புது மாடல் வருவதால் பழைய மாடல் காருக்கு ரூ1.22 லட்சம் தள்ளுபடி! ஹோண்டா ஷோரூம்க்கு உடனே ஒடுங்க!

ஹோண்டா நிறுவனம் விரைவில் தனது அம்மேஸ் காரை அப்டேட் செய்து வெளியிடப் போவதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்யும் சில முக்கியமான கார்களுக்கான நவம்பர் மாத தள்ளுபடி விவரங்களை அறிவித்துள்ளது. இதன்படி ஹோண்டா நிறுவனத்தின் கார்களை தற்போது வாங்கினால் ரூபாய் 1.22 லட்சம் குறைவான விலையில் இந்த கார்களை வாங்க முடியும். இது எப்படி சாத்தியம் என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

ஹோண்டா நிறுவனம் விரைவில் தனது அமேஸ் காரை அப்டேட் செய்து வெளியிட போகிறது. இது குறித்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் தற்போது விற்பனை செய்து வரும் அமேஸ், சிட்டி மற்றும் எலவேட் ஆகிய கார்களுக்கு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு காருக்கும் எவ்வளவு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது? இந்த தள்ளுபடிகளை பெறுவது எப்படி என்ற விரிவான விபரங்களை ஒவ்வொன்றாக காண்போம்.

honda discount november 2024

ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் காரை பொறுத்தவரை இது நவம்பர் மாதத்திற்கு ரூபாய் 1.22 லட்சம் தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது உள்ள மாடல் விற்பனையிலிருந்து நீக்கப்பட்டு புதிய அப்டேட் செய்யப்பட்ட மாடல் விரைவில் வர உள்ளதால் தற்போது உள்ள மாடல் காரை விற்கு தீர்ப்பதற்காக அதிக அளவிலான தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது விற்பனையாகி வரும் ஹோண்டா அமேஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது0 மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் மாருதி டிசையர் மற்றும் ஹுண்டாய் ஆரா ஆகிய கார்களுடன் போட்டி போட்டு வருகிறது. இந்த கார் ரூபாய் 7.20 லட்சம் முதல் 9.96 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

honda discount november 2024

அடுத்ததாக ஹோண்டா சிட்டி மற்றும் சிட்டி ஹைபிரிட் ஆகிய செடான் கார்களுக்கு முறையே ரூபாய் 1.14 லட்சம் மற்றும் ரூபாய் 90 ஆயிரம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடிகள் பழைய ஸ்டாக்கில் இருக்கும் மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதில் சில பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக இருக்கும்.

ஹோண்டா சிட்டி காரை பொறுத்தவரை 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 121 எச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 11.82 லட்சம் முதல் ரூபாய் 16.35 லட்சம் என்ற இந்த விலையில் விற்பனையாகி வருகிறது. இதுவே ஹோண்டா சிட்டி ஹைபிரிட் காரைப் பொறுத்தவரை ரூபாய் 19 லட்சம் முதல் ரூபாய் 20.55 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

honda discount november 2024

அடுத்ததாக ஹோண்டா நிறுவனத்தின் எஸ்யூவி காரான எலவேட் காருக்கும் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த காருக்கு ரூபாய் 75 ஆயிரம் வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த காரிலும் ஹோண்டா சிட்டி காரில் இருப்பது போல 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது சிறப்பான பெர்ஃபார்மென்ஸை வெளிப்படுத்தும் காராக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காரில் ஸ்லீக்கான டிசைன், மேம்படுத்தப்பட்ட பிராக்டிகாலிட்டி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. இந்த காரின் விலையை பொறுத்தவரை இந்திய மார்க்கெட்டில் ரூபாய் 11.69 லட்சம் முதல் ரூபாய் 16.71 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காருக்கு தள்ளுபடிகள் வழங்கப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

ஹோண்டா அமேஸ் கார் அப்டேட் செய்யப்பட்டு விரைவில் விற்பனைக்கு வர உள்ள நிலையில் பழைய சரக்குகளை விற்று தீர்ப்பதற்காக அதிகபட்சமாக ரூபாய் 1.22 லட்சம் வரை தள்ளுபடிகளை நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தற்போது இருக்கும் ஸ்டாக்குகளை விரைவாக விற்று தீர்க்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது கார் வாங்கும் மனநிலையில் இருப்பவர்கள் இந்த தள்ளுபடியை பயன்படுத்தி குறைந்த விலையில் காரை வாங்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனத்தின் கார்களுக்கு என மார்க்கெட்டில் மிகப்பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் இவர்கள் குறைந்த விலையில் ஹோண்டா கார்களை வாங்க இது சிறந்த தருணமாக இருக்கிறது. குறிப்பாக அமேஸ் காரின் வாங்கும் வாடிக்கையாளர்கள் தற்போது இருக்கும் மாடலை வாங்க விரும்பினால், இந்த நேரத்தில் வாங்கினால் குறைந்த விலையில் வாங்கி விட முடியும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 13, 2024, 7:00 [IST]
English summary
Honda discount november 2024 up to rs 1 22 lakh off amaze city elevate
மேலும்... #honda #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X