சிட்டியை எல்லாம் தூக்கி தூரமா போடுங்க... இந்த ஹோண்டா காரைதான் இப்ப ஊரே வாங்கீட்டு இருக்கு... விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிக குறுகிய காலத்தில் வேகமாக பிரபலமடைந்த கார்களில் ஒன்று ஹோண்டா எலவேட் (Honda Elevate). மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார், கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாத தொடக்கத்தில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இந்த கார் விற்பனைக்கு வந்து சுமார் 6 மாதங்கள் மட்டுமே ஆகின்றன.

அதற்குள்ளாக ஹோண்டா எலவேட் கார் விற்பனையில் மிகப்பெரிய மைல்கல் (Milestone) ஒன்றை கடந்துள்ளது. 30 ஆயிரம் யூனிட்கள் விற்பனை என்பதுதான் அந்த மைல்கல் ஆகும். ஹோண்டா நிறுவனம் வெறும் 6 மாதங்களில் 30 ஆயிரம் எலவேட் கார்களை விற்பனை செய்திருப்பது மிகப்பெரிய விஷயமாக கருதப்படுகிறது.

Honda Elevate Mega Delivery

அதாவது சராசரியாக ஒரு மாதத்திற்கு 5 ஆயிரம் ஹோண்டா எலவேட் கார்கள் விற்பனையாகியுள்ளன. ஹோண்டா எலவேட் காரில் பொருத்தப்பட்டிருப்பது, 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 121 ஹெச்பி பவர் மற்றும் 145 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 7 ஸ்டெப் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வசதிகளை பொறுத்தவரையில் 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, 7 இன்ச் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவை ஹோண்டா எலவேட் காரின் மிக முக்கியமான அம்சங்களாக கருதப்படுகின்றன. இதுதவிர சிங்கிள்-பேன் சன்ரூஃப் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

Honda Elevate

மேலும் வயர்லெஸ் செல்போன் சார்ஜிங் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா போன்ற வசதிகளும், ஹோண்டா எலவேட் காரில் இடம்பெற்றுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக அடாஸ் (ADAS - Advanced Driver Assistance Systems) தொழில்நுட்ப வசதியையும் எலவேட் காரில் ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹோண்டா எலவேட் காரின் ஆரம்ப விலை 11.58 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 16.20 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) ஆகிய கார்களுக்கு, ஹோண்டா எலவேட் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் என்பது எங்கள் கருத்து.

இவை எல்லாம் தவிர, எம்ஜி அஸ்டர் (MG Astor), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun) மற்றும் ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq) ஆகிய கார்களை வாங்கலாம் என நினைப்பவர்களும், கூடவே ஹோண்டா எலவேட் காரையும் பரிசீலனை செய்யலாம். ஆனால் டீசல் இன்ஜின் ஆப்ஷன் இல்லை என்பது, ஹோண்டா எலவேட் காரின் ஒரு குறையாக கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 23, 2024, 16:19 [IST]
English summary
Honda elevate 30000 unit sales milestone all you need to know
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+