34 கிமீ மைலேஜ் தரும் மாருதி காருக்கு இது போட்டியா! இந்த அம்சத்தை தூக்கி கொடுத்ததே அதை தூக்கி சாப்பிடதான்!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் புதிய தலைமுறை டிசையர் (Dzire) கார் மாடலை இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியாது. யாரும் எதிர்பாராத குறைவான விலை, அதிகம் சிறப்பம்சங்கள் மற்றும் மைலேஜ் திறனுடன் இந்த காரை அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதுதவிர, ஆச்சரியமளிக்கும் விதமாக அந்த கார் குளோபல் என்சிஏபி (Global NCAP) நடத்திய மோதல் ஆய்வில் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கை குவித்து இருக்கின்றது. இதனால் ஒட்டுமொத்த மார்க்கெட்டும் தற்போது ஆடிப்போய் உள்ளது.

குறிப்பாக, செடான் கார் மார்க்கெட்டை புதிய டிசையர் ஒட்டுமொத்தமாக தன் வசம் வளைத்துப் போட்டுக் கொள்ளும் என மிக உறுதியாக நம்பப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே புதிய டிசையர் கார் மாடலுக்கு போட்டியாக விரைவிலேயே களம் காண புதிய ஹோண்டா அமேஸ் (New Gen Honda Amaze) கார் மாடல் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

Honda amaze interior

இதன் வெளியீட்டு நிகழ்வு வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி அன்று அரங்கேற இருப்பதாக கூறப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே புதிய அமேஸ் காரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் ஓர் முயற்சியாக ஹோண்டா நிறுவனம் அதன் டீசர் (Teaser) படங்களை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது.

அந்தவகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் புதிய அமேஸ் காரின் முன் பக்க அழகை விவரிக்கக் கூடிய டீசர் படங்களை அது வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் புதிய அமேஸ் கார் மாடலின் ஸ்கெட்ச் படங்களை வெளியிட்டது. இதன் வாயிலாக இப்போது விற்பனையில் இருக்கும் அமேஸ்-ஸைவிட மிகவும் அழகிய கார் மாடலாக புதிய அமேஸ் தயார் செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

Honda amaze adas

இந்த நிலையிலேயே மற்ற போட்டியாளர்களுக்கு சவால் விட வேண்டும் சில அதிநவீன வசதிகளை இந்த காரில் ஹோண்டா வழங்கி இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. மிக முக்கியமாக அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ட் சிஸ்டம் (ADAS) எனப்படும் சிறப்பம்சம் வழங்கப்பட இருப்பதும் உறுதியாகி இருக்கின்றது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஸ்கெட்ச் படங்கள் வாயிலாகவே இந்த தகவல் உறுதியாகி உள்ளது. ஸ்கெட்ச் படத்தில் அந்த அம்சம் புதிய அமேஸ் காருக்குள் இருப்பதை வெளிக்காட்டியுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு புதிய டிசையர் கார் மாடலில் வேறு எந்த சப்-4 மீட்டர் செடான் காரிலும் இடம் பெற்றிராத சன்ரூஃப் அம்சத்தை வழங்கியிருந்தது.

இதுபோன்ற ஓர் நடவடிக்கையாகவே தற்போது ஹோண்டா நிறுவனம் அதன் அமேஸ் கார் மாடலில் இந்த அடாஸ் அம்சத்தை வழங்கி இருக்கின்றது. இந்த அம்சத்தையும் வேறு எந்த சப்-4 மீட்டர் செடான் காரிலும் பார்க்க முடியாது. ஆகையால், என்னதான் மாருதி சுஸுகி டிசையர் அதிக அம்சங்களைத் தாங்கிய வாகனமாக இருந்தாலும் அடாஸ் அம்சத்தின் வாயிலாக ஹோண்டா அமேஸ் இந்தியர்களின் மனம் கவர்ந்த செடான் ரக காராக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகையால், மிக சிறந்த போட்டியாளனாக டிசையருக்கு இந்த கார் மாடல் மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு மட்டுமல்ல டாடா டிகோர் மற்றும் ஹூண்டாய் அவுரா ஆகிய கார் மாடல்களுக்கும் இந்த வருகை மிகப் பெரிய தலைவலியை ஏற்படுத்தக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹோண்டா நிறுவனம் தன்னுடைய இந்த புதிய அமேஸ் கார் மாடலை மிக மிக அழகான கார் மாடலாக தயார் செய்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே டீசர் படங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இதன் முன் பக்க அழகிற்காகவே பலர் இந்த காரை வாங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முற்றிலும் தனித்துவமான அமைப்பைக் கொண்ட ஹெட்லைட், டிஆர்எல், பான்னெட், பம்பர் மற்றும் கிரில் ஆகியவற்றை இந்த கார் கொண்டிருக்கப்போது உறுதியாகி உள்ளது. இதுதவிர, ஃப்ளோட்டிங் ரக திரை, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆறு ஏர் பேக்குகள் மற்றும் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா உள்ளிட்ட அம்சங்களும் புதிய அமேஸ் கார் மாடலில் எதிர்பார்ப்பக்கப்படுகின்றது.

அதேவேளையில், புதிய அமேஸ் கார் மாடலைப் பொருத்த வரை எஞ்சின் விஷயத்தில் எந்த மாற்றமும் செய்யப்பட்டு இருக்காது என தெரிகின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் அமேஸ் கார் மாடலில் பயன்படுத்தப்படும் அதே எஞ்சினே இதிலும் இடம் பெறும் என கூறப்படுகின்றது. 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் எஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் செடான் ரக கார்களுக்கு என தனி வரவேற்பு உண்டு. இதனால்தான் இந்த கார் மார்க்கெட்டை மையப்படுத்தி இன்னும் முன்னணி கார் உற்பத்தியாளர்கள் புதிய கார் மாடல்களைக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையிலேயே ஹோண்டாவும் புதிய அமேஸ் கார் மாடலை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 14, 2024, 5:00 [IST]
English summary
Honda amaze facelift to launch on december 4 featuring advanced driver assistance system
மேலும்... #honda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X