சார்ஜ் போடமலேயே எலெக்ட்ரிக் வண்டிய ஓட்டலாமா? 2025ல் புரட்சி செய்யப்போகும் ஹோண்டா!
ஹூண்டாய் மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்களை தயாரிக்க தீவிரமாக முயற்சிகளை செய்து வருகின்றன. இந்நிலையில் இந்த இரு நிறுவனங்களுக்கும் போட்டியாக ஹோண்டா நிறுவனம் தற்போது ஹைட்ரஜன் ஃப்யூயல் செல்லில் இயங்கும் வாகனத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம் 2025-ம் ஆண்டு தனது சிஆர்-வி என்ற காரை ஹைட்ரஜன் காராக மாற்றி விற்பனைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் தற்போது சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வாகனமாக இருப்பதால் தற்போது அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனையாகி வருகின்றன. ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இப்படியாக மாசு ஏற்படுத்தாத வாகனங்களை தயாரிக்க அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. அதற்கான சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.

தற்போது மாசு ஏற்படுத்தாத வாகனங்களில் பேட்டரி மூலம் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி வருகிறது. ஆனால் பேட்டரி மூலம் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டும் ஆய்வில் இல்லை.
மாறாக ஹைட்ரஜன் மூலம் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களும் தற்போது ஆய்வில் இருக்கிறது. ஹைட்ரஜன் ஃப்யூயல் செல் மூலம் மின்சக்தி உருவாக்கப்பட்டு அந்த மின்சக்தியை நேரடியாக பேட்டரியிலோ அல்லது மோட்டாரிலோ செலுத்திய அந்த மின்சக்தி மூலம் வாகனத்தை இயக்க தொழில்நுட்பம் ஆய்வு செய்யப்படுகிறது.

இதை ஹைட்ரஜன் ஃப்யூயல் செல் எலெக்ட்ரிக் வாகனம் என அழைக்கிறார்கள். தற்போது மக்கள் மத்தியில் இந்த ரக எலெக்ட்ரிக் வாகனம் சற்று கவனத்தை ஈர்த்துள்ளது. டொயோட்டா மற்றும் ஹுண்டாய் ஆகிய நிறுவனங்கள் ஹைட்ரஜன் மூலம் இயக்கும் வாகனங்களை நீண்ட ஆண்டுகளாக ஆய்வு செய்து வரும் நிலையில் தற்போது ஹோண்டா நிறுவனமும் அந்த பட்டியலில் இணைந்துள்ளது.
ஹோண்டா நிறுவனம் தனது முதல் ஹைட்ரஜன் எலெக்ட்ரிக் வாகனமாக சிஆர்-வி என்ற வாகனத்தை வரும் 2025-ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகிறது. ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதுபடி இந்த புதிய ஹைட்ரஜன் சிஆர்-வி என்ற வாகனம் மிகப்பெரிய புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கலாம்.

இந்த வாகனத்தில் ஹைட்ரஜன் ஃப்யூயல் செல்லுடன் பேட்டரி மற்றும் மோட்டார் ஆகிய மூன்று சிஸ்டங்களும் இருக்கும். ஹைட்ரஜன் ஃப்யூரியஸ் மூலம் தயாரிக்கப்படும் மின்சக்தி பேட்டரியில் சேமிக்கப்பட்டு அந்த பேட்டரியின் திறனிலிருந்து மோட்டார் இயக்கப்படும். இது மட்டுமல்லாமல் தேவை என்றால் நேரடியாக பேட்டரியை சார்ஜ் செய்யும் ஆப்ஷனும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ள ரேஞ்ச் பிரச்சனை என்பது இந்த வாகனத்தில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹைட்ரஜன் ஃப்யூயஸ் செல்லை மாற்றுவது என்பது மிக சுலபமான விஷயமாக இருக்கும். பெட்ரோல் பங்க் போல ஆங்காங்கே ஸ்டேஷன்களை அமைத்து தேவையான நேரத்தில் உடனடியாக ஹைட்ரஜன் ப்யூயல் செல்களை மட்டும் நிரப்பி கொள்ள முடியும்.
ரேஞ்ச் பிரச்சனை தீர்ந்து விட்டாலே எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகமாக விற்பனையாகும் என்பதால் இந்த பிரச்சினையை தீர்க்கக்கூடிய இந்த ஹைட்ரஜன் தொழில்நுட்பம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் என திட்டமிட்டுள்ளது. இதற்காக அந்நிறுவனம் அமெரிக்காவில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய தலைமுறை ஃப்யூயல் செல் சிஸ்டத்தை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.
இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து குறைவான விலையில் ஹைட்ரஜன் ஃப்யூயல் செல்களை தயாரிப்பது குறித்தும் அதை நீண்ட காலம் உழைப்பதை உறுதி செய்வது குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர் .இந்த ஆய்வுகள் வெற்றிகரமாக முடியும் சூழ்நிலையில் இந்த தொழில்நுட்பத்தை தனது சிஆர்-வி காரில் பொருத்தி ஹோண்டா நிறுவனம் முதன்முதலாக இந்த காரை ஜப்பான் மற்றும் அமெரிக்க மார்க்கெட்டில் சிஆர்-வி ஹைட்ரஜன் என்ற பெயரில் 2025-ம் ஆண்டு அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொயோட்டா மற்றும் ஹுண்டாய் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் ஆய்வுகளை நடத்தி வரும் மார்க்கெட்டில் தற்போது ஹோண்டா நிறுவனமும் இணைந்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் தனது மிராய் என்ற செடான் காரில் இப்படியான தொழில்நுட்பத்தை உட்பகுத்தி வருகிறது. இதுபோக ஹூண்டாய் நிறுவனம் நெக்ஸோ எஸ்யூவி என்ற காரில் இதே தொழில்நுட்பத்தை தான் உற்பத்தி வருகிறது. இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் வெளியிட போகும் சிஆர்-வி கார் என்பது எஸ்யூவி ரக காராகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனம் 2025-ம் ஆண்டு ஹைட்ரஜன் ஃப்யூயல் செல்லில் இயங்கும் வாகனத்தை அறிமுகப்படுத்தினால் அது நிச்சயம் வாகன உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும். தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் வாங்க தயங்கும் மக்கள் எல்லாம் எந்த தயக்கமும் இல்லாமல் இந்த காரை வாங்க நினைப்பார்கள். இந்தியாவிற்கு இந்த கார் வருமா வராதா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









