ஒன்னு கூடிட்டாங்க! நிஸான்-ஹோண்டா இணைவிற்கு இதுதான் காரணமா! ஜப்பான் பசங்க 2பேரும் ஒன்னு கூடி என்ன பண்ண போறாங்க!
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த கார் உற்பத்தி நிறுவனங்களே நிஸான் (Nissan) மற்றும் ஹோண்டா (Honda) ஆகும். தாயகம் ஒன்று என்பதனாலேயோ என்னமோ இவர்கள் இருவரும் தற்போது கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றனர். மேலும், இந்த கூட்டணியின்கீழ் ஓர் புதிய வாகனத்தை உருவாக்க இருப்பதாகவும் அவர்கள் அறிவித்திருக்கின்றனர்.
அப்படி என்ன வாகனத்தை உருவாக்க இவர்கள் இருவரும் இணைந்து இருக்கின்றனர்? என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். மேலும், வாகனம் மட்டும்தான் இவர்களின் கூட்டணியின் கீழ் உருவாக்கப்பட இருக்கின்றதா? அல்லது வேறு ஏதேனும் கண்டுபிடிப்பு பணிகளை இவர்களின் கூட்டணி மேற்கொள்ள உள்ளதா? என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

இரண்டு மாபெரும் ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனங்களும் இணைந்து புதுமுக எலெக்ட்ரிக் வாகனங்களையே (Electric Vehicles) தயாரிக்க இருக்கின்றன. எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமின்றி வாகனங்களுக்கான தானியங்கி நுண்ணறிவு தொழில்நுட்ப (auto intelligence technology)-த்தையும் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்க இருக்கின்றன.
இதற்காகவே இரண்டு மாபெரும் ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது கை கோர்த்து இருக்கின்றன. இதுதவிர, தங்களுடைய முன் அனுபவங்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் சிலவற்றையும் இவர்கள் இருவரும் இந்த கூட்டணின்கீழ் பரிமாறிக் கொள்ள இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிஸான் மற்றும் ஹோண்டா இவர்கள் இருவரும் உலக அளவில் வாகன உற்பத்தி விஷயத்தில் பழம் தின்று கொட்டைப் போட்டவர்கள் ஆவார்கள். குறிப்பாக, ஜப்பானிய வாகன உலகில் இவர்களின் ஆதிக்கம் மிக அதிகம். இத்தகைய இரண்டு நிறுவனங்களின் இணைவில் ஓர் எலெக்ட்ரிக் வாகனம் தயார் செய்யப்படுவதால் அது மிகுந்த சிறப்பு வசதிகளை தாங்கியதாகவும், குறிப்பாக, அதிகளவில் அதி-நவீன தொழில்நுட்பங்களை தாங்கியதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், தங்களுடைய இணைவில் உருவாக்கப்படும் வாகனம் இந்த அம்சத்தைத்தான் தாங்கி இருக்கும் என்பதை அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருப்பினும், இவர்களின் கூட்டணியின் கீழ் தயாரிக்கப்படும் வாகனத்தில் அட்வான்ஸ்டு இணைப்பு தொழில்நுட்பம், அதிக ரேஞ்ஜ் மற்றும் சிறந்த செயல்திறனை வெளியேற்றக் கூடிய மோட்டார் ஆகியவை இடம் பெறும் என நம்பப்படுகின்றது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர்களின் சமீபத்திய வார்த்தைகள் இருக்கின்றன. டோக்கியோவில் ஓர் கூட்டத்தில் கலந்துக் கொண்ட நிஸான் மோட்டார் மற்றும் ஹோண்டா மோட்டார் நிறுவனங்களைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரிகள், ஜப்பானின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய வாகன உற்பத்தியாளர்களான எங்களுடைய நிறுவனம் மின்சார வாகனம் மற்றும் தானியங்கி நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் கொண்ட வாகனங்களை தயாரிக்க இருக்கின்றது என்றார்.
இவர்களின் இந்த அறிவிப்பு தற்போது நிஸான் மற்றும் ஹோண்டா கார் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தியாவில் இவர்கள் இருவரும் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வரவில்லை. விரைவில் நிஸான் அதன் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வந்துவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த மாதிரியான சூழலிலேயே இந்த நிறுவனங்களும் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றன. இப்போதைய நிலவரப்படி நிஸான் நிறுவனம் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக மேக்னைட் இருக்கின்றது. இதேபோல், ஹோண்டாவின் வளர்ந்தும் வரும் கார் மாடலாக எலிவேட் இருக்கின்றது. இவை இரண்டையும் இவர்கள் எலெக்ட்ரிக் வெர்ஷனில் விற்பனைக்குக் கொண்டு வந்தால் அவை இந்திய சந்தையில் நல்ல இடத்தை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக அளவில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. இதனாலேயே போட்டியும் பலமடங்கு அதிகரித்துக் காட்சியளிக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இவர்கள் இருவரும் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றனர். உலக அளவில் நிலவும் போட்டியை இந்த கூட்டணி சமாளிக்கிறதா, இல்லையா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








