ஹோண்டா அமேஸ் காரா இதுனு வாய பிளக்க போறீங்க.. அறிமுக தேதி அறிவிச்சுட்டாங்க! செடான் மார்க்கெட்டே கதிகலங்க போகுது

ஹோண்டா (Honda) நிறுவனம் தற்போது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் அமேஸ் (Amaze) கார் மாடலின் புதிய தலைமுறை வெர்ஷனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பணிகளில் அது தீவிரமாக களமிறங்கி இருப்பதும் நமக்கு தெரிய வந்திருக்கின்றது. சமீபத்தில் புதிய தலைமுறை அமேஸ் கார் மாடலின் டீசர் (Teaser) படத்தை வெளியிட்டே இந்த தகவலை அது நமக்கு உறுதிப்படுத்தியது. புதிய தலைமுறை அமேஸ் காரின் முன் பக்கத்தை வெளிக்காட்டக் கூடிய படத்தையே அது டீசராக அது வெளியிட்டிருந்தது.

நிறுவனத்தின் இந்த செயல் இந்திய செடான் கார் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது. இந்த நிலையிலேயே, புதிய தகவலாக புதிய தலைமுறை அமேஸ் கார் மாடலின் அறிமுக தேதி பற்றிய விபரங்களும் வெளியாகி உள்ளன. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் இந்தியாவில் வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

Honda amaze launch date dec 4

இப்போது விற்பனையில் இருப்பதைக் காட்டிலும் மிகவும் அட்டகாசமான லுக் கொண்டதாகவே புதிய தலைமுறை அமேஸ் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதையே நிறுவனத்தால் வெளியிடப்பட்ட டீசர் படங்களும் உறுதிப்படுத்துகின்றன. மிகவும் அட்டகாசமான ஹெட்லைட் மற்றும் பகல்நேர மின் விளக்கை புதிய அமேஸ் பெற்றிருப்பதையே இந்த டீசர் படம் உறுதி செய்திருக்கின்றது.

இதன் ஹெட்லைட் ரோபோக்களின் கண்களை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. இதேபோல், இதன் பகல்நேர மின் விளக்குகள் முறுக்கு மீசையை பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றது. இத்தகைய லைட் செட்-அப்பையே புதிய தலைமுறை அமேஸ் பெற்றிருக்கின்றது. இதுதவிர, கிரில் மற்றும் பான்னெட் ஆகியவற்றிலும் மிகப் பெரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் புதிய தலைமுறை அமேஸ் மிகவும் கட்டுமஸ்தான உடல் அமைப்பைக் கொண்டதாக தயாராகி இருக்கின்றது. இதையே சமீபத்தில் வெளியாகி டீசர் படமும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றது. சப்-4 மீட்டர் செடான் ரக கார் மாடலே இந்த அமேஸ் ஆகும்.

இந்த பிரிவின் ஜாம்பவான்களாக மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire), ஹூண்டாய் அவுரா (Hyundai Aura) மற்றும் டாடா டிகோர் (Tata Tigor) உள்ளிட்ட கார் மாடல்கள் இருக்கின்றன. இவற்றிற்கே மிகப் பெரிய போட்டியாளனாக அமேஸ் புதிய தலைமுறை அமைய இருக்கின்றது.

இதன் அடிப்படையிலேயே மிகவும் அட்டகாசமான லுக் இக்காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இப்போது விற்பனையில் இருப்பது இரண்டாம் தலைமுறை அமேஸ் கார் மாடல் என்பது கவனிக்கத்தகுந்தது. விற்பனைக்கு வர இருப்பது மூன்றாம் தலைமுறை ஆகும். இன்றைய கால தலைமுறைக்கு ஏற்ற வாகனமாக இது இருக்கும் என்பதில் சந்தேகமும் வேண்டாம்.

குறிப்பாக, எலிவேட் கார்களில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் பலவற்றை ஹோண்டா இந்த காரிலும் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், என்னென்ன மாதிரியான அம்சங்கள் எல்லாம் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. விரைவில், இதுகுறித்த தகவலையும் ஹோண்டா வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரத்தில் எஞ்சின் விஷயத்தில் எந்த மாற்றமும் செய்யப்பட்டு இருக்காது என நம்பப்படுகின்றது. இப்போது விற்பனையில் இருக்கும் ஹோண்டா செடான் காரில் 1.2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 90 எச்பி மற்றும் 110 என்எம் டார்க் திறனை வெளயேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இப்போதும் செடான் ரக கார்களுக்கு தனித்துவமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் இந்த மார்க்கெட்டை இப்போதும் இந்த ஹோண்டா நிறுவனம் அலங்கரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. இதன் அடிப்படையிலேயே புதிய தலைமுறை அமேஸ் கார் மாடலை அது விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 6, 2024, 5:00 [IST]
English summary
Honda amaze launch date set for december 4 with enhanced features and bold design
மேலும்... #honda #honda amaze #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+