ஸ்கெட்ச் படத்துல காட்டியதுக்கும், அறிமுகம் செய்ததுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு.. டிசையருக்கு போட்டி ரெடி!!

ஹோண்டா (Honda) நிறுவனம் அதன் புதிய தலைமுறை அமேஸ் (New Gen Amaze) கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. சில தினங்களுக்கு முன்னர் மாருதி சுஸுகி (Maruti Suzuki) விற்பனைக்கு அறிமுகப்படுத்திய புதிய தலைமுறை டிசையர் (New Gen Dzire) கார் மாடலுக்கு போட்டி அளிக்கும் நோக்கிலேயே இந்த கார் மாடலை ஹோண்டா விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. புதிய தலைமுறை டிசையர் அதிக பாதுகாப்பு திறன்மிக்க மற்றும் அதிக மைலேஜ் தரும் கார் மாடலாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

அத்துடன், ரூ. 6.79 லட்சம் என்கிற மிக மிக குறைவான விலையே அதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய ஓர் கார் மாடலுக்கு போட்டியளிக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே தற்போது ஹோண்டா அமேஸ் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

Honda amaze new gen

யாரும் எதிர்பார்த்திராத அம்சங்களை இந்த காரில் ஹோண்டா வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், அடாஸ் (ADAS) தொழில்நுட்பத்தை இந்த காரில் ஹோண்டா வழங்கி இருக்கின்றது. இதுதவிர, 8 அங்குல தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், நடுத்தர டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் உள்ளிட்ட அம்சங்களையே இந்த காரில் வழங்கி இருக்கின்றது ஹோண்டா.

மேலும், வாடிக்கையாளர்களை போட்டி கார் மாடல்களிடம் செல்லாமல் தடுத்து, அமேஸ் வசம் வர வேண்டும் என்பதற்காக இன்னும் பல அம்சங்களை ஹோண்டா வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், மேலே பார்த்த அம்சங்களுடன் சேர்த்து பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், இரண்டு கோப்பை தாங்கிகள் போன்ற அம்சங்களை அது வழங்கி இருக்கின்றது.

இத்துடன், வயர்-லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு உள்ளிட்ட வசதிகளும் புதிய அமேஸ் கார் மாடலில் வழங்கப்பட்டு இருக்கின்றன. தொடர்ந்து, பயணிகளின் கூடுதல் சௌகரியமான ரைடு அனுபவத்திற்காக முன் மற்றும் பின் பக்கங்களில் ஏசி துவாரங்கள், ஆர்ம் ரெஸ்ட்டுகள், கார் இணைப்பு அம்சம், சாலைகளைக் கண்கானிக்கும் வசதிக் கொண்ட கேமிரா உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதேபோல் பாதுகாப்பு அம்சங்களையும் மிக தாராளமாக இந்த காரில் ஹோண்டா வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், 6 ஏர்பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், இஎஸ்சி மற்றும் மும்முனை சீட் பெல்ட் போன்ற அம்சங்களே இந்த காரில் கொடுக்கப்பட்டு உள்ளன. இதேபோல், சற்று கவர்ச்சியான தோற்றமும் இந்த காருக்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஆகையால், இது அமேஸ் கார் மாடலை பிரதிபலிக்கவில்லை. அதற்கு பதிலாக அது எலிவேட் எஸ்யூவி காரை லேசாக பிரதிபலிக்கின்றது. ஆமாங்க, எலிவேட்-க்கு செடான் உருவம் கொடுக்கப்பட்டதைப் போலவே இருக்கின்றது அமேஸ். நிறுவனம் ஸ்கெட்ச் படங்களில் காட்டியதைவிட சற்று குறைவான கவர்ச்சியான லுக்கிலேயே புதிய அமேஸ் காட்சியளிக்கின்றது.

அதேநேரத்தில், இந்த காரில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கும் ஹெட்லைட் மற்றும் முறுக்கு மீசை போன்ற எல்இடி டிஆர்எல் புதிய அமேஸ்க்கு அழகு சேர்க்க தவறவில்லை. இதேபோல், இந்த காரில் தற்போது பயன்படுத்தப்பட்டு இருக்கும் கிரில், பனி மின் விளக்கு, எஞ்சினுக்கு காற்றை உள் வாங்கும் துளை ஆகியவையும் புதிய அமேஸ்-க்கு மிகுந்த கவர்ச்சியான லுக்கை வழங்கும் வகையில் உள்ளன.

எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 1.2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 90 எச்பி மற்றும் 110 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும். கியர்பாக்ஸை பொருத்த வரை 5 ஸ்பீடு மேனுவல் அல்லது சிவிடி ஆட்டோமேட்டிக் ஆகிய ஆப்ஷன்களே வழங்கப்படுகின்றன.

இத்துடன் பேடில் ஷிஃப்டர் வசதியும் இந்த காரில் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் லிட்டர் ஒன்றிற்கு 18.65 கிலோ மீட்டர் முதல் 19.46 கிலோ மீட்டர் வரையில் மைலேஜை வழங்கும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. மாருதி சுஸுகி டிசையரைவிட இது குறைவான மைலேஜ் திறன் என்பது கவனிக்கத்தகுந்தது.

புதிய அமேஸ் கார் மாடலுக்கு அறிமுகமாக ரூ. 7,99,900 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் அதிகபட்ச விலையே ரூ. 10,89,900 ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்தியாவில் அமேஸ் கார் மாடல் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். வி (V), விஎக்ஸ் (VX) மற்றும் இசட்எக்ஸ் (ZX) ஆகியவையே அவை ஆகும். மூன்று வேரியண்டுகளிலும் மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி டிசையர் கார் மாடலுக்கு மட்டுமல்ல ஹோண்டா அமேஸ் கார் மாடலின் வருகை ஹூண்டாய் அவுரா, டாடா டிகோர் போன்ற சப்-காம்பேக்ட் செடான் ரக கார்களுக்கும் போட்டியாக அமைந்திருக்கின்றது. ஆனால், இந்த காரில் சிஎன்ஜி தேர்வு வழங்கப்படவில்லை. இது மிகப் பெரிய குறையாக பார்க்கப்படுகின்றது. இருப்பினும், வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு பல்வேறு சிறப்பம்சங்களை இந்த காரில் ஹோண்டா வழங்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 4, 2024, 14:14 [IST]
English summary
Honda amaze new gen launched in india at starting price of rs 8 lakh more details
மேலும்... #honda #honda amaze #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X