பொறுத்தது போதும்னு பொங்கி எழுகிறது ஹோண்டா! விஷயத்தை கேள்விபட்டதுக்கே கதிகலங்கி போன மாருதி சுஸுகி!
இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்களுக்கு (Electric Cars) நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இதில், ஹோண்டா (Honda) நிறுவனமும் ஒன்றாகும். ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை கூட விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. ஆனால் இந்திய சந்தையில் வெகு விரைவில் ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
ஹோண்டா எலவேட் இவி (Honda Elevate EV) எலெக்ட்ரிக் காரை பற்றிதான் நாங்கள் பேசி கொண்டுள்ளோம். இது தற்போது விற்பனையில் உள்ள ஹோண்டா எலவேட் ஐசி இன்ஜின் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக ஹோண்டா எலவேட் இவி களமிறங்கவுள்ளது.

அனேகமாக 2025ம் ஆண்டின் இறுதியிலோ அல்லது 2026ம் ஆண்டின் தொடக்கத்திலோ ஹோண்டா எலவேட் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த எலெக்ட்ரிக் காரில், 40-50 kWh திறன் கொண்ட பேட்டரி தொகுப்பு வழங்கபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் டிரைவிங் ரேஞ்ச் 400 கிலோ மீட்டர்களுக்கும் மேல் இருக்கலாம். ஒட்டுமொத்த டிசைன் என்று பார்த்தால், ஹோண்டா எலவேட் ஐசி இன்ஜின் காரை போலவேதான், ஹோண்டா எலவேட் எலெக்ட்ரிக் வெர்ஷனும் இருக்கும். ஆனால் ஐசி இன்ஜின் வெர்ஷனிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் நிறைய டிசைன் மாற்றங்களை நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம்.

இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள டாடா கர்வ் இவி (Tata Curvv EV) எலெக்ட்ரிக் காருக்கு இது போட்டியாக இருக்கும். அத்துடன் 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ள மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX) மற்றும் ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுக்கும் இது விற்பனையில் சவால் அளிக்கும்.
ராஜஸ்தான் மாநிலம் டபுகெராவில் உள்ள ஹோண்டா நிறுவனத்தின் தொழிற்சாலையில், ஹோண்டா எலவேட் இவி எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இங்கிருந்து சர்வதேச சந்தைகளுக்கும் ஹோண்டா எலவேட் இவி எலெக்ட்ரிக் கார் ஏற்றுமதி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹோண்டா நிறுவனம் எலவேட் இவி எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்வதுடன் நிற்க போவதில்லை. தொடர்ச்சியாக பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. வரும் 2030ம் ஆண்டிற்குள் ஹோண்டா நிறுவனம் மொத்தம் 5 எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோண்டா நிறுவனம் விலையை சரியாக நிர்ணயம் செய்தால், எலவேட் இவி எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அனேகமாக ஹோண்டா எலவேட் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 17-20 லட்ச ரூபாய்க்குள் இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








