டேஷ்போர்டு ஃபுல்லா ஸ்கிரீன்தான்.. ஒன்னில்ல, ரெண்டில்ல 5 திரைகளை கொடுத்திருக்காங்க.. ஹோண்டா தயாரித்த கார்!
ஒரு காருக்குள்ள அதிகபட்சமாக எத்தனை திரைகள் இருக்கும்?.. குறிப்பாக, காரின் டேஷ்போர்டில் எத்தனை திரைகள் இருக்கும்?.. ஒன்று இல்ல ரெண்டு.. நாம் பார்த்த கார்கள் பலவற்றில் இத்தனை (இரண்டு) திரைகளே இடம் பெற்றிருக்கும். ஒன்று டிரைவருக்கான இன்ட்ஸ்ரூமென்ட் கன்சோலாகவும் மற்றொன்று தகவல்களையும், சிறப்பம்சங்களையும் கட்டுப்படுத்தும் வசதிக் கொண்ட திரையாகவும் இருக்கும்.
ஆனால், இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கும் இந்த கார் மாடலில், ஒன்றல்ல, இரண்டல்ல, ஒட்டுமொத்தமாக ஐந்து திரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. பயணிகளுக்கான பொழுதுபோக்கிற்காக அனைத்து இருக்கைகளிலும் திரைகள் வழங்கப்பட்டு இருக்குமோ.. என நினைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஐந்து திரைகளுமே டேஷ்போர்டிலேயே வழங்கப்பட்டு இருக்கின்றன.

முழு நீளத்திற்கு பகுதி பகுதியாக ஐந்து திரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு முன்பு வெளியாகிய வேறு எந்த கார் மாடலிலும் இத்தனை திரைகளை டேஷ்போர்டில் பார்க்க முடியாது. ஆகையால், உலகிலேயே அதிக திரைகளை டேஷ்போர்டில் கொண்ட கார் மாடலாக இந்த கார் மாடல் பார்க்கப்படுகின்றது.
இந்த கார் மாடலின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால், இது பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda) நிறுவனத்தின் கை வண்ணத்தால் தயாரிக்கப்பட்ட வாகனமாகும். சீன நிறுவனமான டாங்ஃபெங் (Dongfeng) உடன் இணைந்தே இந்த கார் மாடலை ஹோண்டா தயாரிக்கப்பட்டு இருக்கின்றது.

இதற்கு லிங்ஸி எல் (Lingxi L Electric Sedan) எனும் பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது. இது டாங்ஃபெங் நிறுவனத்திற்காக தயாரிக்கப்பட்ட எலெக்ட்ரிக் கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 520 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதற்காக 59.22 kWh திறன் கொண்ட லித்தியம் அயன் பாஸ்பேட் (lithium iron phosphate) பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற குவாங்ஸு மோட்டார் ஷோ (2023 Guangzhou Motor Show)-விலேயே லிங்ஸி எல் எலெக்ட்ரிக் கார் இந்த உலகிற்கு முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த கார் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. வெகுவிரைவில் இந்த கார் மாடலை டாங்ஃபெங் வெளியீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
ஆனால் என்ன விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. மேலும், இது சீன சந்தைக்கான எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். உலக நாடுகளுக்கு இது விற்பனைக்குக் கொண்டு வரப்படுமா என்பது தெரியவில்லை. அதேவேளையில், ஹோண்டா நிறுவனமும் இதன் உருவாக்கத்தில் பங்களித்திருப்பதால் இந்தியா போன்ற மற்ற நாடுகளில் ஹோண்டாவின் தயாரிப்பாக களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே லிங்ஸி எல் எலெக்ட்ரிக் கார் பற்றிய சுவாரஷ்யமான தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் அதிகபட்சமாக மணிக்கு 160 கிமீ பயணிக்கும் என கூறப்படுகின்றது. இதற்காக 215 எச்பி திறன் கொண்ட மின்சார மோட்டார்கள் லிங்ஸி எல் எலெக்ட்ரிக் காரின் முன் வீல்களில் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
இதன் டேஷ்போர்டில் ஐந்து திரைகள் வழங்கப்பட்டு இருந்ததாக கூறி இருந்தோம். அதில் ஒன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலாகவும், மற்றொன்று சென்ட்ரல் டச்ஸ்கிரீனாகவும், அடுத்தது முன்பக்க பயணிகளுக்கான டிஸ்ப்ளேவாகவும் செயல்படும். மேலும் உள்ள இரண்டு திரைகள் பின்புறத்தைக் கேமரா ஊடாக காண்பதற்கானவை ஆகும்.
இதுதவிர, லிங்ஸி எல் எலெக்ட்ரிக் காரில் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே (HUD)-வும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இன்றைய நவீன கார்களின் உட்புறங்களில் தொடுதிரைகள் அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த திரைகளின் வாயிலாக அதிகப்படியான பொத்தான்கள் பயன்படுத்தப்படுவது குறைக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், மிகவும் சிம்பிளான லுக்கை அறை உட்பகத்திற்கும் அது வழங்குகின்றது.
இதனால்தான் வாகன உற்பத்தியாளர்கள் இந்த திரைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் வழங்குகின்றனர். இந்த நிலையிலேயே மிகப் பெரிய முக்கியத்துவத்தை இந்த திரைகளுக்கு ஹோண்டா-டாங்ஃபெங்க நிறுவனங்கள் வழங்கி இருப்பது லிங்ஸி எல் எலெக்ட்ரிக் காரின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. இந்த கார் அதிக திரைகளைத் தாங்கிய எலெக்ட்ரிக் கார் மாடல் மட்டுமல்ல.
மிக அதிக சிறப்பு மற்றும் லக்சூரி அம்சங்களைத் தாங்கியதும்கூட. அந்தவகையில், அதிக சொகுசான இருக்கைகள், ஒயர்லெஸ் ஸ்மார்ட்ஃபோன் சார்ஜர் மற்றும் மிக சிறந்த ஆட்டோமேட்டிக் கிளைமேட் சிஸ்டம் என ஏகப்பட்ட அம்சங்கள் லிங்ஸி எல் எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: லிங்ஸி எல் செடான் எலெக்ட்ரிக் காரின் உட்புறத்தில் ஏராளமான திரைகள் கொடுக்கப்பட்டு இருப்பது சிலருக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இருப்பினும், நவீன ரசனைகளைக் கொண்டவர்களுக்கு இந்த கார் மிகவும் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப, ஆடம்பரம் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களின் கலவையை இந்த காரில் ஹோண்டா மற்றும் டாங்ஃபெங் வாரி வழங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








