2 காரும் பக்கத்து பக்கத்துல நிக்கும்போது பெருசா அடையாளமே தெரியல.. ஷோரூம்களுக்கு வர தொடங்கியது அமேஸ் கார்!!

செடான் கார் பிரியர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஹோண்டா (Honda) நிறுவனம், அதன் புதிய தலைமுறை அமேஸ் (New Gen Amaze) கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. நேற்றைய தினமே இதன் அறிமுகம் நாட்டில் அரங்கேறியது. இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு பலமடங்காக அதிகரித்துக் காணப்பட்டது. இந்த மாதிரியான சூழலிலேயே புதிய அவதாரத்தில் அந்த காரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது ஹோண்டா. கடந்த சில வாரங்களாக இந்த காரின் டீசர் படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தநிலையில், நேற்றைய தினமே முழுமையாக அக்காரை ஹோண்டா காட்சிப்படுத்தியது.

புதிய லுக்-கே அமேஸ்-க்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது. அதாவது, பழைய அமேஸ் கார் மாடலை இது சிறிதும் பிரதிபலிக்கவில்லை. ஆனால், இப்போது இந்த அமேஸ், எலிவேட் (Elevate) காரை பிரதிபலிக்கும் ஸ்டைலுக்கு மாறி இருக்கின்றது. இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் எலிவேட் கார் மாடலின் செடான் வெர்ஷனை போல அமேஸ் காட்சியளிக்கின்றது.

Honda amaze hits showrooms

இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த கார்கள் இரண்டும் அருகருகே நிற்கும் படங்கள் வெளியாகி உள்ளன. ஹோண்டா நிறுவனம் அறிமுகத்தைத் தொடர்ந்து புதிய அமேஸ் கார் மாடலை விற்பனைக்காக அதன் டீலர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியைத் தொடங்கி இருக்கின்றது. இந்த நிலையிலேயே அக்கார் ஷோரூம்களில் ஏற்கனவே விற்பனையில் இருந்த கார் மாடல்களுடன் நிற்க வைக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையிலேயே, எலிவேட் எஸ்யூவி மற்றும் அமேஸ் செடான் இந்த இரண்டு கார்களும் அருகருகே நிற்கும் படங்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படங்கள் வாயிலாகவே இரண்டு கார்களும் ஒரே பிம்பத்தைக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக, இதன் ஹெட்லைட் ஸ்டைல், டிஆர்எல் லைட் மற்றும் குரோம் அணிகலன் உள்ளிட்ட சில எலிவேட்-டில் இருந்து அப்படியே பெறப்பட்டு பயன்படுத்தப்பட்டு இருப்பதைப் போல தெரிகின்றது.

Honda elevate pic

இதன் விளைவாகவே எலிவேட்டின் முன் பக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் அமேஸ் உள்ளது. இருப்பினும், இந்த அமேஸ் கார் மாடலில் மாறுபட்ட தோற்றத்தை வழங்கும் விதமாக அதன் கிரில், பம்பர் மற்றும் பனி மின் விளக்குகள் உள்ளிட்டவை இருக்கின்றன. ஹோண்டா நிறுவனம் இந்த காரை ரூ. 7.99 லட்சம் என்கிற மிகக் குறைவான விலையில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

அதேவேளையில், இது டிசையர் கார் மாடலைக் காட்டிலும் சற்றே அதிக விலைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இந்தியாவில் ரூ. 7 லட்சத்திற்கும் குறைவான விலையிலேயே விற்கப்படுகின்றது. அனைத்தும் வெறும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். புதிய அமேஸ் அதிக விலைக்கு அதில் வழங்கப்பட்டு இருக்கும் அதிக சிறப்பம்சங்களே முக்கிய காரணமாக இருக்கின்றது.

குறிப்பாக, அடாஸ் போன்ற தொழில்நுட்பங்களை எல்லாம் இந்த காரில் ஹோண்டா வழங்கி இருக்கின்றது. லெவல் 2 வகை அடாஸ் அம்சமே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, ஃப்ளோட்டிங் வகை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே, வயர்லெஸ் சார்ஜர், டைப் சி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்களும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், லேன் வாட்ச் கேமிரா, ஆறு ஏர் பேக்குகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் போன்ற அம்சங்களும் புதிய அமேஸ் காரில் வழங்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வந்திருப்பது மூன்றாம் தலைமுறை அமேஸ் ஆகும். இந்த கார் வி (V), விஎக்ஸ் (VX) மற்றும் இசட்எக்ஸ் (ZX) ஆகிய மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஆனால், ஒற்றை எஞ்சின் ஆப்ஷன் மட்டுமே இதில் வழங்கப்படுகின்றது. 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டர் பெட்ரோல் மோட்டார், இதுவே அந்த மோட்டார் ஆகும். இது அதிகபட்சமாக 89 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க்கை வெளியேற்றும். இது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 18.65 கிமீ முதல் 19.46 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அமேஸ் கார் மாடல் இந்தியாவில் டிசையருக்கு போட்டியாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், பெட்ரோல் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது. டிசையர் கார் மாடலில் இந்த குறை இல்லை. கிலோ ஒன்றிற்கே அது 33.73 கிமீ வரையில் மைலேஜ் தரும் திறனுடன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. ஆகையால், அமேஸ்-க்கு போட்டி சற்று அதிகமாகவே இருக்கும் என கணிக்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 5, 2024, 12:10 [IST]
English summary
Honda amaze new gen rival of maruti suzuki dzire hits showrooms
மேலும்... #honda #honda amaze #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+