உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!

ஹோண்டா அமேஸ் (Honda Amaze) கார் க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் வெறும் 2 ஸ்டார்களை பெற்று அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் எந்த மாதிரியான சோதனைகளில் ஹோண்டா அமேஸ் கார் உட்படுத்தப்பட்டது என்பதையும், இந்த ஹோண்டா காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் கார்கள் மார்க்கெட்டில் ஓர் நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே ஹோண்டா போராடி வருகிறது. இருப்பினும், இப்போதுவரையில் இந்திய மார்க்கெட்டில் முன்னிலை கார் நிறுவனம் என்கிற அந்தஸ்தை ஹோண்டா பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணம், விற்பனையில் சக்கை போடு போட்டுவரும் எஸ்யூவி ரக கார்கள் எதுவும் ஹோண்டாவில் இருந்து விற்பனையில் இல்லை.

honda amaze acquired only 2-star

ஹோண்டாவில் இருந்து இந்தியாவில் தற்போதைக்கு ஓரளவிற்கு சுமாராக விற்பனையாகக்கூடியவை என்றால், அவை ஹோண்டா சிட்டி மற்றும் ஹோண்டா அமேஸ் கார்கள் மட்டுமே ஆகும். இதில், ஹோண்டா அமேஸ் கார் க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் வெறும் 2 ஸ்டார்களை பெற்று அமேஸ் கார்களை வைத்திருப்பவர்களையும், காரை வாங்க பிளான் போட்டு வருபவர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

உலகளாவிய க்ளோபல் என்சிஏபி அமைப்பு தனது கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளை சமீபத்தில்தான் அப்டேட் செய்து இருந்தது. அந்த புதிய விதிமுறைகளின்படியே ஹோண்டா அமேஸ் கார் சோதனை செய்யப்பட்டு, 5க்கு 2 நட்சத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 2 ஸ்டார்கள் கூட பெரியவர்களுக்கான பாதுகாப்புக்காக இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ளன. அதுவே, குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு அமேஸ் கார் பூஜ்ஜிய மதிப்பெண்களை பெற்றுள்ளது.

honda amaze acquired only 2-star

முன்னதாக, கடந்த 2019ஆம் ஆண்டிலும் இதேபோன்று க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் அமேஸ் கார் சோதனை செய்யப்பட்டு இருந்தது. அப்போது, பெரியவர்களுக்கான பாதுகாப்புக்கு 4 நட்சத்திரங்களையும், குழந்தைகளுக்கான பாதுகாப்புக்கு 1 நட்சத்திரங்களையும் ஹோண்டா அமேஸ் பெற்று இருந்தது. அந்த சமயத்தில், க்ளோபல் என்சிஏபி தனது பழைய விதிமுறைகளை பின்பற்றி கார்களை சோதனை செய்துக் கொண்டிருக்கிறது.

அதன்பின், விதிமுறைகள் கொஞ்சம் கடுமையாக்கப்பட்டன. அதுமட்டுமின்றி, தென்னாப்பிரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்ட ஹோண்டா அமேஸ் கார் 2019ஆம் ஆண்டில் க்ளோபல் கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டு இருந்தது. ஆனால், தற்போது மேட்-இன்-இந்தியா அமேஸ் கார் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டுள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கிராஷ் டெஸ்ட்டில் முன்பக்க மோதலில் அமேஸ் காரினுள் குழந்தை டம்மிகளின் தலைப்பகுதி பலத்த சேதமடைந்துள்ளது.

honda amaze acquired only 2-star

3 வயதுடைய குழந்தை டம்மியின் மார்பு மற்றும் கழுத்து பகுதி மோதலின்போது அதிக அழுத்தத்தை சந்தித்துள்ளன. இதுவாவது பரவாயில்லை, 1.5 வயதுடைய குழந்தை டம்மி காரில் இருந்து வெளியே தூக்கி எறியப்படும் அளவிற்கு முன்பக்க மோதலின்போது பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. 3-பாயிண்ட் சீட் பெல்ட்கள் இல்லாததும், ஏர்பேக் டிஸ்கனெக்ட் ஸ்விட்ச் இல்லாததும் குழந்தைகள் பாதுகாப்பில் அமேஸ் காருக்கு பூஜ்ஜிய மதிப்பெண்களை பெற்றுக் கொடுத்துள்ளது.

அதேபோல், முன் இருக்கை பயணிகளின் தலைப்பகுதிக்கு சைடு புரோடெக்‌ஷன் கூடுதல் ஆப்ஷனாக வழங்கப்படாதது, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் வழங்கப்படாதது மற்றும் டிரைவருக்கு மட்டுமே சீட் பெல்ட் ரிமைண்டர் கொடுக்கப்படுவது உள்ளிட்டவை பெரியவர்கள் பாதுகாப்பில் அமேஸ் காருக்கு குறைவான ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுக் கொடுத்துள்ளன.

honda amaze acquired only 2-star

டிரைவ்ஸ்பார்க் கருத்து: க்ளோபல் என்சிஏபி-இன் இந்த ரேட்டிங்ஸுக்கு பதிலளித்துள்ள ஹோண்டா, புதிய விதிமுறைகளின்படி அமேஸ் 5-ஸ்டார் ரேட்டிங் கார் ஆகும், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் சைடு ஏர்பேக்குகள் இல்லாததே காரின் மதிப்பெண்களை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த கிராஷ் டெஸ்ட்டில் மேட்-இன்-இந்தியா அமேஸ் கார் உட்படுத்தப்பட்டு இருப்பினும், அப்டேட் செய்யப்பட்ட லேட்டஸ்ட் அமேஸ் கார் உட்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 23, 2024, 22:21 [IST]
English summary
Honda amaze global ncap ratings only 2 star check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X