோண்டா அமேஸ் கார் மாடலுக்கான புக்கிங் பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அதிகாரப்பூர்வ புக்கிங் அல்ல என்பது கவனிக்கத்தகுந்தது. ஆமாங்க, டீலர்கள் அளவிலேயே இந்த புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன.

Honda amaze unofficial booking open

அதுவும் குறிப்பிட்ட சில ஹோண்டா கார் விற்பனையாளர்கள் மட்டுமே இந்த புக்கிங் பணிகளைத் தற்போது தொடங்கி உள்ளனர் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. புதிய தலைமுறை என்பதால் அமேஸ் கார் மாடலை வேற லெவலுக்கு தயார் செய்திருக்கின்றது ஹோண்டா. குறிப்பாகவும் மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்டதாக இதனை ஹோண்டா மாற்றியிருக்கின்றது.

இதற்கு மிக சிறந்த உதாரணமாக அக்காரின் முன் பக்கம் உள்ளது. சமீபத்தில் ஹோண்டா நிறுவனம் புதிய அமேஸ் கார் மாடலின் முன்பக்கத்தை விவரிக்கக் கூடிய படங்களை வெளியிட்டு இருந்தது. இதன் வாயிலாகவே அந்த காரின் முகப்பு பகுதி எவ்வளவு அழகானதாக தயார் செய்யப்பட்டு உள்ளது என்பது தெரிய வந்தது.

இந்த காரின் முன் பக்க டீசர் படத்தை மட்டுமல்ல ஸ்கெட்ச் படங்களையும் ஹோண்டா வெளியிட்டிருந்தது என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் வாயிலாக குரோம் அணிகலனைக் கொண்ட செவ்வக வடிவ கிரில், எல்இடி டிஆர்எல் உடன் கூடிய எல்இடி புரஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி பனி மின் விளக்கு, அழகாக்கப்பட்ட பம்பர் மற்றும் அழகான அலாய் வீல் உள்ளிட்டவை இந்த காரில் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

மிக முக்கியமாக இதன் ஹெட்லைட் அமைப்பும், பகல் நேரத்தில் ஒளிரும் லைட்டும் தனித்துவமான தோற்றத்தைக் கொண்டவையாகக் காட்சியளிக்கின்றன. கண்களுக்கு மேலே முறுக்கு மூசை இருப்பதை போல அது இருப்பதை நம்மால் உணர முடிகின்றது. இதுதவிர, சிட்டி மற்றும் எலிவேட் ஆகிய கார் மாடல்களில் காணப்படும் அம்சங்கள் பலவும் இந்த காரில் இடம் பெற்றிருக்கும் என தகலல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஃப்ரீ ஸ்டாண்டிங் அமைப்புக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், பின் பக்கத்தை பார்க்க உதவும் கேமிரா, சிங்கிள் பேன் சன்ரூஃப் மற்றும் பல அம்சங்கள் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன. இதுதவிர, முதல் முறையாக அடாஸ் அம்சத்தையும் இந்த கார் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த அம்சத்தைப் பெறும் எனில் இந்தியாவில் முதல் முறையாக அடாஸ் அம்சத்தைப் பெற்ற காம்பேக்ட் செடான் என்கிற புகழுக்கு புதிய தலைமுறை அமேஸ் ஆளாகும். ரூ. 8 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலேயே அமேஸ் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வருகை டிசையர் உளஅளிட்ட கார் மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையக் கூடும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டா அமேஸ் கார் மாடலின் வருகை காம்பேக்ட் செடான் கார் பிரிவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது. அந்த அளவிற்கு அழகான மற்றும் அதிக சிறப்பம்சங்களைத் தாங்கிய ஓர் காராகவே புதிய தலைமுறை அமேஸ் தயாராகி இருக்கின்றது. இத்தகைய காருக்கே தற்போது அதிகாரப்பூர்வமற்ற புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 27, 2024, 11:34 [IST]
English summary
Honda amaze dealer level bookings open ahead of launch here is more details
மேலும்... #honda #honda amaze #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+