பல லட்ச ரூபாயில் வாங்கிய காரை இப்படியும் மாற்றலாமா? கூடுதலா எவ்வளவு இலட்சம் செலவனதோ...

கார் மாடிஃபிகேஷன் (Car Modification)-க்கு இந்தியாவில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. ஏனெனில், நம் இஷ்டத்துக்கு ஏற்ப மாடிஃபிகேஷன் செய்யப்படும் கார்கள் திடீரென பழுதடைவதற்கும், சாலையில் இயங்கிக் கொண்டிருக்கும்போது முறையாக செயல்படாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, மாடிஃபிகேஷன் செய்யப்படும் கார்கள் காற்று மாசுவை ஏற்படுத்துவதற்கும் நிறைய வாய்ப்புள்ளதால், கார் மாடிஃபிகேஷன்களுக்கு நம் நாட்டில் தடைவிதிக்கப்பட்டு உள்ளன. கார் மாடிஃபிகேஷன் செய்ய விரும்புபவர்கள் அதற்கென அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் மூலமாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

ஆனால், இங்கு ஒரு ஹோண்டா சிட்டி கார் தவறான முறையில் கன்வெர்டபிள் கார்கள் போன்று மேற்கூரை நீக்கப்பட்டு சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டுள்ளது. இந்த கார் தொடர்பான வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில், இந்த ஹோண்டா சிட்டி காரில் ஆடி நிறுவனத்தின் லோகோ பொருத்தப்பட்டு உள்ளதை காணலாம்.

honda city modified into cabriolet

ஹோண்டா சிட்டி ஆனது ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் பிரபலமான செடான் கார் ஆகும். இன்னும் சொல்ல போனால், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிகவும் சில ஹோண்டா கார்களுள் ஒன்று சிட்டி ஆகும். இத்தகைய காரில் மேற்கூரையை நீக்கி, விலையுயர்ந்த கேப்ரியோலெட் கார் போன்று மாற்றியுள்ளனர். இதுகுறித்த வீடியோவில் நாம் பார்ப்பது, சிவப்பு நிறத்திலான 2ஆம் தலைமுறை ஹோண்டா சிட்டி கார் ஆகும்.

இந்த ஹோண்டா சிட்டி காரின் மேற்கூரை முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது. அத்துடன், இது ஆடி கார் என மற்றவர்களை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காக ஆடி நிறுவனத்தின் லோகோ காரின் முன்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளது. காரின் மேற்கூரையை நம் இஷ்டத்திற்கு நீக்கிக் கொள்வது முற்றிலும் தவறாகும். ஏனெனில், இதன் காரணமாக காரின் உருவம் சீர்குலைவதற்கு வாய்ப்புள்ளது. இதனால், காரின் பில்லர்கள் வலுவிழப்பதற்கும் வாய்ப்புண்டு.

honda city modified into cabriolet

இதன் விளைவாக, பயணத்தின்போது கார் காற்றின் திசைக்கு ஏற்ப தன் பாதையில் இருந்து விலக நேரிடும். இந்த விலகல் பெரியதாக இருக்காது என்றாலும், விபத்து ஏற்படுவதற்கு அந்த சிறிய விலகலை போதுமானதாக இருக்கும். அதுமட்டுமின்றி, விபத்து நடந்தால் கார் ரோல்-ஓவர் ஆகுவதற்கு, அதாவது கவிழ்வதற்கு நிறைய வாய்ப்புள்ளது. அவ்வாறு ரோல்ஓவர் ஆகும் பட்சத்தில், மேற்கூரை இல்லாததால், காரில் இருக்கும் பயணிகள் பெரியளவில் மோதல்களை சந்திப்பார்கள்.

அப்படியென்றால், இவ்வாறான கேப்ரியோலெட் ரக கார்கள் மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளதே அவற்றை பயன்படுத்துவதற்கு எவ்வாறு அனுமதி வழங்குகிறார்கள்? என நீங்கள் கேட்கலாம். தொழிற்சாலையிலேயே உருவாக்கப்படும் கேப்ரியோலெட் ரக கார்கள் மேற்கூறப்பட்ட பிரச்சனைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்படுகின்றன. காரின் கீழ்பகுதி நன்கு எடைமிக்கதாகவும், வலிமையானதாகவும் உருவாக்கப்படுகிறது.

honda city modified into cabriolet

மேலும், அவ்வாறு உருவாக்கப்பட்ட பின் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கும், சோதனைகளுக்கும் அவை உட்படுத்தப்படுவது வழக்கம். இந்த குறிப்பிட்ட மாடிஃபை செய்யப்பட்ட ஹோண்டா சிட்டி காரில் பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள் இல்லாததையும் காண முடிகிறது. வீடியோவில், இந்த மாடிஃபை காரினுள் பயணிகள் யாரும் சீட் பெல்ட் அணிந்திருக்கவில்லை. ஏனெனில், காரின் பில்லர்களை நீக்கியதால், சீட் பெல்ட்களையும் காரில் இருந்து நீக்கியுள்ளனர்.

இவை யாவும் போக்குவரத்து விதிமுறைகளுக்கு புறம்பானவை ஆகும். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, நெடுஞ்சாலையில் இவர்கள் அதே திசையில் காரில் யு-டர்ன் செய்துள்ளனர். இந்த நெடுஞ்சாலையில் யு-டர்ன் செய்வதற்கு எந்த வசதியும் இல்லை. ஆதலால், இது சட்டத்திற்கு புறம்பானது என்பது மட்டுமில்லாமல், ஆபத்தானதும் கூட.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இவ்வாறு கார் ஒன்று கேப்ரியோலெட் தோற்றத்திற்கு மாற்றப்படுவது ஒன்றும் புதியது இல்லை. இதேபோன்று, ஹூண்டாய் சொனாட்டா கார் ஒன்று இவ்வாறு மாற்றப்பட்டு இருந்தது. இந்த குறிப்பிட்ட ஹோண்டா சிட்டி காரில் மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு மாற்றங்களை செய்துள்ளனர். ஆதலால், இந்த கார் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Sunday, July 28, 2024, 13:00 [IST]
English summary
Honda city modified into cabriolet car roof removed check all details here
மேலும்... #off beat #india #car modification
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X