ரோட்டில் எங்கு தேடினாலும் இந்த மாதிரி ஒரு காரை பார்க்க முடியாது!! கலர் தான் ஹைலைட்டே... எவ்வளவு செலவாச்சோ!

கார் மாடிஃபிகேஷன் (Car Modification)-களுக்கு இந்தியா பிரபலமானதாக உள்ளது. ஆனால் உண்மையில், நம் நாட்டில் கார் மாடிஃபிகேஷன்களுக்கு கடுமையான விதிமுறைகள் உள்ளன. இருப்பினும், மக்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப கார்களை மாற்றிக் கொள்வது தொடர்ந்து நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்த வகையில் இங்கு ஒரு ஹோண்டா சிவிக் (Honda Civic) கார் இளஞ்சிவப்பு (Pink) நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. பார்பி (Barbie) கார்டூன்களை போன்று இந்த காரின் பிங்க் நிறமானது கண்ணை கவரக்கூடியதாக உள்ளது. இந்த காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நமது செய்தித்தளத்தில் இதற்கு முன்னர் பல்வேறு கார் மாடிஃபிகேஷன்களை பார்த்துள்ளோம். ஆனால், பிங்க் நிறத்தில் கார் ஒன்று பெயிண்ட் செய்யப்பட்டதை இப்போதுதான் முதல்முறையாக பார்த்துள்ளோம். அதிலிலும், ஹோண்டா சிவிக் கார் ஒன்று இவ்வாறு பெயிண்ட் செய்யப்பட்டு இருப்பது எங்களுக்கு தெரிந்தவரையில் இந்தியாவிலேயே இதுதான் முதல்முறை ஆகும்.

honda civic with pink wrap

ஏனெனில், ஹோண்டா சிவிக் இந்திய மார்க்கெட்டில் இப்போது விற்பனையில் இல்லை. ஹோண்டா கார்ஸ் நிறுவனத்தின் பிரீமியம் தரத்திலான செடான் காராக சிவிக் விளங்குகிறது. விற்பனையில் இருந்த சமயத்தில் கொஞ்சம் அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டதால், ஹோண்டா சிவிக் காரை குறைவானவர்களே வாங்கினர். ஆதலால், சிவிக் காரை சாலையில் காண்பதே அரிதானதாக உள்ள நிலையில், பிங்க் நிறத்தில் இந்த ஒரு சிவிக் காரை தவிர்த்து வேறு எங்கேயும் சிவிக் காரை பார்க்கவே முடியாது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த பிங்க் நிற சிவிக் கார் தொடர்பான விபரங்கள் 'கார் ஸ்டைலின்' என்கிற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவில், இந்த சிவிக் காரின் உரிமையாளர் மற்றும் காரை இவ்வாறு மாற்றிய கஸ்டமைஸ் நிறுவனத்தின் உரிமையாளரை காணலாம். இந்த சிவிக் காரை சுற்றிலும் பிங்க் நிறத்தில் வ்ராப் ஒட்டப்பட்டுள்ளது. அதேநேரம், பிங்க் நிறத்திற்கு மேட்சிங்காக பளபளப்பான கருப்பு நிறத்திலான பாகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

honda civic with pink wrap

இதன்படி, முன்பக்க கிரில்லில் பளபளக்கும் கருப்பு நிறத்தில் ஸ்ட்ரிப், பம்பரில் கருப்பு நிறத்தில் இன்செர்ட்கள் மற்றும் கருப்பு நிறத்தில் முன்பக்க ஸ்பிளிட்டர் உள்ளிட்டவை இந்த காரில் இடம்பெற்றுள்ளன. அதேநேரம், இந்த சிவிக் காரில் முன்பு இருந்த பளபளக்கும் க்ரோம்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. காரின் பக்கவாட்டில், கருப்பு நிறத்தில் அலாய் சக்கரங்கள் பிங்க் நிறத்திலான பிரேக் காலிபர்கள் உடன் உள்ளன.

காரின் பக்கவாட்டிலும், சைடு பில்லர்கள், ORVM-கள், டோர் ஹேண்டில்கள் மற்றும் சைடு பாடி பேனல்கள் உள்ளிட்டவை கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. அதேபோல், காரின் பின்பக்கத்திலும் கருப்பு நிறத்தில் ஸ்பாய்லர் மற்றும் டெயில்லேம்ப்களை இணைக்கும் பளபளக்கும் கருப்பு நிறத்திலான பேனல்கள் இடம்பெற்றுள்ளன. காரின் பின்பக்க மேற்கூரைக்கு கார்பன் ஃபைபர் வ்ராப் புதியதாக கொடுக்கப்பட்டுள்ளது.

honda civic with pink wrap

காருக்குள் கோல்டன் மஞ்சள் நிறத்துடன் கருப்பு கலந்த கலவையாக கேபின் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, காருக்குள் ஸ்டேரிங் சக்கரம், டோர் பேனல்கள், செண்டர் கன்சோல் மற்றும் ரூஃப் உள்ளிட்டவற்றை இந்த நிற கலவையாக பார்க்க முடிகிறது. காருக்குள் மேற்கூரையில் ஸ்டார் லைட்கள் இடம்பெற்றுள்ளன. இது இரவு நேரங்களில் ஜொலிக்கும் என வீடியோவில் கூறியுள்ளனர்.

அதேபோல், முன் இருக்கைகளுக்கு மத்தியில் செண்டர் கன்சோலிலும் ஒளிரும் விளக்குகள் மற்றும் கார்பன் ஃபைபர் எலிமெண்ட்களை பார்க்க முடிகிறது. இதற்கேற்றவாறு, தரையில் 9டி மேட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றுடன், இருக்கைகளில் குஷின்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்தியாவில் விற்பனை செய்த சமயத்தில் ஹோண்டா சிவிக் காரில் 1.6 லிட்டர் i-DTEC டீசல் என்ஜின் பொருத்தப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மாடிஃபிகேஷன்களுக்கு மொத்தம் ஆன செலவு எவ்வளவு என்பது தெரியவில்லை. எப்படியிருந்தாலும், நாம் இதுவரையில் பார்த்த மாடிஃபை செய்யப்பட்ட ஹோண்டா சிவிக் கார்களில் இது செலவுமிக்கதாக இருக்கும். இந்தியாவில் காரின் நிறத்தை தனது விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்வதற்கு சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளது. அதை தவிர்த்து காரின் தோற்றத்தில் எந்த மாற்றத்தையும் செய்யக் கூடாது என சட்டம் சொல்கிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 15, 2024, 17:00 [IST]
English summary
Honda civic car modified with attractive pink colour wrap check all details here
மேலும்... #car modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X