நிறைய பேரு இப்பவே காண்டாக ஆரம்பிச்சுட்டாங்க.. ஹோண்டா இப்படி ஒரு வேலையை செய்ய போகுதா!! எப்படிதான் மனசு வருதோ!
ஹோண்டா கார் (Honda Car)-களின் விலை வெகு விரைவில் உயர இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்தெந்த கார் மாடல்களின் விலை உயர இருக்கின்றது? எப்போது உயர இருக்கின்றது? எவ்வளவு ரூபாய் வரை விலை உயர வாய்ப்பு இருக்கிறது? இதுபற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஹோண்டா கார்களின் விலை விரைவில் உயர இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்களின்படி வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் ஹோண்டா கார்களின் விலை உயர இருப்பது தெரிய வந்திருக்கின்றது. 2024 ஆம் ஆண்டு தொடங்கி ஹோண்டா நிறுவனம் மேற்கொள்ள இருக்கும் இரண்டாவது விலை உயர்வு இதுவாகும்.

சென்ற ஜனவரி மாதத்திலேயே இந்த நிறுவனம் அதன் தயாரிப்புகள் அனைத்தின் விலையையும் உயர்த்தி இருந்தது. புத்தாண்டு பரிசாக விலை உயர்வை வழங்கிய நிலையில் தற்போது ஏப்ரல் தொடக்கத்தின் பரிசாக மற்றுமொரு விலை உயர்வை பரிசாக வழங்க இருக்கின்றது, ஹோண்டா. நிறுவனத்தின் இந்த செயலால் இந்தியர்கள், குறிப்பாக, ஹோண்டா கார் பிரியர்கள் கலக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.
நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக அவதரித்துக் கொண்டிருக்கும் எலிவேட் (Elevate) தொடங்கி, சிட்டி (City) மற்றும் அமேஸ் (Amaze) ஆகிய மாடல்களின் விலையையும் அது உயர்த்த ஹோண்டா திட்டமிட்டு இருக்கின்றது. எவ்வளவு ரூபாய் இதன் விலையில் உயர்த்தப்பட இருக்கின்றது என்பது பற்றிய விபரங்களை நிறுவனம் அறிவிக்கவில்லை.
இருப்பினும், ஓர் சாமானியனின் ஒரு மாத சம்பளத்தையே அது விலை உயர்வாக செய்யும் என கூறப்படுகின்றது. எனவே ரூ. 10 ஆயிரம் தொடங்கி ரூ. 20 ஆயிரம் வரை விலை உயர்வை ஹோண்டாவின் கார்கள் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலை உயர்வால் ஹோண்டா கார் மாடல்களின் ஆரம்ப விலையில் மாற்றம் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதைய நிலவரப்படி ஹோண்டாவின் விலை குறைவான தயாரிப்பாக அமேஸ் இருக்கின்றது. இந்த கார் மாடல் ரூ. 7.15 லட்சம் தொடங்கி 9.91 லட்ச ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக எலிவேட் எஸ்யூவி இருக்கின்றது. இந்த கார் மாடலுக்கு இந்தியாவில் தற்போது மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
நிறுவனத்தின் தாய் நாடான ஜப்பானுக்கே இங்கிருந்தே இந்த கார் மாடல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த கார் மாடல் 11.57 லட்சம் ரூபாய் தொடங்கி 16.19 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எலிவேட்டிற்கு அடுத்தபடியாக நிறுவனத்தின் சற்று விலை உயர்ந்த தயாரிப்பாக 5ஆம் தலைமுறை வெர்ஷன் சிட்டி இருக்கின்றது.
இந்த கார் மாடல் ரூ. 11.70 லட்சம் தொடங்கி ரூ. 16.18 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. சிட்டி இ:எச்இவி, இதுவே நிறுவனத்தின் காஸ்ட்லியான கார் மாடல் ஆகும். இதன் ஆரம்ப விலையே ரூ. 18.89 லட்சம் ஆகும். அதிகபட்ச விலை ரூ. 20.39 லட்சம் ஆகும்.
இந்த விலைகள் அனைத்தும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த விலைகளே இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் செய்யப்பட இருக்கின்றது. எவ்வளவு ரூபாய் விலை உயர்வை ஹோண்டா செய்யும் என்பது இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இதுபற்றிய தகவலை அது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளையில், இப்போதைய நிலவரப்படி கார் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக ஹோண்டா நிறுவனம் சிறப்பு சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது. எலிவேட் கார் மாடலுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலும், அமேஸ் கார் மாடலுக்கு ரூ. 90 ஆயிரம் வரையிலும், சிட்டி மாடலுக்கு ரூ. 1.20 லட்சம் வரையிலும் சிறப்பு சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா விலை உயர்வை அறிவித்திருப்பதைப் போலவே இன்னும் சில நிறுவனங்களும் விலை உயர்வை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஓர் வழக்கமான செயலே ஆகும். நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக விலை உயர்வை பற்றி அறிவிப்பது. எனவே ஹோண்டா கார் பிரியர்கள் மட்டுமின்றி பிற நிறுவனங்களின் வாகன காதலர்களும் மிகப் பெரிய அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








