யாருமே செய்யாத விஷயத்தை கையில் எடுத்த ஹோண்டா! மக்களுக்கு இவ்வளவு நல்லது பண்ணுவாங்கனு யாருமே நினைக்கல!
ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் தான் தனது புதிய தலைமுறை அமேஸ் காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த காருக்கான புக்கிங் எல்லாம் குவிந்து வருகிறது. விரைவில் இந்த காரின் டெலிவரியும் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஹோண்டா அமேஸ் காரின் பழைய தலைமுறை காரும் புதிய தலைமுறை காரும் ஒரே நேரத்தில் விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் புதிய தலைமுறை காரை அப்டேட் செய்யும் போது பழைய தலைமுறை காரின் விற்பனையை நிறுத்தி விடுவார்கள். புதிய தலைமுறைக்கு தயாரானவுடன் பழைய தலைமுறை காரர்கள் இருக்கும் ஸ்டாக்கை மட்டுமே விற்க முயற்சி செய்து பின்னர் புதிய தலைமுறை காரை அறிமுகப்படுத்தி அந்த காரை மட்டும் அதிகம் விற்க முயற்சி செய்வார்கள். இதுதான் தற்போது நடைமுறையில் இருக்கும் டிரெண்டாக இருக்கிறது.

இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் தனது அமேஸ் காரின் புதிய தலைமுறை காரை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த கார் விரைவில் விற்பனைக்கு வருகிறது. இந்த காருக்கான புக்கிங் எல்லாம் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் இந்த கார் டெலிவரி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.
இதன்படி ஹோண்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை காரும் இதற்கு முன்னர் விற்பனையான மாடல் காரும் ஒரே நேரத்தில் விற்பனை செய்யப்படும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோண்டா நிறுவனம் தற்போது புதிதாக அப்டேட் செய்துள்ளது. பல்வேறு வசதிகள் நிறைந்த காராக இருக்கிறது. இந்நிலையில் பழைய தலைமுறைகாரில் சிஎன்ஜி வேரியண்டையும் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதனால் ஒரே நேரத்தில் இரண்டு தலைமுறை காரும் கிடைக்கும்.

தற்போது ஹோண்வா அமேஸ் காரின் இரண்டு மற்றும் மூன்றாம் தலைமுறை கார் ரூபாய் 7.63 லட்சம் முதல் ரூபாய் 8 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த விலை பேஸ் வேரியன்ட் காரின் விலை தான். விலை சற்று அதிகமாக தான் இருக்கும். இந்த காரின் டாப் வேரியன்டை தான் மக்கள் அதிகம் புக்கிங் செய்கிறார்கள் என்ற தகவலும் தற்போது நமக்கு கிடைத்துள்ளது.
இந்த காருக்கு நேரடி போட்டியாக மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் விற்பனைக்கு வருகிறது. இந்த டிசையர் காரும் கடந்த நவம்பர் மாதம் தான் புதிய அப்டேட்டை பெற்றது. புதிய அப்டேட்டை பெற்ற பிறகு தற்போது புதிய அப்டேட் செய்யப்பட்ட கார் மட்டுமே விற்பனையாகி வருகிறது. பழைய மாடல் கார் தற்போது விற்பனையில் இல்லை ஆனால் ஹோண்டா அமேஸ் காரில் பழைய மாடல் கார் விற்பனையில் உள்ளது.

இதன் மூலம் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான ஆப்ஷன்கள் கிடைக்கும். புதிய காரை விரும்புபவர்கள் புதிய காரை வாங்க முடியும். பழைய மாடல் காரை விரும்புவார்கள், பழைய மாடல் காரையும் வாங்க முடியும். இதற்காக பல்வேறு விலை வித்தியாசமும் ஏற்படும். இதனால் கம்மி பட்ஜெட்டில் கார் வாங்குபவர்களுக்கு கூட இந்த காரை தேர்வு செய்ய ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
புதிய மாடல் கார் வரும்போது பழைய மாடல் காரை எல்லாம் விற்று தீர்க்க வேண்டும் என்ற யுக்தியில் தான் செயல்படுவார்கள். ஆனால் ஹோண்டா நிறுவனம் அந்த யுக்தியை மாற்றி புதிய தலைமுறை கார் வந்த பிறகும் பழைய தலைமுறை காரையும் சேர்த்து விற்பனை செய்து வருகிறது. இது சற்று வித்தியாசமான முயற்சி தான். இந்த முயற்சி பலனளிக்கும் பட்சத்தில் இதை மற்ற வாகனத்தை தயாரிப்பு நிறுவனங்களும் பின்பற்ற வாய்ப்புள்ளது.
புதிய மாடல் கார் வரும்போது எல்லாம் மக்கள் மத்தியில் சில நேரம் விமர்சனங்கள் ஏற்படலாம் புதிய மாடலை விட பழைய மாடல் தான் சிறப்பாக இருந்தது என்ற விமர்சனம் எழும்போது மக்களுக்கு பழைய மாடல் காரை வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு ஏற்படும் வகையில் ஹோண்டா நிறுவனம் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளது
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனம் தற்போது பழைய மாடல் காரையும் புதிய மாடல் காரையும் ஒரே நேரத்தில் விற்பனை செய்து புதிய வியாபார யுத்தியை கையில் எடுத்துள்ளது. இது நிச்சயம் மக்களுக்கு பலனாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த யுக்தி வெற்றியடையும் பட்சத்தில் மற்ற நிறுவனங்களும் இதை பின்பற்றி எதிர்காலத்தில் இதை ஒரு டிரெண்டாக கூட மாற்ற வாய்ப்பிருக்கிறது.


Click it and Unblock the Notifications









