இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த கார் தான் வேணும்னு அடம் பிடிக்கும் வெளிநாட்டு மக்கள்! என்ன கார் தெரியுமா?
ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்யும் ஒரே எஸ்யூவி கார் என்றால் அதை எலவேட் என்ற எஸ்யூவி கார்தான். இந்த காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த கார் அறிமுகமான போதே பலர் இந்த காரை விரும்பி வாங்கினார்கள். இந்நிலையில் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த காருக்கு இந்தியாவை விட வெளிநாடுகளில் தான் அதிக வரவேற்பு இருக்கிறது. இப்படியாக இந்த நிதியாண்டில் இந்நிறுவனம் எவ்வளவு எலவேட் கார்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்துள்ளது என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹோண்டா நிறுவனத்தின் எலவேட் காருக்கு இந்தியாவை விட வெளிநாடுகளில் தான் அதிகம் மார்க்கெட் இருக்கிறது. இந்தியாவில் இதே செக்மெண்டில் ஹூண்டாய் கிரெக்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆகிய கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த கார்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி அதிக எண்ணிக்கையில் எலவேட் கார்தான் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகியுள்ளது.

இந்த நிதியாண்டு அதாவது கடந்த ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரை மாதம் சராசரியாக 1812 கார்கள் ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் விற்பனையாகி உள்ளன, ஆனால் ஏற்றுமதியை பொருத்தவரை மாதம் சராசரியாக 3553 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளது. இது மிகப்பெரிய வித்தியாசமாக இருக்கிறது. இந்தியாவை விட வெளிநாடுகளில் தான் இந்த காருக்கு மிகப்பெரிய மவுசு ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாத ஏற்றுமதி விபரங்களை பார்க்கும்போதே ஹூண்டாய் நிறுவனத்தின் கார் 782 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. கியா நிறுவனத்தின் செல்டோஸ் கார் 1764 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளன. ஃபோக்ஸ்வேன் நிறுவனத்தின் டைகுன் கார் 5466 கார்கள் ஏற்றுமதியாகி உள்ளன. இருப்பதிலேயே அதிகமாக ஹோண்டா நிறுவனத்தின் எழவேட் கார்தான் 10,659 கார்கள் ஏற்றுமதியாகியுள்ளது.

இந்தியாவின் தயாரிக்கப்பட்டு வெளிநாட்டில் விற்பனையாகும் கார்களில் அதிகமாக விற்பனையாகும் கார் எலெக்ட்ரிக் கார்தான். அதேநேரம் இந்தியாவில் விற்பனையாகும் எண்ணிக்கையை விட வெளிநாடுகளில் அதிகமாக விற்பனையாவது மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கிறது. மற்ற கார்களை பார்க்கும்போது இந்திய விற்பனை அதிகமாக இருக்கும். அதைவிட ஏற்றுமதி தான் குறைவாக இருக்கும். இந்த கார் தலைகீழாக இருக்கிறது.
எலவேட் காரை பொறுத்தவரை 1.5 லிட்டர் 4 சிலிண்டர் விடெக் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 121 பிஎஸ் பவரையும் 145 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விற்பனையாகி வருகிறது. இந்த கார் ஏற்கனவே ஹோண்டா நிறுவனம் தயாரிக்கும் 5 தலைமுறை சிட்டி கார் தயாராகும் அதே பிளாட்பார்மில் தான் உருவாக்கப்படுகிறது.

இந்த காரின் சிறப்பம்சமே இதன் மைலேஜ் தான் என்னதான் இது பெரிய காராக இருந்தாலும், இந்த கார் லிட்டருக்கு 16 முதல் 17 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஹோண்டா எலவேட் கார் மற்றும் 10 விதமான கலர் ஆப்ஷன்களில் விற்பனையாகி வருகிறது. இதில் 7 விதமான கலர் ஆப்ஷன்கள் சிங்கிள் டோன் கலர் ஆப்ஷன்களாகவும் மூன்று விதமான டூயல் டோன் ஆப்ஷன்களும் உள்ளன.
இந்த கார் 4விதமான வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. எஸ்வி, வி, வி எக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகிய வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது. ஒவ்வொரு வேரியண்ட்டிற்கும் காரில் உள்ள அம்சங்கள் மாறுபடுகிறது. எஸ்வி வேரியன்டை விட கூடுதலாக டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே, கனெக்டெட் கார் தொழில்நுட்பம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா சிவிடி கியர் ஆப்ஷன் ஆகிய காரில் இருக்கிறது.
விஎக்ஸ் வேரியன்ட் காரை பொறுத்தவரை உள்ள அனைத்து அம்சங்களும் இருக்கிறது. கூடுதலாக 6 ஸ்பீக்கர்கள் 7 இன்ச் கொண்ட செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், எல்இடி லைட்டுகள், சிங்கிள் பேன் சன்ரூஃப், 17 இன்ச் கொண்ட அலய் வீல்கள் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது. அதில் அடாஸ் தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனத்தின் எலவேட் கார் இந்தியாவிலேயே பிரபலமான காராக இருக்கிறது. இந்த கார் முற்றிலுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட காராக இருக்கிறது. இந்த காருக்கு வெளிநாட்டில் வரவேற்பு கிடைப்பது நிச்சயம் பெரிய விஷயம் தான். இதனால் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும். இந்தியாவிலும் இந்த காரின் விற்பனையை அதிகரிக்க நிறுவனம் முயற்சி செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications









