ஹோண்டா கார்களுக்கு ரூ1.20 லட்சம் வரை தள்ளுபடி! இது தான் கார் வாங்க சரியான டைம்!

ஹோண்டா கார்களை இந்த மார்ச் மாதம் வாங்கினால் ரூபாய் 1.20 லட்சம் வரையிலான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கூடுதல் பலன்களை அறிவித்துள்ளனர். சிட்டி மற்றும் அமேஸ் ஆகிய கார்கள் உட்பட அனைத்து கார்களுக்கும் இது தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹோண்டா நிறுவனம் இந்த மார்ச் மாதம் விற்பனையாகும் கார்களுக்கு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. ஏற்கனவே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் எலேவட் உட்பட அமேஸ், சிட்டி போன்ற செடான் கார்களுக்கும் இந்த தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதிகமாக விற்பனையாகும் எலவேட் கார்களுக்கும் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. எந்தெந்த கார்களுக்கு எவ்வளவு தள்ளுபடி என காணலாம்.

Honda Cars Discount March 2024

ஹோண்டா அமேஸ் காரை பொருத்தவரை ரூபாய் 90 ஆயிரம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. எஸ் வேரியன்டிற்கு ரூபாய் 35,000 கேஸ் தள்ளுபடியாகவும், ரூ41,643 மதிப்பிலான இலவச அக்சஸரீஸ்களும் வழங்கப்படுகிறது. இ வேரியன்டை பொருத்தவரை 10,000 ரூபாய் கேஸ் தள்ளுபடியாகவும், ரூ 12,349 மதிப்பிலான இலவச அக்சஸரீஸ்களும் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் இந்த காரை வாங்குபவருக்கு ஏகப்பட்ட லாபங்கள் இருக்கிறது.

இது மட்டுமல்லாமல் விஎக்ஸ் மற்றும் எலைட் எடிசன் கார்களுக்கு ரூபாய் 20,000 வரை கேஸ் தள்ளுபடியும், ரூபாய் 23,346மதிப்பிலான இலவச அக்சஸரிஸ்களும் வழங்கப்படுகிறது. இந்த அனைத்து ஆபர்கள் உடன் கூடுதலாக ரூபாய் 20,000 வரை சிறப்பு கார்ப்பரேட் தள்ளுபடியாகவும், ரூபாய் 6000 கார்ப்பரேட் தள்ளுபடியாகவும், ரூபாய் 4000 கஸ்டமர் லாயல்டி போனஸாகவும் ரூபாய்10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் வழங்கப்படுகிறது.

Honda Cars Discount March 2024

ஹோண்டா சிட்டி காரைப் பொறுத்தவரை ரூ 1.20 லட்சம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இது ரூபாய் 30,000 வரை கேஸ் தள்ளுபடியாகவும், ரூபாய் 15,000 எக்ஸ்சேஞ்ச் போனதாகவும், ரூபாய் 4000 வாடிக்கையாளர்களுக்கான லாயல்டி போனஸாகவும், ரூபாய் 6000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும் வழங்கப்படுகிறது. இதுபோக சிறப்பு கார்ப்பரேட் தள்ளுபடி 20,000 மற்றும் கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூபாய் 8000 வழங்கப்படுகிறது.

இதில் உள்ள டாப் வெறியண்டுகளான விஎக்ஸ் மற்றும் இசட் எக்ஸ் ஆகிய வேரியன்ட்களை வாங்கும் போது ரூபாய் 13,651 மதிப்பிலான 4 மற்றும் 5ம் ஆண்டுக்கான நீட்டிக்கப்பட்ட வாரண்டியும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்தமாக ரூபாய் 1.20 லட்சம் வரை வாடிக்கையாளர்கள் இந்த காரை வாங்கும் போது தள்ளுபடி பெற முடியும்.

Honda Cars Discount March 2024

அடுத்ததாக அதிகமாக விற்பனையாகும் எலவேட் எஸ்யூவி காரை பொருத்தவரை ரூபாய் ஐம்பதாயிரம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த ரூபாய் 50,000 தள்ளுபடிக்கான விரிவான விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. நமக்கு கிடைத்த தகவலின் படி டாப் வேரியன்ட் முழுமையாக இந்த 5000 தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. மற்ற எந்த விதமான தள்ளுபடிகளும் இல்லை என தெரிகிறது.

இந்த எலவேட் காருக்கான தள்ளுபடி என்பது குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இங்கு தள்ளுபடிகள் என்பது பல்வேறு விஷயங்கள் காரணமாக வேறுபடலாம். இந்த தள்ளுபடிகள் எல்லாம் உங்களுக்கு செட் ஆகுமா என்பதை நீங்கள் அருகில் உள்ள ஹோண்டா ஷோரூமிற்கு சென்று அங்குள்ள பிரதிநிதிகள் பேசி உங்களுக்கான தள்ளுபடிகள் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த தள்ளுபடிகள் போக கூடுதலாக ஷோரூம்களிலேயே வாடிக்கையாளர்கள் வாங்கும் இன்சூரன்ஸ் மற்றும் அக்சஸரீஸ்களுக்கு கூடுதல் தள்ளுபடிகள் வழங்க அவர்களுக்கு உரிமம் இருக்கிறது. இதனால் நீங்கள் ஷோரூமிற்கு சென்று அங்கு உங்களுக்கான முழுமையான தள்ளுபடி விபரங்களை தெரிந்து கொள்ளும்போது இன்னும் குறைவான விலையில் இந்த காரை வாங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனம் இந்த மார்ச் மாதம் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக அதிகமான தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. இதன்படி ஹோண்டா நிறுவனத்தின் கார்கள் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையாகி மார்க்கெட்டில் நல்ல போட்டியை ஏற்படுத்தும் மார்க்கெட் பங்கை அதிகரிக்கும் என்பதால் இந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 5, 2024, 13:35 [IST]
English summary
Honda cars discount march 2024 benefits up to 1 20 lakh
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X