ஒரே கார்! ஹோண்டாவோட தலவிதியவே மாத்தி எழுதீருச்சு! விலை இவ்ளோதானா! சண்முகம் வண்டிய ஷோரூமுக்கு விடு!
இந்திய சந்தையில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான ஹோண்டா (Honda) கார் நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி ஹோண்டா நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய சந்தையில் 7,902 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் வெறும் 7,062 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் விற்பனையில் 12 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து ஹோண்டா கார் நிறுவனம் அசத்தியுள்ளது. உள்நாட்டு விற்பனையில் மட்டுமல்லாது, ஏற்றுமதியிலும் (Export) ஹோண்டா நிறுவனம் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவில் இருந்து 3,749 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதுதான் ஒரு மாதத்தில் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த கார்களின் அதிகபட்ச விற்பனை எண்ணிக்கை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக வேறு எந்த ஒரு மாதத்திலும் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் இருந்து இவ்வளவு அதிகமான கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது கிடையாது. கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் இருந்து ஹோண்டா நிறுவனத்தின் ஏற்றுமதி 170 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் பதிவு செய்துள்ள சிறப்பான விற்பனை வளர்ச்சிக்கு எலவேட் கார் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாத தொடக்கத்தில்தான் ஹோண்டா எலவேட் (Honda Elevate) கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), கியா செல்டோஸ் (Kia Seltos), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) ஆகிய கார்களுடன், ஹோண்டா எலவேட் போட்டியிட்டு வருகிறது.
இதுதவிர ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) ஆகிய கார்களுடனும், ஹோண்டா எலவேட் கார் விற்பனையில் போட்டியிட்டு கொண்டுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹோண்டா எலவேட் காரின் ஆரம்ப விலை வெறும் 11 லட்ச ரூபாய் மட்டுமே.
அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 16.20 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். வரும் காலங்களில் இந்திய சந்தையில் ஹோண்டா எலவேட் காரில் இன்னும் பல்வேறு புதிய இன்ஜின் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்படலாம் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஒரு சமயத்தில் ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையை விட்டு வெளியேறி விடலாம் என கூறப்பட்டு வந்தது. ஆனால் அப்படிப்பட்ட மோசமான பிரச்னைகளை எல்லாம் சமாளித்து ஹோண்டா நிறுவனம் தற்போது விற்பனையில் சாதனைகளை படைக்க தொடங்கியுள்ளது. இதற்கு எலவேட் காருக்குதான் ஹோண்டா நன்றி சொல்ல வேண்டும்!


Click it and Unblock the Notifications








