ஹோண்டா அமேஸ் மைலேஜ் vs மாருதி டிசையர் மைலேஜ்.. இரண்டில் எது அதிகம் மைலேஜ் தரும்? எத வாங்கினா காசு மிச்சமாகும்?

ஹோண்டா (Honda) நிறுவனம் அதன் புதிய தலைமுறை அமேஸ் (New Gen Amaze) கார் மாடலை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக நேற்றைய (டிசம்பர் 4) தினம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மிகப் பெரிய எதிர்பார்ப்பு இந்த காருக்கு நிலவி வந்த நிலையிலேயே நேற்று அமேஸ் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. யாரும் எதிர்பார்த்திராத புதிய வசதிகள் பலவற்றை இந்த காரில் ஹோண்டா வழங்கி இருக்கின்றது. ஆகையால், குறிப்பிட்ட சில விஷயங்களில் இந்த கார் அதன் போட்டியாளர்களைக் காட்டிலும் மேலான ஓர் வாகனம் என்பது தெரிய வந்திருக்கின்றது. சிறப்பம்சங்கள் விஷயத்தில் மட்டுமல்ல மைலேஜ் தருவதிலும் சற்றே சிறந்த கார் மாடலாக அமேஸ் காட்சியளிக்கின்றது.

ஆனால், அதன் எதிரி கார் மாடலான டிசையர் (Maruti Suzuki Dzire)-ரைக் காட்டிலும் இது சிறப்பான மைலேஜை தருகிறதா என்பதே இங்கே பலரின் கேள்வியாக அமைந்திருக்கின்றது. இதுகுறித்த விளக்கத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, புதிய அமேஸ் மற்றும் புதிய டிசையர் இரண்டு கார்களின் மைலேஜ் திறன் ஒப்பீட்டு தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Honda amaze mileage vs maruti dzire mileage

ஹோண்டா அமேஸ் காரின் மைலேஜ் திறன்: ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் ஒற்றை எஞ்சின் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். 1.2 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் மோட்டார்-ரே அது ஆகும். இது அதிகபட்சமாக 90 பிஎஸ் மற்றும் 110 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும்.

5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்பீடு சிவிடி ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே இந்த மோட்டாருடன் வழங்கப்படுகின்றது. இதில், மேனுவல் கியர்பாக்ஸைக் கொண்ட தேர்வு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 18.65 கிமீ மைலேஜையும், சிவிடி கியர்பாக்ஸைக் கொண்டி தேர்வு ஒரு லிட்டருக்கு 19.46 கிமீ மைலேஜையும் வழங்கும் என ஹோண்டா நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

முந்தைய தலைமுறை அமேஸ் 18.6 கிமீ முதல் 18.3 கிமீ வரையில் மட்டுமே வழங்கிய நிலையில், புதிய தலைமுறை அதிக மைலேஜை வழங்கக் கூடியவையாக மேம்படுத்தப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, சிவிடி கியர்பாக்ஸைக் கொண்ட தேர்வு லிட்டருக்கு அதிகபட்சமாக 1.16 கிமீ வரையில் கூடுதல் மைலேஜை வழங்கும் வகையில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.

மாருதி சுஸுகி டிசையர் மைலேஜ் திறன்: மாருதி சுஸுகி நிறுவனம் இந்த காரை பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமல்ல சிஎன்ஜி தேர்விலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதுவே மிக மிக அதிக மைலேஜை வழங்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. ஒரு கிலோ சிஎன்ஜிக்கே டிசையர் 33.73 கிமீட்டர் வரையில் மைலேஜை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த மைலேஜ் திறனால் இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரும் சிஎன்ஜி காராக டிசையர் மாறி இருக்கின்றது. அதேவேளையில், இதன் பெட்ரோல் ஆப்ஷன் லிட்டர் ஒன்றிற்கு 24.79 கிமீ முதல் 25.71 கிமீ வரையில் மைலேஜ் தரும். கியர்பாக்ஸை பொருத்து இந்த மைலேஜ் திறன் மாறுபடும்.

இதன் வாயிலாக ஹோண்டா அமேஸ் கார் மாடலைக் காட்டிலும் மிக மிக அதிக மைலேஜ் தரும் கார் மாடல் டிசையர் என்பது தெரிய வந்திருக்கின்றது. புதிய இசட் சீரிஸ் 1.2 லிட்டர், 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினே புதிய டிசையர் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆகிய இரண்டு விதமான கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதே மோட்டாரே புதிய ஸ்விஃப்ட் காரில் வழங்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 80 பிஎச்பி மற்றும் 112 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி டிசையர் மைலேஜ் தருவதில் மட்டுமல்ல பாதுகாப்பு தருவதிலும் பெஸ்ட்டானதாகக் காட்சியளிக்கின்றது. குளோபல் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்வில் ஐந்துக்கு ஐந்து ஸ்டார்களை இது பெற்றிருக்கின்றது. விலையும் இதற்கு குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், அமேஸ் தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கி இருப்பதில் சிறந்த செடான் ரக காராகக் காட்சியளிக்கின்றது. அடாஸ் போன்ற அட்வான்ஸ்டு தொழில்நுட்பம் எல்லாம் அதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, December 5, 2024, 5:00 [IST]
English summary
Honda amaze vs maruti dzire comprehensive mileage comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+