இதான் கார் வாங்க சரியான நேரம்! இப்ப கார் வாங்குனா ரூ96,000 மிச்சமாகும் எப்படி தெரியுமா?

ஹோண்டா நிறுவனம் இந்த ஆகஸ்ட் மாதம் கார்களை அதிகமாக விற்பனை செய்ய தங்கள் கார்களின் அதிரடியாக பல்வேறு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன் மூலம் இந்த மாதம் காரை வாங்கும் வாடிக்கையாளர்கள் ரூபாய் 96 ஆயிரம் வரை மிச்சம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. இப்படியாக எந்தெந்த காரங்களுக்கு எவ்வளவு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது என்ற விரிவான விபரத்தை தான் இங்கே காண போகிறோம்.

ஹோண்டா நிறுவனம் இந்த ஆகஸ்ட் மாதம் தங்கள் கார்களுக்கு தள்ளுபடிகளை வழங்கி உள்ளது. அதன்படி எலவேட் எஸ்யூவி, சிட்டி செடான், சிட்டி ஹைபிரிட் மற்றும் அமேஸ் காம்பேக்ட் செடான் ஆகிய கார்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த மாதம் 31ம் தேதி வரை மட்டுமே இந்த தள்ளுபடிகள் எல்லாம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Honda August Discounts

ஹோண்டா நிறுவனம் தங்களது இணையதளத்தில் எலவேட் காருக்கு ரூபாய் 65 ஆயிரம் வரை பலன்களை வழங்க போவதாக தெரிவித்துள்ளது. மேலும் வேரியன்டை பொறுத்து இந்த பலன் மாறுபடும் எனவும் தெரிவித்துள்ளது. ஹோண்டா நிறுவனம் இந்த எஸ்யூவி காரை கடந்த ஏப்ரல் மாதம் தான் அப்டேட் செய்தது. இதில் பல்வேறு விதமான பாதுகாப்பு அம்சங்களை உட்புகுத்தி உள்ளது.

இந்த காரில் 6 ஏர் பேக்குகள், 3 பாய்ண்ட் கொண்ட இஎல்ஆர் சீட் பெல்ட்கள் மற்றும் 5 சீட்டுகளுக்குமான சீட் பெல்ட் ரிமைண்டர், ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்த பலன்கள் எல்லாம் இந்த அறிவிப்பு வெளியாகும் முன்பு தயாரிக்கப்பட்ட எலவேட் கார்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார் ரூ 11.91 லட்சம் முதல் ரூ 16.51 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

Honda August Discounts

ஹோண்டா சிட்டி காருக்கும் ரூபாய் 88 ஆயிரம் வரை பலன்களை வழங்கப் போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பலன்கள் என்பது அப்டேட் செய்வதற்கு முன்பு தயாரிக்கப்பட்ட கார் தற்போது தாக்கில் இருக்கும் கார்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அப்டேட் செய்யப்பட்ட கார்களுக்கு ரூபாய் 68 ஆயிரம் வரை பலன்களை வழங்குகிறது.

ஹோண்டா சிட்டி காரை பொருத்தவரை 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 121 எச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டதாக விற்பனையாகி வருகிறது. இந்த காருக்கு என தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் இந்த காரின் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

Honda August Discounts

ஹோண்டா சிட்டி ஹைபிரிட் காருக்கும் இந்த ஆகஸ்ட் மாதம் ரூபாய் 78 ஆயிரம் வரை தள்ளுபடிகளை வழங்குகிறது. இது மட்டுமல்லாமல் மூன்று ஆண்டுகளுக்கான இலவச சர்வீஸ் பேக்கேஜை வழங்குகிறது. இந்த சர்வீஸ் பேக்கேஜை ரூபாய் 20,000 என்ற விலையில் இந்நிறுவனம் வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. ஹோண்டா சிட்டி ஹைபிரிட் காரை பொறுத்தவரை ரூபாய் 19 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

ஹோண்டா சிட்டி ஹைபிரிட் காருக்கு நேரடி போட்டியாக மார்க்கெட்டில் எந்த கார்களும் இல்லை. அந்த அளவுக்கு தனித்துவமாக இந்த கார் விற்பனையாகி வருகிறது. இந்த காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை இ-சிவிடி கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த கார் 126எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனம் அமேஸ் காருக்கு ரூபாய் 96 ஆயிரம் வரை தள்ளுபடிகளை வழங்குகிறது. இது விஎஸ் மற்றும் எலைட் வேரியன்ட்களுக்கு மட்டுமான தள்ளுபடியாக இருக்கிறது. எஸ் வேரியண்டிற்கு ரூபாய் 76 ஆயிரம் வரையிலும், என்ட்ரி லெவல் வேரியன்டான இ வேரியன்டிற்கு ரூபாய் 66 ஆயிரம் வரையிலும், தள்ளுபடிகளை வழங்குகிறது. இந்த கார் மாருதி டிசையர் ஹூண்டாய் ஆரா ஆகிய கார்களுக்கு போட்டியாக விற்பனையாகி வருகிறது.

ஹோண்டா நிறுவனம் இந்த அமேஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினை பொருத்தியுள்ளது. இது மேனுவல் மற்றும் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்களுடன் விற்பனைக்கு வருகிறது. இந்த இன்ஜின் 90 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அமேஸ் காரை விரைவில் ஹோண்டா நிறுவனம் அப்டேட் செய்து வெளியிட உள்ளது. அதன் காரணமாகவே அதிக அளவிலான தள்ளுபடிகளை வழங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனம் இந்த தள்ளுபடிகளை எல்லாம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. பண்டிகை காலம் நெருங்குவதால் அதன் விற்பனையை அதிகரிப்பதற்கான இந்த யுத்தியை கையில் எடுத்துள்ளது. நீங்கள் ஹோண்டா நிறுவனத்தின் கார்களை வாங்க விரும்பினால் இதுதான் சரியான நேரம் உடனடியாக ஷோரூமுக்கு சென்று உங்கள் கார்களை புக் செய்யுங்கள். புக் செய்யும் முன் தள்ளுபடி குறித்த விபரங்களை உறுதி செய்து கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 6, 2024, 13:36 [IST]
English summary
Honda august discounts elevate city amaze upto rs 96000 offers
மேலும்... #honda #india #Independence Day 2024
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X