விற்பனைக்கு வர இன்னும் சில நாட்களே உள்ளன.. அதுக்குள்ள 'ஃப்ளாட் பெட்' வண்டில ஏத்திட்டாங்க! வெளியானது வீடியோ!!

இந்தியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் புகழ்பெற்ற டிசையர் (Dzire) கார் மாடலின் புதிய தலைமுறை (New Gen) வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. முன்பு எப்போது இல்லாத அளவிற்கு அதிக சிறப்பம்சங்களைத் தாங்கிய மற்றும் அதிக பாதுகாப்பு திறன்மிக்க கார் மாடலாக அது விற்பனைக்கு வந்திருக்கின்றது. இந்த செடான் ரக காருக்கு டஃப் கொடுக்கும் விதமாக ஹோண்டா (Honda) நிறுவனமும் அதன் அமேஸ் (Amaze) செடான் கார் மாடலின் புதிய தலைமுறை வெர்ஷனை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

இதன் வருகையை ஏற்கனவே ஹோண்டா நிறுவனம் உறுதிப்படுத்திவிட்டது. குறிப்பாக, சமீப சில நாட்களாக இதன் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு டீசர் படங்களை அது தொடர்ச்சியாக வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது. வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி அன்றே புதிய தலைமுறை அமேஸ் கார் மாடலை ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய இருக்கின்றது.

Honda amaze new gen spied without wraps

Credits: Ashishclancy இந்த தினத்திலேயே அக்கார் மாடலின் விலை மற்றும் என்ன மாதிரியான சிறப்பம்சங்களை புதிதாக வழங்கி இருக்கின்றது என்பது பற்றிய தகவலையும் ஹோண்டா அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கின்றது. இதேபோல், அன்றைய தினத்திலேயே அதிகாரப்பூர்வ புக்கிங் பணிகளும் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்த மாதிரியான சூழலிலே ஹோண்டா அமேஸ் கார் மாடல் எந்தவொரு மறைப்புகளும் இன்றி காட்சியளித்திருக்கின்றது. விரைவில் விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டு அதைக் காட்சிப்படுத்தும் விதமாக குறிப்பிட்ட சில யூனிட்டுகளை டீலர்களுக்கு ஹோண்டா அனுப்பி வைத்து வருகின்றது. அவ்வாறு 'ஃப்ளாட் பெட்' வாகனம் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டபோதே புதிய அமேஸ் கார் கேமிராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. இந்த காரை அதிகாரப்பூர்வமாக ஹோண்டா நிறுவனம் வெளிக்காட்ட இன்னும் ஒரு சில தினங்களே உள்ளநிலையில், எந்தவொரு மறைப்புகளும் இன்றி தனது தரிசனத்தை வழங்கி இருக்கின்றது, அமேஸ். மேலும், இந்த தரிசனத்தின் வாயிலாக, அமேஸ் மிகவும் அழகான வாகனமாக தயார் செய்யப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

முக்கியமாக புதிய கிரில், கிரில்லிற்கு மேல் பகுதியில் கவர்ச்சியான குரோம் அணிகலன், ரோபோக்களின் கண்களைப் போன்ற அழகிய அமைப்புடைய புதிய ஹைட்லைட், அதற்கு மேலே முறுக்கு மீசை போன்ற டிஆர்எல் மற்றும் கவர்ச்சியான பம்பர் உள்ளிட்டவற்றை புதிய தலைமுறை ஹோண்டா அமேஸ் பெற்றிருப்பதும் உறுதியாகி இருக்கின்றது.

இந்த கிரில்லின் மையப் பகுதியிலே ஹோண்டா சின்னம் இடம் பெற்றிருக்கின்றது. இதன் பம்பர் மற்றும் பனி மின் விளக்கும் மிகவும் அழகான லுக்கிலேயே இருக்கின்றன. குறிப்பாக, மிகுந்த கட்டுமஸ்தான முன் பக்கத்தை புதிய அமேஸ் கொண்டிருக்கின்றது. ஆகையால், அதிக கவர்ச்சியான தோற்றத்தை விரும்பும் கார் விரும்பிகள் மத்தியில் புதிய அமேஸ்-க்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தோற்றத்தின் வாயிலாக மட்டுமல்ல சிறப்பம்சங்களின் வாயிலாகவும் வாடிக்கையாளர்களை கவர இருக்கின்றது இந்த அமேஸ். அந்த அளவிற்கே அதிக மற்றும் புதிய சிறப்பம்சங்கள் பலவற்றை இந்த கார் மாடல் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மிக முக்கியமாக இந்த காரில் அடாஸ் (ADAS) தொழில்நுட்பம் இடம் பெற இருக்கின்றது.

இந்தியாவிலேயே வேறு எந்த காம்பேக்ட் செடான் காரிலும் இந்த அம்சத்தைப் பார்க்க முடியாது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, ஃப்ரீ ஸ்டாண்டிங் அமைப்புக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் ஏசி, சிங்கிள் பேன் சன்ரூஃப், பின் பக்கத்தை பார்ப்பதற்கான கேமிரா போன்ற அம்சங்களையும் இந்த அமேஸ் தன்னுள் தாங்கியிருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய அமேஸ் அதன் அழகான தோற்றத்திற்கு மட்டுமல்ல அதிக சிறப்பம்சங்களுக்காகவும் இந்திய வாடிக்கையாளர்களை மிகப் பெரிய அளவில் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு சான்றாகவே மேலே பார்த்த தகவல்களும் உள்ளன. இந்தியாவில் இப்போதும் செடான் கார்களுக்கு என தனித்துவமான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த டிமாண்டை அமேஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 30, 2024, 5:00 [IST]
English summary
Honda amaze new gen spied without wraps ahead of 4 december 2024 launch
மேலும்... #honda #honda amaze #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+