ஒரு காலத்துல பணக்காரங்க வாங்குன கார் இப்ப 4வது இடத்திற்கு தள்ளப்பட்டது! அப்ப முதலிடத்தில் எந்த கார் தெரியுமா?

இந்தியாவில் வாகன விற்பனையில் சி செக்மெண்ட் மார்க்கெட்டில் ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்து வரும் சிட்டி கார் தற்போது விற்பனையில் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முதல் இடத்தை ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார் இடம் பிடித்துள்ளது. இந்த விற்பனை விபரங்கள் குறித்த விரிவான தகவல்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் செடான் கார்களின் விற்பனை கணிசமான அளவு குறைந்து விட்டாலும் செடான் காருக்கு எனது தனிப்பட்ட ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள். இதனால் இந்த காரின் விற்பனை ஓரளவுக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதனால் இந்த மார்க்கெட்டை பிடிப்பதற்காக சில வாகன தயாரிப்பு நிறுவனங்கள் செயலால் செக்மெண்டில் தொடர்ந்து வாகனங்களை விற்பனை செய்து வருகின்றன.

c segment car sales

இதன்படி கடந்த ஆறு மாத விற்பனை விபரங்களை பார்ப்போம். கடந்த 6 மாதங்களில் மொத்தம் 9,788 கார்கள் விற்பனையாகி உள்ளன. இந்த கார் தான் அதிக அளவில் விற்பனையாகிய முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ஹுண்டாய் நிறுவனத்தின் வெர்னா கார் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 8,188 கார்கள் விற்பனையாகியுள்ளன.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஸ்கோடா நிறுவனத்தின் ஸ்லாவியா கா் இருக்கிறது. இந்த கார் மொத்தம் 7,327 கார்கள் கடந்த 6 மாதத்தில் விற்பனையாகி உள்ளன. 4வது இடத்தில் தான் ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி கார் இருக்கிறது. இந்த கார் மொத்தமே 5,607 கார்கள் தான் விற்பனையாகி இருந்தது. இந்த கார் ஒரு காலத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் செடான் காராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

c segment car sales

இந்தியாவில் சி செக்மெண்ட் கார்கள் விற்பனையில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார்கள்தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. மொத்தம் 17 ஆயிரம் கார்கள் கடந்த ஆறு மாதத்தில் விற்பனையாகி உள்ளது. கிட்டத்தட்ட இந்தியாவில் விற்பனையான சி செக்மென்ட் கார்களில் 50 சதவீதமான கார்கள் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தில் இருந்து தான் விற்பனையாகி உள்ளது.

கொரோனாவிற்கு பிறகு இந்தியாவில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார்களுக்கு தான் அதிகமாக மக்கள் மத்தியில் மவுசு இருக்கிறது. இதனால் குளோபல் என்கேப் சோதனையில் அதிக ஸ்டார்களைப் பெற்ற கார்கள் அதிகமாக விற்பனையாகி வருகின்றன. இந்த செக்மெண்டிலும் இப்படியாக தான் இந்த டிரெண்ட் காணப்படுகிறது.

c segment car sales

இந்த பட்டியலில் முதல் மற்றும் மூன்றாம் இடத்தில் இருக்கும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா ஆகிய இரண்டு கார்களும் குளோபல் அண்ட் கேப் சோதனையில் 5 ஸ்டார்களை பெற்ற கார்களாக இருக்கின்றன. ஃபோக்ஸ்வேகன் குழுமம் தனது செடான் கார்களில் 1 லிட்டர் 3சிலிண்டர் டிஎஸ்ஐ இன்ஜினை பொருத்தி உள்ளது. இது 110 பிஎச்பி பவரையும், 178 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது.

மற்றொரு இன்ஜின் ஆப்ஷன் ஆக 1.5 லிட்டர் 4 சிலிண்டர் டிஎஸ்ஐ இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இது 148 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படுகிறது. இது போக ஆப்ஷனாக 6 ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் மற்றும் 7 ஸ்பீடு ட்வின் கிளட்ச் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் ஆகிய கியர் பாக்ஸ்களும் பொருத்தப்பட்டுள்ளன.

ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி காரும் 5ம் தலைமுறை அப்டேட்டில் பல்வேறு விதமான அப்டேட்கள் செய்யப்பட்டு மக்களின் தேவைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 2000மாவது ஆண்டு துவக்கத்தில் சமூக அந்தஸ்தை தரும் ஒரு காராக பார்க்கப்பட்டதால் தொடர்ந்து அந்த நல்ல பெயரை பெற்று வருகிறது. இதனால் அந்த கார் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எஸ்யூவி கார்களின் வருகைக்குப் பிறகு செடான் கார்களின் விற்பனை மிக குறைவாக நடந்து வருகிறது. இந்த கார்களை வாங்குவதற்கு பதிலாக எஸ்யூவி கார்களில் அதிக அம்சங்கள் இருப்பதால் அந்த கார்களை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். இருந்தாலும் செடான் காருக்கு என்று தனியாக ஒரு மார்க்கெட் இருக்கிறது. அந்த மார்க்கெட்டில் தொடர்ந்து விற்பனை நடந்து கொண்டுதான் இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, October 19, 2024, 7:00 [IST]
English summary
Honda city sales volkswagen virtus tops 4 places
மேலும்... #auto news #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X