இந்தியான்னா சும்மாவா? ஜப்பான்ல இருந்து வந்த கம்பெனி இந்தியாவுல தயாரித்த காரை இப்ப ஜப்பானுக்கே அனுப்புறாங்க!

ஹோண்டா எலவேட் என்ற காரை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்து டபிள்யூ-ஆர்வி என்ற பெயரில் அந்நாட்டில் விற்பனை செய்ய தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் தயாரிக்கப்படும் கார் ஹோண்டா நிறுவனத்தின் தாய் நாடான ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜப்பான் நாட்டை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம் தான் ஹோண்டா இந்நிறுவனம் இந்தியாவில் ஆலைகளை அமைத்து கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றது. ஹோண்டா நிறுவனத்தின் கார்களுக்கு என்று மக்கள் மத்தியில் தனி மவுசு இருக்கிறது. ஹோண்டா நிறுவனத்தின் கார்களை வாங்க அதன் ரசிகர்கள் பலர் இன்றளவும் இந்தியாவில் அதிக நிகையில் இருக்கிறார்கள்.

honda elevate export

இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் கடந்த ஆண்டு எலவேட் என்ற காரை முதன்முதலாக அறிமுகப்படுத்தியது. இது ஒரு எஸ்யூவி ரக காராகும். இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் தற்போது இந்த காரை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளை செய்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஹோண்டா இந்த காரை ஜப்பானிற்கே இந்தியாவில் இருந்துதான் ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.

தற்போது அதை உறுதி செய்யும் வகையில் ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எலவேட் காரை என்ற பெயரில் ஜப்பானில் இறக்குமதி செய்து அங்கு விற்பனை செய்வதற்காக அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஹோண்டா எலவேட் காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இந்தியாவில் கிடைத்தது போல ஜப்பான் நாட்டிலும் இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற நோக்கத்தில் இந்த முயற்சியை அந்நிறுவனம் கையில் எடுத்துள்ளது.

honda elevate export

ஹோண்டா நிறுவனம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் முதன்முதலாக எலவேட் என்ற காரை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்த கார் அறிமுகமானது முதல் தற்போது வரை முப்பதாயிரம் கார்கள் விற்பனையாகியுள்ளன. வெறும் ஆறு மாதத்தில் மிகச் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளதால் சர்வதேச அரங்கிற்கும் இந்த காரை கொண்டு செல்ல அதன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதற்காக இந்தியாவில் தயாரிக்கப்படும் எலவேட் என்ற காரை அந்நிறுவனம் ஜப்பானில் டபிள்யூ-ஆர்வி என்ற பெயரில் தயாரித்து ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது. இப்படியாக ஜப்பான் நாட்டிற்கு செல்லும் இந்த கார் அங்கு அதிகாரப்பூர்வமாக தற்போது விற்பனைக்கு அறிமுகமாகி உள்ளது. இந்தியாவில் உள்ள தயாரிப்புத் திறனை முழுமையாக பயன்படுத்துவதற்காக இந்த முயற்சியை ஹோண்டா நிறுவனம் தற்போது செய்து வருகிறது.

honda elevate export

இந்த கார் ஜப்பான் மட்டுமல்லாமல் துருக்கி, மெக்சிகோ, நேபால், பூட்டான், தென்னாப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த காரை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டு வருகிறது. விரைவில் இந்த கார் உலகில் பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவில் தயார் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவிற்கு மிகப்பெரிய கௌரவமான விஷயமாக உள்ளது.

இந்தியாவில் விற்பனையாகவும் ஹோண்டா எலவேட் காரை பொருத்தவரை 1.5 லிட்டர் 4 சிலிண்டர் வீடெக் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 121 பிஎஸ் பவரையும் 145 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீட் மேனுவல் அல்லது சிவிடி கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

honda elevate export

ஹோண்டா நிறுவனம் இந்த காரை ஹோண்டா சிட்டி காரின் 5-ம் தலைமுறைக்காக தயாரிக்கப்பட்ட அதே பிளாட்பார்மில் தான் தற்போது தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த காரின் மைலேஜ் பொறுத்தவரை ஒரு லிட்டருக்கு 16 முதல் 17 கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரில் உள்ள அம்சங்களை பொறுத்தவரை பேஸ் வேரியண்டில் பல்வேறு அம்சங்கள் உள்ளன.

எஸ்வி வேரியன்டை பொறுத்தவரை இரண்டு ஏர்பேக்கில் 16 இன்ச் ஸ்டீல் வீல், எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி லைட், புஷ் பட்டன் இன்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி, பேஜ் நிற உட்புற வடிவமைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இருக்கின்றன. அடுத்த வேரியண்டான வீ வேரியன்டை பொருத்தவரை எஸ்பி வேரியன்டை விட சற்று பிரிமியம் அம்சங்கள் கொண்டதாக இருக்கிறது.

இதில் கூடுதலாக 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, கனெக்டெட் கார் தொழில்நுட்பம், நான்கு ஸ்பீக்கர் கொண்ட ஆடியோ சிஸ்டம், மல்டிஃபங்ஷன் ஸ்டேரிங் வீல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. இந்த வீ வேரியன்டில் சிவிடி கியர் பாக்ஸ் ஆப்ஷனையும் பெற முடியும்.

ஹோண்டா விஎக்ஸ் வேரியண்ட் பொறுத்தவரை 6 ஸ்பீக்கர், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் அம்சங்கள், எல்இடி ஃபாக் லைட், சிங்கிள் பேன் சன்ரூஃப் மற்றும் 17 இன்ச்அலாய் வீல் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. இசட் எக்ஸ் வேரியன்ட் தான் டாப் வேரியன்ட் காராக இருக்கிறது. இந்த கார் டூயல் டோன் கலரில் விற்பனைக்கு வருகிறது.

இதிலுள்ள அம்சங்களை பொருத்தவரை 10.25 புளோட்டிங் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், பிரவுன் லெதர் சீட்டுகள், ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம் தொழில்நுட்பம், 8 ஸ்பீக்கர் கொண்ட மியூசிக் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள் இருக்கிறது. இந்தியாவில் இந்த காருக்கு நல்ல மவுசு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது ஜப்பானிலும் இந்த கார் டபிள்யூ ஆர்வி என்ற பெயரில் இறக்குமதியானால் அங்கும் நல்ல விற்பனையை பெற வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா தற்போது ஆட்டோமொபைல் விற்பனை சந்தையில் மூன்றாவது பெரிய நாடாக மாறி உள்ள நிலையில், தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களுக்கு உலக அளவில் நல்ல டிமாண்ட் ஏற்பட்டு வருகிறது. இந்தியா தற்போது ஆட்டோமொபைல் தயாரிப்பு மையமாக மாறி உலக நாடுகளுக்கு வாகனங்களை சப்ளை செய்து வரும் நாடாக மாறி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, March 22, 2024, 18:16 [IST]
English summary
Honda elevate export from india launched in japan as wr v full details
மேலும்... #ஹோண்டா #honda
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X